என் மலர்
நீங்கள் தேடியது "ஹசில்வுட்"
- வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடர் அடிலெய்டுவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. மெக்கன்சி அரை சதம் அடித்தார். ஷமர் ஜோசப் 36 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய சார்பில் கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து 119 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டும், ரோச், கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 35.2 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், லயான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 6.4 ஓவரில் இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது நாளில் உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து வீரர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
- இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது.
நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் முழுமையான ஒய்ட்வாஷ் தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.
சொந்த மண்ணிலேயே தோற்ற இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் வெல்லுமா என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்வி தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பியது போல் இருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட் வீரர் தெரிவித்துள்ளார்.
இது அவர் கூறியதாவது:-
அது தூங்கும் ராட்சசனை எழுப்பக்கூடும். 3 -0 என்ற கணக்கில் வெல்வதை விட 3 - 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை பெற்றது நல்லது. அதன் காரணமாக அவர்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் அடிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் இங்கே ஏற்கனவே விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.
அதைப்பற்றி நான் அதிகம் படிக்க விரும்பவில்லை. இந்தியா சந்தித்த தோல்வி எங்களுக்கு நல்லது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது. உண்மையில் அங்கே ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளனர்.
இந்தியா தோல்வியை சந்தித்து இங்கே வருவதால் எங்களுக்கு எதிரான தொடர் பெரியதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போட்டிகள் ஆஷஸ் தொடருக்கு நிகராக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். டிவி ரேட்டிங்ஸ் பெரியதாக இருக்கும். எனவே இந்த தொடர் மிகவும் பெரியதாக இருக்கும் என்று கூறினார்.
- ஹசில்வுட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறினார்.
- இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிஸ்பேன்:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா தரப்பில் கேஎல் ராகுல், ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹசில்வுட் இன்றைய ஆட்டத்தில் இருந்து பாதியில் விலகினார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஹசில்வுட் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.