search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் துணுக்குகள்"

    • கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும்.
    • மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம்.

    சப்பாத்தி மாவுடன் சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கையும், சிறிதளவு பாலையும் சேர்த்து பிசைந்து தயார் செய்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    ஒரு துணியில் ஒருஸ்பூன் அளவு உப்பு முடிந்து மாவில் போட்டுவைத்திருந்தால் மாவில் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

    கொத்தமல்லி தழை, புதினா வாடி விட்டால் அவற்றை தூக்கி எறிந்துவிடாமல் மிக்ஸியில் அரைத்துப்பொடி செய்து காய்கறி வறுவலில் தூவி இறக்கினால் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும். இலைப்பாகத்தை ஈரத்துணியில் மூடி வைக்கலாம். அப்படி செய்தால் கீரைக்கட்டு வாடாமல் இருக்கும்.

    சுண்டல் கெட்டுப்போகாமல் இருக்க கொப்பரைத்தேங்காயைத் துருவி, வதக்கிப் போடவும்.

    சாதம் குழைந்து போய் விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அடுப்பை சிறு தீயில் சிறிது நேரம் வைத்துவிட்டு வடித்தால் சாதம் குழைவாக இல்லாமல் கொஞ்சம் பதமாக இருக்கும்.

    மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம். மீன் தண்ணீருக்குள் மூழ்கினால் கெடவில்லை என்பதை அறியலாம்.

    உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன்பு உருளைக்கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவ வேண்டும். பின்பு மோரில் சிறிதுநேரம் ஊற விட்டு வடித்து எடுத்து பொரித்தால் சிப்ஸ் வெள்ளையாக இருக்கும்.

    தக்காளிப் பழங்களை சிறிது உப்பு கரைத்த நீரில் போட்டு வையுங்கள். பழம் கெடாது, சுவையும் மாறாது.

    • வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
    • பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம்.

    * தேங்காய்க்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்துச் சமைத்தால் குருமா புதுமையான சுவையுடன் இருக்கும்.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    * புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

    * பெருங்காயம் கட்டியாகி விட்டதா? அதில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வையுங்கள். இளகி விடும்.

    * தோசை மாவு சற்று புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் தயார் செய்யலாம்.

    * சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காதீர்கள். அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.

     

    * பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம். அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.

    * ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியல் மிகவும் ருசியாக இருக்கும்.

    * இட்லிக்கு சட்னி செய்யும்போது பொட்டுக்கடலை, தேங்காயுடன் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் ருசியாக இருக்கும்.

    * ரவா கேசரி, அல்வா போன்ற இனிப்பு வகைகள் செய்யும்போது கடைசியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பு திகட்டாது. சுவையாக இருக்கும்.

    • பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • பருப்பு வேகவைக்கும்போது, விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    ஆட்டுக்குடல் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால், ஆட்டுக்குடல் சீக்கிரம் வெந்து விடும்.

    பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    முட்டை ஆம்லெட் செய்யும்போது, காரம் சாப்பிடாதவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து குடை மிளகாயை சேர்த்தால், சுவை கூடுதலாகும்.

    ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளுவையும் சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.

    சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது, அதில் விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    புளிச்சோறு, ரசம், வத்தக்குழம்பு போன்ற புளி சம்பந்தப்பட்ட உணவு தயார் செய்யும்போது அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவை கூடும்.

    புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு, நிலக்கடலையை வறுத்துப் போடாமல், எண்ணெய்யில் பொரித்துப்போட்டால், மொறு மொறு என்று இருக்கும்.

    பீன்ஸ், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால், ருசியாக இருக்கும்.

    பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் செய்யும்போது, தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சுவை கூடும்.

    குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

    • கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.
    • வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.

    * அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கருகி போனால் உப்பு நீரில் ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் அழுத்தி தேய்க்க சுத்தமாகி விடும்.

    * தயிர் புளித்துப்போனால் அதில் 4 டம்ளர் நீர் ஊற்றி அரைமணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட்டால் தயிர் புளிக்காது.

