search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேசி வேணுகோபால்"

    • என்டிஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார்.
    • இந்தியா கூட்டணி கே. சுரேஷை நிறுத்தியுள்ளது.

    மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. 230-க்கும் அதிகமான இடங்களை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி பெற்றுள்ளதால் எந்த விவகாரத்தையும் ஒருமனதாக தேர்வு செய்ய ஏற்றுக் கொள்ளாத நிலையில் உள்ளது.

    நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. சபாநாயகர் பதவிக்கு என்டிஏ கூடட்ணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு கொடுக்க இந்தியா கூட்டணியிடம் என்டிஏ கேட்டுக்கொண்டது. ஆதரவு கொடுக்க வேண்டுமென்றால் துணை சபாநாயகர் பதவி வேண்டும் எனத் தெரிவித்தது. ஆனால் பாஜக துணை சபாநாயகர் பதவியை கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி எதிர்வேட்பாளாராக கே. சுரேஷ் என்பவரை நிறுத்தியுள்ளது.

    இதனால் தேர்தல் நடைபெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி கேசி வேணுகோபால் கூறியதாவது:-

    நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துணை சபாநாயகர் பதவி தர தயராக இருந்தால், நாங்கள் என்டிஏ வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம். இரு அவைகளும சமூகமாக நடைபெற பிரதமர் மோடி நேற்று ஒருமித்த கருத்து குறித்து பேசினார்.

    அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யும் சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறோம். அவர்களும் எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

    சபாநாயகர் அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படும். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நாங்கள் துணை சபாநாயகர் பதவியை 10 ஆண்டுகளுக்கு என்டிஏ-வுக்கு வழங்கினோம். நேற்று ராஜ்நாத் சிங் மல்லிகார்ஜூனாவிடம் பேசினார். அப்போது கார்கே, உங்களுடைய வேட்பாளரை ஆதரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் துணை சபாநாயகர் பதவியை விரும்புகிறோம் என்றார். அப்போது ராஜ்நாத் சிங், மோடியிடம் ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தார்.

    இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப் புறங்களில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்தது. ஆனால் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்றார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவதற்காக நிதிஷ் குமார் பிரதமர் பதவி கேட்டார் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறியுள்ளது குறித்து கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த கே சி வேணுகோபால், இதுதொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என காரிய கமிட்டி விடுத்த வேண்டுகோளை ஏற்ற ராகுல் காந்தி, விரைவில் பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது. இந்தப் பட்டியலில் 14 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும், சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். திருச்சூர் தொகுதியில் வி.முரளீதரன் போட்டியிட உள்ளார்.

    இந்நிலையில், கேரள மாநிலத்தின் ஆலப்புழா தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்று தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.சி.வேணுகோபால் இன்று ரோடு ஷோவில் கலந்துகொண்டார். தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி வேனில் நின்றபடி பயணம் செய்து அவர் வாக்கு சேகரித்தார்.

    • நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
    • நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது

    அசாமில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடர்பாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, "காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்க உள்ள யாத்திரை அரசியல் காரணங்களுக்காக அல்ல. நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. நாட்டில் வெறுப்புக்குப் பதிலாக அன்பு பரவ வேண்டும் " என்பதை இந்த யாத்திரையில் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், வன்முறை காரணமாக மணிப்பூர் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். மணிப்பூர் மக்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை நாட்டுக்கு சொல்லவே யாத்திரையை மணிப்பூரில் இருந்து தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

    நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு குறித்தும், நமது நாட்டின் விவசாயிகள் சந்தித்து வரும் பேரழிவு குறித்தும் இந்த யாத்திரையில் நாங்கள் பேசு இருக்கிறோம். இளைஞர்களுக்கு நீதி வேண்டும், பெண்களுக்கு நீதி வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு நீதி வேண்டும். இதை வலியுறுத்தவே இந்த யாத்திரையை தொடங்குகிறோம். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான மிகப் பெரிய மேடையாக இந்த யாத்திரை திகழும் என்றார்.

    நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கே.சி வேணுகோபால், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு அனுமதி கோரி மணிப்பூர் தலைமைச் செயலருக்கு மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விண்ணப்பம் கொடுத்த நிலையில், அனுமதியை தங்களால் வழங்க முடியாது என்றும், டெல்லியில் இருந்து அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மணிப்பூர் அரசு கூறுவதாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் குற்றம் சாட்டுகிறார். ஒரு மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடத்த விரும்பினால் அதற்கு டெல்லி அனுமதி வழங்க வேண்டுமா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    ×