என் மலர்
நீங்கள் தேடியது "க்ளென் மேக்ஸ்வெல்"
- 2012ல் விளையாட துவங்கிய மேக்ஸ்வெல், அனைத்து வடிவத்திலும் சிறப்பாக ஆடினார்
- ஐசிசி உலக கோப்பை தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர், 35 வயதான க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell).
2012ல் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் மேக்ஸ்வெல்.
கடந்த 2023 நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்.
2022ல் கால்முறிவின் காரணமாக 3 மாதங்களுக்கும் மேல் விளையாடாமல் இருந்தார்.
சென்ற வருடம் க்ளென் தொடர்ச்சியாக பல காயங்களை சந்தித்தார். அகமதாபாத் நகரில் கீழே விழுந்ததில் ரத்த கட்டு ஏற்பட்டது.
ஆனாலும், உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இறுதி ரன்களை எடுத்தவர் க்ளென் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தினார். பிறகு முன்னாள் ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் ப்ரெட் லீ நடத்தி வரும் "சிக்ஸ் அண்ட் அவுட்" எனும் இசைக்குழுவின் கச்சேரியை ரசித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் ராயல் அடிலெய்ட் (Royal Adelaide) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதிக மது அருந்தியதால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கண்டறிய ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரெலியா (Cricket Australia), இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
- ஐபிஎல் மெகா ஏலம் இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறுகிறது.
- ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் அணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகின்றனர்
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் அணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு போன் செய்து, தக்க வைப்பது குறித்து பேசினார்கள். நாங்கள் அரை மணி நேரம் பேசினோம். ஒவ்வொரு அணியும் இவ்வாறு செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். இது அணிக்கும் வீரர்களுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும். நான் மீண்டும் ஆர்சிபிக்கு வந்தால் எனக்கு சந்தோஷம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.