என் மலர்
நீங்கள் தேடியது "ஓய்வு அறிவிப்பு"
- நான் ஓய்வு பெறுவதாக இன்னும் அறிவிக்கவில்லை.
- ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி தவறானது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மேரிகோம் டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய பிறகு எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 2022-ம் ஆண்டு காமன்வெல்த் தகுதி போட்டிக்கு முன்பாக கால் முட்டியில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்த அவர் களம் திரும்பவில்லை.
இந்த நிலையில் 41 வயதான மேரிகோம் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று செய்தி வெளியானது. 40 வயதுக்கு மேல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இதனை மேரிகோம் மறுத்துள்ளார்.
இது குறித்து மேரிகோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நான் ஓய்வு பெறுவதாக இன்னும் அறிவிக்கவில்லை. ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி தவறானது. திப்ருகாரில் (அசாம்) கடந்த புதன்கிழமை நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்டு சிறுவர்களை ஊக்கப்படுத்தினேன். நான் இன்னும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் தான் இருக்கிறேன். ஆனால் வயது கட்டுப்பாடு காரணமாக என்னால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. ஆனால் என்னால் விளையாட்டை தொடர முடியும். நான் இன்னும் எனது உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறேன். ஓய்வு பெற முடிவு செய்யும் போது முறைப்படி அறிவிப்பேன்' என்றார்.
- அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளது.
- புதிய முயற்சியிலும் அஸ்வின் மகத்தான வெற்றியை பெற வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஸ்வினுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளித்துள்ளது. அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளது.
புதிய முயற்சியிலும் அஸ்வின் மகத்தான வெற்றியை பெற வேண்டும். ஒவ்வொரு முயற்சியிலும் புத்திசாலித்தனத்தை வழங்குங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2016-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் ரிஷி தவானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
- ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.
தரம்சாலா:
தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷி தவான் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். 34 வயதான நிலையில் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
வலது கை வேகப் பந்துவீச்சாளராகவும், வலது கை பேட்ஸ்மேன் ஆகவும் அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இமாச்சலப் பிரதேச அணிக்காக ரிஷி தவான் உள்ளூர் போட்டிகளில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அதிக விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இதையடுத்து 2016-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் ரிஷி தவானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ரிஷி தவான் மொத்தம் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். மூன்று ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும், ஒரு டி20 போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார்.

இந்த நான்கு போட்டிகளில் மொத்தமாக 13 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதன் பின் ரிஷி தவானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இடம் பெற்று உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் அவருக்கு அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் ஒட்டுமொத்தமாக 25 ஐபிஎல் விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். பேட்டிங்கில் பெரிய அளவுக்கு ரன் குவிக்கவில்லை. தற்போது உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிவு செய்து இருக்கிறார்.
- சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு.
- சிறந்த வீரர்களுடன் விளையாடியதை என்றும் மறக்க மாட்டேன்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான மார்ட்டின் கப்தில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. எனது நாடுக்காக 367 போட்டிகள் விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டம் நிறைந்தவனாக உணர்கிறேன். வெள்ளி நிறத்திலான பெரணி செடி பதிந்த நியூசிலாந்து அணியின் சீறுடையில் சிறந்த வீரர்களுடன் விளையாடியதை என்றும் மறக்க மாட்டேன்.
எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி. எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றி. குறிப்பாக எனது யு-19 பயிற்சியாளர் மார்க் ஓ'டொன்னெலுக்கு எனது சிறப்பான நன்றி.
எனது மனைவி லாரா, அழகான குழந்தைகள் ஹார்லி, டெடி அவர்களுக்கும் நன்றி. எனக்காகவும் நமது குடும்பத்துக்காகவும் தியாகம் செய்த மனைவி லாராவுக்கு மிக்க நன்றி. என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எனக்கு இருந்த மிகப்பெரிய ஆதரவாளர் நீதான். நான் அதற்காக கடமைப்பட்டுள்ளேன். அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி.
38 வயதாகும் மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து அணிக்காக 198 ஒருநாள் போட்டிகள், 122 டி20 போட்டிகள், 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 23 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்களும் டி20 போட்டிகளில் 3,531 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.