என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு காங்கிரஸ்"
- ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் எதற்காக மாற்றி பேசினார்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் பற்றி பேச நான் தயாராக உள்ளேன்.
- நீங்கள் லண்டனில் முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தை எல்லாம் நான் வெளியே கொண்டு வருகிறேன்.
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகைக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தினார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் குண்டர் சட்டத்தின் கீழ் செல்வப் பெருந்தகையை காவல்துறையினர் கைது செய்ய சென்றபோது அவர் காலை உடைத்துக் கொண்டார். நீங்கள் லண்டனில் முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தை எல்லாம் நான் வெளியே கொண்டு வருகிறேன்.
இதுதான் தமிழகத்தின் தலைவிதி என்றால் அதை கையில் எடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஒவ்வொருவரிடமும் சண்டை போட்டால் தான் தமிழகத்தில் அரசியல் திருந்தும் என்றால் நான் என்னை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்தவர் செல்வப் பெருந்தகை. அவர் லண்டனில் என்னவெல்லாம் வாங்கியுள்ளார். அவர் மனைவி மீது என்ன இருக்கிறது. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் எதற்காக மாற்றி பேசினார்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் பற்றி பேச நான் தயாராக உள்ளதாகவும். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார் என்பது மக்களுக்கு தெரிந்தால் தான் அதை வைத்து அவர்கள் ஓட்டு போடுவார்கள். இது போன்ற நபர்களை நான் படம்பிடித்து காட்டாமல் விடமாட்டேன். மேலும் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை குண்டர் சட்டத்தில் கைதான ஒருவர் மாநில தலைவராக இருந்ததில்லை என்று கூறினார்.
இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை ரவுடி என கூறியதை கண்டித்து செல்வபெருந்தகையின் ஆதரவாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
- பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"நாடு முழுவதும் உள்ள 1228 சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூபாய் 5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு சி.ஏ.ஜி. தெரிவித்த முறைகேடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்திலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி திரும்பப் பெறவில்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களே அந்தந்த சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநில தலைவர்செல்வப்பெருந்தகை , முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
- நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
சேலம்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். அவர் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு சேலம் ஒருங்கிணைந்த மாநகர் மாவட்டம், கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இரும்பாலை ரோடு ரெட்டிபட்டி பி.சி.சி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி கே.வீ.தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
மேலும் கட்சி வளர்ச்சி குறித்து கேட்டறிந்து காங்கிரஸ் தலைவர் ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பாஸ்கர் (மாநகர் ), அர்த்தனாரி (கிழக்கு), ஜெயக்குமார் (மேற்கு) ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இதில் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து X தளத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பதிவிட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- விஜய்யின் கருத்து இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி மேலும் கூறியிருப்பதாவது:-
மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகவும் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகவும் விஜய் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என அவர் வலியுறுத்தியிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்