    * பாட்டில் மூடியை திறக்க முடியாமல் போனால் ஈரத்துணியால் மூடியை இறுகப்பற்றி கொண்டு திருகினால் சுலபமாக கழன்று விடும்.

    * கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.

    * மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.

    * சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.

    * மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காயை இட்லி தட்டில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து, ஊறுகாய் போட்டால் விரைவாக ஊறும், சத்துக்களும் வீணாகாது.

    * லேசான தீக்காயம் என்றால் ஒரு வாழைப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி சூடுபட்ட இடத்தில் வைத்தால் குளுகுளுவென்று இருக்கும். அரிப்பு ஏற்படாது.

    * அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது.

    * வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.

    * புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க ருசியாக இருக்கும்.

    * பூண்டுவை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதன் மேல் தோலை எளிதாக நீக்கி விடலாம்.

    * உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும். அதிக எண்ணெய் செலவாகாது.

    * கட்லெட்டில் அதிக ருசி கிடைக்க அதற்குரிய மாவில் சிறிதளவு ரொட்டித் தூள் அல்லது ரவை சேர்க்க வேண்டும்.

    • வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
    • தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.

    * வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.

    * ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

    * சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.

    * சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.

    * அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.

    * தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.

    • ஊறுகாய், கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது.
    • வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி ஆப்பம் வார்த்தால் சுவையாக இருக்கும்.

    * பொதுவாக எந்த ஊறுகாய் செய்தாலும் கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது. வடநாட்டினர் பெரும்பாலும் பின்பற்றும் வழியும் இதுதான்.

    * குலோப்ஜாமூனை ஆறவைத்த சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் விரிசல் விழாது, உடைந்தும் போகாது.

    * முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

    * பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து செயற்கை கலருக்கு பதிலாக பயன்படுத்தலாம். உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகான நிறங்களில் இருக்கும். உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

    * தேங்காயோடு பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * கோதுமை மாவு போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பிரியாணி இலைகளையும் சேர்த்தால் வண்டு வராது.

    * சமையல் செய்யும்போது உடலில் சூடான எண்ணெய் பட்டுவிட்டால், அந்த இடத்தில் உருளைக்கிழங்கை அரைத்து பூசினால் கொப்பளம் வராது.

    * குலோப்ஜாமூன் ஜீரா மீந்துவிட்டால், அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெய்யில் பொரித்தால் சுவையான இனிப்பு பிஸ்கட் ரெடி.

    * ஆப்பத்திற்கு மாவு கலக்கும் போது இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டி தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    • பழ எசென்ஸ் விட்டு லட்டு பிடித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
    • தேங்காய்க்கு பதில் கசகசாவை அரைத்து மோர்க்குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

    * இஞ்சியுடன் ஏலக்காயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். டீ தயாரிக்கும்போது கொதி வந்த பின்பு இதை ஒரு டீஸ்பூன் அளவிற்கு போட்டு பருகவும். டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * மோர்க் குழம்பு செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக கசகசாவை சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு செய்தால் கெட்டியாக, சுவையாக இருக்கும்.

    * பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலையையும், பொடித்த முந்திரியையும் சேர்த்துப் பிடித்தால் சுவையாக இருக்கும்.

    * லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டுப் பிடித்தால் லட்டு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * முட்டையை வேக வைக்கும் போது சில சமயங்களில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளைக்கரு வெளியே வரக்கூடும். அப்படி வெளியில் வராமல் இருக்க வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை சேர்க்கவும். இதனால் முட்டையின் ஓடு வெடித்தாலும் உள்ளே இருப்பவை வெளியில் வராது.

    * பூசணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

    * முட்டை கெடாமல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் மூழ்கும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அந்த முட்டை கெட்டு விட்டது. அது தண்ணீரில் மூழ்கினால் அந்த முட்டையை சமைப்பதற்கு பயன்படுத்தலாம்.

