என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....!
- சப்பாத்தி மாவு பிசையும் போது பால் சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்.
- கருணைக்கிழங்கு பொரியலுக்கு வேர்க்கடலையை பொடி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
1. நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி, புதினா துவையல் அரைக்கும்போது அதனுடன் சேர்த்து அரைத்தால் சுவையான நெல்லி-புதினா துவையல் ரெடி.
2. எந்த பதத்தில் அரைத்தாலும் இட்லி பூ போல மென்மையாக வரவில்லையா? கவலை வேண்டாம். கழுவி ஊற வைத்த அரிசியுடன் ஒரு டம்ளருக்கு நான்கு ஸ்பூன் என்ற விகிதத்தில் பொட்டுக் கடலையை சேர்க்கவும். இதை எப்போதும் போல அரைத்து இட்லி சுட்டால் பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.
3. சாம்பாரிலோ அல்லது காரக்குழம்பிலோ புளிப்புச்சுவை அதிகமாகிவிட்டால் ஒரு துண்டு வெல்லம் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொதிக்க விடவும். புளிப்பு சுவை மட்டுப்படும்.
4. கருணைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதனுடன் வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து சேர்த்தால் கருணைக்கிழங்கு பொரியல் சுவையாக இருக்கும்.
5. புட்டுமாவு அரைக்கும்போது அதனுடன் நான்கிற்கு ஒன்று என்ற விகிதத்தில் சிறுதானியமான கம்பு சேர்த்து அரைத்து வேகவைத்து அதனுடன் வெல்லம், நெய், துருவிய தேங்காய், வாழைப்பழத் துண்டுகள் மற்றும் பொடித்த வேர்க்கடலை சேர்த்தால் சத்து நிறைந்த புட்டு தயார்.
6. முள்ளங்கியை நறுக்கிய பிறகு அந்தத் துண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைத்துப் பின்னர் சமைத்தால் முள்ளங்கியின் வாடை துளி கூட வராது.
7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதனுடன் வெந்நீர் அல்லது சூடான பால் சேர்த்துப் பிசைந்தால் சுவையான சப்பாத்தி செய்யலாம்.
8. பூரிக்கு கிழங்கு மசால் செய்யும்போது மற்ற பொருள்களுடன் பொட்டுக்கடலைப் பொடியை சிறிதளவு சேர்த்தால் கிழங்கு மசாலாவின் சுவையும், மணமும் கூடும்.
9. தயார் செய்த குழம்பில் உப்பு அதிகமானால் வறுத்து அரைத்த அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு இவையில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கலாம். உப்பு மட்டுப்படும்.
10. மெதுவடை செய்யும்போது அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன், ஊற வைத்த பயத்தம் பருப்பை சிறிதளவு கலந்து வடை சுட்டெடுங்கள். வடை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
11. பஜ்ஜி செய்யும்போது சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாகவும், மொறுமொறுப்பாகவும் வரும்.
12. கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த வேர்க்கடலை மாவைச் சிறிது கலந்து சத்து நிறைந்த பூரி செய்யலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்