என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் ஒருங்கிணைப்பு குழு"
- பட்டிதொட்டியெங்கும் சென்று அயராது உழைக்க வேண்டும்.
- 2026 சட்டசபை தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புது வியூகம்.
சென்னை:
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளதால் இதே வெற்றியை 2026 சட்டசபை பொதுத்தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.
இதற்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தி.மு.க.வில் அடுத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து கட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விருந்தளித்தார்.
தனது குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் அவருடன் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆஸ்டின், தாயகம் கவி ஆகியோரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
பின்னர் அவர்கள் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, `தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். இந்த பணி 2026 சட்டசபை தேர்தலுக்கும் தொடர வேண்டும். கிராமம் கிராம மாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என்று கூறினார்.
இதுதவிர பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். கூட்டம் நடந்தது பற்றி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள, 2026 சட்ட மன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்பட்டு வரும் தொகுதி பார்வையாளர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.
பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்.
மேலும், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களையும்-சாதனைகளையும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தருகிற வகையில் அயராது உழைப்போம் என்று உரையாற்றினோம்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றுள்ளது.
கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை தலைமைக்கு பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ளும்.
- நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு, வேட்பாளர் பட்டியல் என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்த குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
- உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், மதுரை, தேனி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.
எ.வ.வேலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், இன்று மதுரை, தேனி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்