    * ஒரு கப் அளவு பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து காய்கறி சாலட் செய்யும்போது சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை நன்றாக இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.

    * பச்சை மிளகாயில் உள்ள காம்பு பாகத்தை நீக்கி விட்டு அதை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரெஷ் ஆக இருக்கும்.

    * பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிரி உதிராக இருக்கும்.

    • சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.
    • காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    மைக்ரோவேவ் அவன் சாதனத்தில் சமைக்கும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் சமைப்பதற்கான சமையல் டிப்ஸ்...

    * காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி வேகவைக்க வேண்டும்.

    * காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    * சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.

    * உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கறிகள் வறண்டு விடும். ஆதலால் அவை வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

    * சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும்.

    * ஒரு பவுல் அல்லது ஒருகப் தண்ணீரை மைக்ரோவேவில் சூடு செய்து அதில் தக்காளியை போட்டு எடுத்தால் ஓரிரு நிமிடத்தில் தோலை நீக்கி விடலாம்.

    * உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள்கரண்டியால் குத்தியோ அல்லது துண்டு துண்டாக வெட்டியோதான் அவனில் வைக்க வேண்டும்.

    * புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க, பச்சரிசியில் வைப்பது போலவே நேரம், அளவு வைக்கவேண்டும்.

    * பாசுமதி அரிசியில் சமைக்கும்போது அரிசியும், தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் 'மைக்ரோ-ஹை'யில் வைக்கவும்.

    * தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

    * நமத்துப் போன சிப்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிஸ்கட் வகைகளை, காட்டன் கர்ச்சீப் போன்ற துண்டு விரித்து அதில் பரப்பி வைத்து மூடாமல் ஒரு நிமிடம் சூடு செய்யலாம்.

    * பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும், நீரும் பாதி அளவுதான் இருக்க வேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

    * உலோக பாத்திரங்களை அவனில் வைத்து சமைக்கக் கூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து, ஓவனின் உட்புற உலோக தகட்டில் எதிரொலித்து பக்க விளைவுகள் ஏற்படும்.

    • சப்பாத்தி மாவு பிசையும் போது பால் சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்.
    • கருணைக்கிழங்கு பொரியலுக்கு வேர்க்கடலையை பொடி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

    1. நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி, புதினா துவையல் அரைக்கும்போது அதனுடன் சேர்த்து அரைத்தால் சுவையான நெல்லி-புதினா துவையல் ரெடி.

    2. எந்த பதத்தில் அரைத்தாலும் இட்லி பூ போல மென்மையாக வரவில்லையா? கவலை வேண்டாம். கழுவி ஊற வைத்த அரிசியுடன் ஒரு டம்ளருக்கு நான்கு ஸ்பூன் என்ற விகிதத்தில் பொட்டுக் கடலையை சேர்க்கவும். இதை எப்போதும் போல அரைத்து இட்லி சுட்டால் பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.

    3. சாம்பாரிலோ அல்லது காரக்குழம்பிலோ புளிப்புச்சுவை அதிகமாகிவிட்டால் ஒரு துண்டு வெல்லம் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொதிக்க விடவும். புளிப்பு சுவை மட்டுப்படும்.

    4. கருணைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதனுடன் வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து சேர்த்தால் கருணைக்கிழங்கு பொரியல் சுவையாக இருக்கும்.

    5. புட்டுமாவு அரைக்கும்போது அதனுடன் நான்கிற்கு ஒன்று என்ற விகிதத்தில் சிறுதானியமான கம்பு சேர்த்து அரைத்து வேகவைத்து அதனுடன் வெல்லம், நெய், துருவிய தேங்காய், வாழைப்பழத் துண்டுகள் மற்றும் பொடித்த வேர்க்கடலை சேர்த்தால் சத்து நிறைந்த புட்டு தயார்.

    6. முள்ளங்கியை நறுக்கிய பிறகு அந்தத் துண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைத்துப் பின்னர் சமைத்தால் முள்ளங்கியின் வாடை துளி கூட வராது.

