என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்கள் ஜனநாயக கட்சி"
- 2008-ம் ஆண்டு நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு தொடர்பு இருக்கிறது.
- மதானி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி (வயது58). கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர், 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருக்கிறது. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மூச்சு விட சிரமப்படுவதால், அவருக்கு வென்டிலேட்டர் உதவுயுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
- மெகபூபா முப்தி கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுகிறது.
- பா.ஜ.க.வின் 'சி' டீமாக மெகபூபா கட்சி இணைந்துள்ளது என்றார் உமர் அப்துல்லா.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாளை மறுதினம் நடைபெற உள்ள 2வது கட்ட தேர்தலில் மேலும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசும் அங்கு இணைந்து போட்டியிடுகின்றன. இதில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.
இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் முஷ்தாக் பஹாரி பிரசாரத்தில் பேசுகையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு பஹாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பா.ஜ.க வேட்பாளரை விடுத்து அவர் வேறு கட்சிக்கு ஆதரவளித்தது விவாதப் பொருளானது.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இங்கே பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும். நாடு முழுவதும் விஷத்தைப் பரப்பும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், ஜம்மு காஷ்மீரின் 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும்.
மற்ற கட்சிகள் எல்லாம் 'ஏ' டீம், 'பி' டீம் என ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைந்துள்ளன. அந்த வகையில் தற்போது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் பா.ஜ.க.வில் 'சி' டீமாக இணைந்துள்ளது என தெரிவித்தார்.
- கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள் என்றார் மெகபூபா முப்தி.
ஸ்ரீநகர்:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் சேருகிறார்கள், அதன்பின் அவர்களுக்கு எதிராக எல்லாமே அழிக்கப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பாவிகள்.
பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள்.
தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க. என தெரிவித்தார்.
- பூடான் பாராளுமன்ற தேர்தலின் இறுதிச்சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது.
- மொத்தமுள்ள 47 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி 30 இடங்களை கைப்பற்றியது.
திம்பு:
தெற்கு ஆசிய நாடான பூடானில் கடந்த 2008-ம் ஆண்டு மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஜனநாயக ஆட்சி அமலுக்கு வந்தது. தற்போது அங்கு 4-வது பாராளுமன்ற தேர்தல் நடந்தது.
மொத்தம் 47 தொகுதிகள் கொண்ட பூடான் பாராளுமன்ற தேர்தலின் முதன்மை சுற்று தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் பூடான் டெண்ட்ரல் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 94 வேட்பாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இதற்கிடையே, நேற்று இறுதிச்சுற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.இதில் முன்னாள் பிரதமர் டிசிரிங் டாப்கேயின் மக்கள் ஜனநாயக கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
மக்கள் ஜனநாயக கட்சி 47 தொகுதிகளில் 30 இடங்களைக் கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூடான் டெண்ட்ரல் கட்சி 17 இடங்களைப் பிடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பூடான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.
மக்கள் ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றுள்ளதால் 58 வயதான டிசிரிங் டாப்கே 2-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்நிலையில், பூடானில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள டிசிரிங் டாப்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்