என் மலர்
நீங்கள் தேடியது "உபேந்திர திவேதி"
- எல்லையில் “அக்ரான்” என்ற தீவிர போர் பயிற்சி நடந்து வருகிறது.
- பயிற்சிகள் இன்று மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.
ஸ்ரீநகர்:
இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி இன்று (வெள்ளிக்கிழமை) காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்றார். அங்கு ராணுவ மூத்த தளபதிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
உதம்பூர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களுக்கு சென்று இந்திய ராணுவ வீரர்கள் எத்தகைய தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தார். இந்திய ராணுவத்தின் எல்லை பகுதி போர் பயிற்சி முறைகளையும் கேட்டு அறிந்தார்.
ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பார்வை யிட்ட அவர் எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வகையில் வீரர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அனந்த்நாக் மாவட்டத்துக்கும் அவர் சென்றார். அங்கும் ராணுவ படை வீரர்கள் தயாராக இருப்பதை ஆய்வு செய்தார். இன்று பிற்பகல் அவர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகல்காம் பகுதிக்கும் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
பகல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்தி ருக்கும் சூழலில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதியின் ஸ்ரீநகர் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
பாகிஸ்தான் மீது தாக்கு தல் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த முறை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின.
இந்த தடவையும் அதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு எல்லையில் "அக்ரான்" என்ற தீவிர போர் பயிற்சி நடந்து வருகிறது. இது பாகிஸ்தான் எல்லை பகுதியில் மிகப்பெரிய பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
இதற்கிடையே இந்திய கடற்படையையும் தயார் படுத்தி வருகிறார்கள். இந்தியாவின் மேற்கு மண்டலத்தில் உள்ள கடற்படை கப்பல் தளங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தியா வின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல்களில் ஒன் றான ஐ.என்.எஸ். விக்ரந்த் கப்பல் அரபிக் கடல் நோக்கி பயணிப்பது செயற்கை கோள் படங்கள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டு செல்லும் போர் விமானங்கள் பாகிஸ்தானின் எந்த பகுதிக்கும் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றவை. எனவே ஐ.என்.எஸ். விக்ரந்த் போர் கப்பலின் நகர்வு முக்கிய மானதாக கருதப்படுகிறது.
ஆனால் இது வழக்கமான நகர்வுதான் என்று கடற்படை அறிவித்துள்ளது. இதற்கிடையே அக்ரான் என்ற பெயரில் இந்திய விமானப்படை நடத்தி வரும் பயிற்சிகள் இன்று மேலும் தீவிரப்படுத்தப் பட்டன.
இன்று காலை அக்ரான் போர் பயிற்சிகள் மிக தீவிர மாக நடத்தப்பட்டன. இது மேலும் பதட்டத்தை உரு வாக்கி இருக்கிறது.
- ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
- ஜம்மு காஷ்மீரில் நாளை ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் நாளை ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.
பாதுகாப்பு, பயங்கரவாதிகளுக்கு பதிலடி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 15ம் தேதி உபேந்திர விவேதி பொறுப்பேற்க உள்ளார்.
- வடக்கு பிராந்திய ராணுவ தலைமை பொறுப்பில் உள்ளார்.
இந்திய ராணுவ துணைத் தளபதியாக உபேந்திர விவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் 15ம் தேதி உபேந்திர விவேதி துணைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
தற்போது வடக்கு பிராந்திய ராணுவ தலைமை பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.
- ஜெனரல் உபேந்திர திவேதி ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை, அடுத்த ராணுவ தளபதியாக நியமித்து கடந்த 12-ந்தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ராணுவ துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார். இவர் ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.