    7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதனுடன் வெந்நீர் அல்லது சூடான பால் சேர்த்துப் பிசைந்தால் சுவையான சப்பாத்தி செய்யலாம்.

    8. பூரிக்கு கிழங்கு மசால் செய்யும்போது மற்ற பொருள்களுடன் பொட்டுக்கடலைப் பொடியை சிறிதளவு சேர்த்தால் கிழங்கு மசாலாவின் சுவையும், மணமும் கூடும்.

    9. தயார் செய்த குழம்பில் உப்பு அதிகமானால் வறுத்து அரைத்த அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு இவையில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கலாம். உப்பு மட்டுப்படும்.

    10. மெதுவடை செய்யும்போது அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன், ஊற வைத்த பயத்தம் பருப்பை சிறிதளவு கலந்து வடை சுட்டெடுங்கள். வடை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

    11. பஜ்ஜி செய்யும்போது சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாகவும், மொறுமொறுப்பாகவும் வரும்.

    12. கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த வேர்க்கடலை மாவைச் சிறிது கலந்து சத்து நிறைந்த பூரி செய்யலாம்.

    • முந்திரி பருப்புகளை வறுத்து வைத்தால் கெடாது.
    • அடைக்கு பருப்புடன் ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்தால் அடை மொறுமொறுப்பாக கிடைக்கும்.

    * முற்றிய தேங்காயை துண்டுகளாக வெட்டுவது சிரமம். அதை பிரீசரில் 10 நிமிடங்கள் வைத்து விட்டு தண்ணீரில் கழுவி கீறினால் ஓடு கழன்று வந்துவிடும்.

    * பிரிட்ஜ் கதவு எப்போதும் பளிச்சென இருக்க, லிக்விட் சோப்புடன் சொட்டு நீலத்தை நுரை வரும்வரை கலந்து, அந்த நுரையால் துடைத்தால் போதும்.

    * சவ்சவ் நறுக்கும்போது விரல் பிசுபிசுப்பாகி விடும். சவ்சவ்வை நீளவாக்கில் இரண்டாக வெட்டி ஒன்றோடு ஒன்று தேய்த்து, பின்பு நீரில் கழுவி விட்டு நறுக்கினால் பிசுபிசுப்பாக இருக்காது.

    * முழு முந்திரி பருப்புகளை விரைவில் பூச்சி அரித்து விடும். அவற்றை ஒன்றிரண்டாக உடைத்து, வெறும் வாணலியில் வறுத்துவிட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.

    * ரோஜா, சாமந்தி பூக்களின் காம்புகள் ஒடிந்த நிலையில் இருந்தால் சாமி படங்களுக்கு வைப்பது சிரமம். ஊதுவர்த்தியின் கீழ்பாகம் போன்ற சிறு குச்சிகளை பூ நடுவில் சொருகி விட்டால் அழகாக பூ சூட்ட முடியும்.

    * குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது காய்ச்சிய பாலை சேர்க்கலாம்.

    * பாகற்காயுடன் பீட்ரூட், கேரட் கலந்து பொரியல் செய்தால், அதன் கசப்பு தன்மை குறைந்து விடும்.

    * வெயில் காலத்தில் தயிர் வேகமாக புளித்து விடும். டிபன் கேரியரில் பால் உறை ஊற்றி மேல், கீழ் பாத்திரங்களில் நீர் நிரப்பி வைத்தால் எளிதில் புளிக்காது.

    * அடைக்கு பருப்பு ஊற வைக்கும்போது கைப்பிடி ஜவ்வரிசியையும் அதனுடன் ஊற வைத்தால் மொறுமொறு அடை கிடைக்கும்.

    * பால் சேர்த்து பாயசம் செய்யும்போது அடுப்பில் வைத்து சர்க்கரை கலந்தால் திரிந்தது போல் ஆகிவிடும். இறக்கிவிட்டு பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.

    * வெயில் காலத்தில் பூக்கள் சீக்கிரம் வாடாமல் இருக்க, ஸ்பாஞ்சை தண்ணீரில் நனைத்து அதன் மேல் பூக்களை வைத்து ஈரத்துணியால் சுற்றவும்.

    • சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும்.
    • சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள். அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். சமையல் ருசியாக இருக்க கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக...

    சமையலில் செய்யக்கூடாவதவை

    * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

    * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

    * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

    * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

    * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

    * சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

    * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

    * ஃபிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்கூடாது.

    * பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

    * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

    * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

    * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

    செய்ய வேண்டியவை..!

    * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

    * புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

    * ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

    * போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

    *குருமாவை இறக்கும் போது கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

    * பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

    * குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

    * வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.

    * கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.

    * வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

    • வத்தக்குழம்பில் உப்பு அதிகமானால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவையும் கூடும்.
    • பிரிஞ்சி இலையை பொடித்து மூலை முடுக்குகளில் போட்டால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

    * வெந்தயக்கீரையை வேகவைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் உடல் சுத்தமாகும். குடல் புண்கள் குணமாகும். மலச்சிக்கலையும் போக்கும்.

    * பருப்புக்கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளன. நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கும் வல்லமை இதற்கு உண்டு. உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும் ஆற்றல் கொண்டது. வெந்நீர் மற்றும் வியர்வையால் ஏற்பட்ட கொப்புளங்கள், தீக்காயங்களுக்கு பருப்புக்கீரையை அரைத்து தடவ குணம் பெறும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்து முடித்த பின்பு வேர்க்கடலையை பொடித்துப்போட்டு கலந்தால் சுவை கூடும். பொரியல் மீதமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்து சாப்பிடலாம்.

    * பூண்டு, வெங்காயம் நறுக்கிய பின்பு கைகளில் உப்பு தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் வாடை வீசாது.

    * பிரெட், பர்பி, மைசூர் பாகு போன்றவைகளை வெட்டும் கத்திகளை சூடாக்கி வெட்டினால் பிசிறு இல்லாமல் அழகான துண்டுகள் கிடைக்கும்.

    * பால் திரிந்துவிட்டால் அதை வீணாக்காமல் வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி நகைகள், கொலுசுகளை அதில் 15 நிமிடங்கள் ஊற வைத்து தேய்த்து எடுத்து துணியால் துடைத்துவிட்டால் புதிது போல 'வெள்ளி' மின்னும்.

    * பிரிஞ்சி இலைகளை பொடித்து சமையலறை மூலை முடுக்குகளில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

    * வத்தக்குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சரியாகிவிடும். சுவையும் கூடும்.

    * பூரி உப்பலாக சில மணி நேரம் இருக்க, ரவை ஒரு ஸ்பூன், பச்சரிசி மாவு ஒரு ஸ்பூன் கலந்து கோதுமை மாவை கெட்டியாகப் பிசைந்து ஊற விடாமல் உடனே தடிமனாக தேய்த்து பொரித்து எடுக்கவும். உப்பலான சுவையான பூரி கிடைக்கும்.

    * தக்காளி சீக்கிரமாக வதங்க, சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்தால் போதும்.

    * சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காமல் அதனுடன் சிறிது உப்பு, சீரகம், மிளகு கலந்து சூப் போல பருகலாம். உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் மிகுதியாக கிடைக்கும்.

    * பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிவிட்டு, எலுமிச்சை சாறில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பத்திரபடுத்தி தயிர் சாதத்திற்கு எண்ணெய்யில் பொரித்தும், பொரிக்காமலும் சாப்பிடலாம். ருசி அமோகமாக இருக்கும்.

    * சேப்பங்கிழங்கை வேகவைப்பதற்கு முன்பு கத்தி கொண்டு ஆங்காங்கே கீறிவிட்டால் வேகவைத்த பிறகு தோல் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

    * காபி, டீ கறை படிந்த பீங்கான் பாத்திரங்களை எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து கழுவினால் பளிச்சென்று இருக்கும். எலுமிச்சை தோலை தூக்கி எறியாமல் பிரிட்ஜில் பாதுகாத்து பயன்படுத்தலாம்.

    ×