என் மலர்
நீங்கள் தேடியது "மம்தா பானர்ஜி போராட்டம்"
- அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
- மம்தா பானர்ஜியின் 48 மணி நேர தர்ணா நாளை வரை நீடிக்கும்.
கொல்கத்தா:
மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி நேற்று பிற்பகலில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிரதமந்திரி ஆவாஸ் யோஜனா உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேணடிய பல கோடி ரூபாய் நிதி நிலுவையில் உள்ளது. அந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி மத்திய அரசுக்கு எதிராக அவர் கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார். குளிருக்கு மத்தியில் இரவு முழுவதும் தொடர்ந்து. தர்ணா நடைபெற்று வரும் இடத்திலேயே இரவில் தங்கினார் .
அவர் இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் 2-வது நாள் போராட்டத்தில் குதித்தார். மம்தா பானர்ஜியின் 48 மணி நேர தர்ணா நாளை வரை நீடிக்கும்.