search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள்"

    • முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை நடைபெற உள்ளது
    • 2022 டிசம்பரில் பாகிஸ்தானை 3-0 என இங்கிலாந்து வென்றது

    இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.

    இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.

    முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

    பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்:

    சச்சின் டெண்டுல்கர்

    2535 ரன்கள் - 32 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 51.73 சராசரி

    ஜோ ரூட்

    2526 ரன்கள் - 25 ஆட்டங்கள் - 9 நூறுகள் - 63.15 சராசரி

    சுனில் கவாஸ்கர்

    2483 ரன்கள் - 38 ஆட்டங்கள் - 4 நூறுகள் - 38.20 சராசரி

    அலஸ்டர் குக்

    2431 ரன்கள் - 30 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 47.66 சராசரி

    விராட் கோலி

    1991 ரன்கள் - 28 ஆட்டங்கள் - 5 நூறுகள் - 42.36 சராசரி

    கடந்த 2022 டிசம்பர் மாதம், பாகிஸ்தானுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.

    ×