என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபி அரசு"

    • காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்.
    • ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    உ.பி மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

    அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார். 

    மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

    மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

    • மாசடைவதிலிருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டம்.
    • விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    டெல்லியில் அபாய அளவை கடந்து காற்று மாசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் காற்று மாசுவால் சூழ்ந்து காணப்படுகிறது.

    காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல், டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த வாகனக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆக்ராவில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் இன்று வந்தது.

    அப்போது, தாஜ்மகால் வழக்கில், மாசடைவதிலிருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    • ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளன. விபத்துகளை குறைக்க சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதும், ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதில் பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், ஹெல்மெட் அணியாததால் இந்த உயிரிழப்புகள் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.

    எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

    அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கொள்கை ஏற்கனவே கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அவ்வப்போது கடைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. எனவே இந்த கொள்கையை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த விவகாரத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் போலீஸ் மற்றும் ஆர்.டி.ஓ.க்கள் இணைந்து இந்த கொள்கை வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    • கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
    • துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது.

    அப்போது மகா கும்பமேளா நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

    கும்பமேளாவில் உயிர் இழந்தவர்களுக்காக 2 நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளி விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    கும்பமேளாவில் ஏற்பட்ட இறப்புகள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை, மருந்துகள், டாக்டர்கள், உணவு, தண்ணீர், போக்குவரத்து வசதிகள் குறித்த புள்ளி விவரங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கும்பமேளா பேரிடர் மேலாண்மை மற்றும் தொலைந்து போன மையத்தின் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

    இந்த துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையை மறைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரட்டை என்ஜின் அரசாங்கத்திடம் நாங்கள் கேட்கிறோம். எந்த குற்றமும் இல்லை என்றால் புள்ளி விவரங்கள் மறைக்கப்பட்டது ஏன்? அழிக்கப்பட்டது ஏன்?

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

    • மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது.
    • கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.

    லக்னோ:

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கும்பமேளா முடிவில் 2,000 மூத்த குடிமக்கள் புனித நீராடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    சமூக நலத்துறை, தேசிய மருத்துவக் கழகம் மற்றும் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம் உடன் இணைந்து முக்கிய ஆதரவை வழங்கி வருகிறது.

    கும்பமேளாவில் முதன்முறையாக யோகி ஆதித்யநாத் அரசு முதியோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு முகாமை தொடங்கியுள்ளது.

    சமூக நலத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் தேவைப்படுபவர்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் உதவி சாதனங்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த முன்முயற்சியின் மூலம் முதியோர், குறிப்பாக அரசால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதையும், கும்பமேளாவின் தெய்வீக உணர்வை அனுபவிப்பதையும் உறுதி செய்வதில் அரசு முன்னேற்றம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    ×