என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல்-ஹமாஸ் போர்"

    • காசா முழுவதும் ஹமாஸ் அமைப்பினரை தேடி வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
    • தலைமை அலுவலகத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டது என்கிறது இஸ்ரேல்.

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய ராணுவ படையினர் தேடித்தேடி வேட்டையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான தலைமையக அலுவலகத்திற்கு கீழே சுரங்கப்பாதைகள் உள்ளதை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    "இந்த சுரங்கப்பாதைகள் ஹமாஸ் போராளிகளால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான மின்சார வினியோகம் ஐ.நா. அமைப்பின் தலைமையகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது" என இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு, ஹமாஸ் அமைப்பினருக்கு மறைமுகமாக உதவி வருவதாக முன்னரே இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இப்பின்னணியில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கிறது.

    ஆனால், சுரங்கப்பாதைகளில் ஹமாஸ் போராளிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் தற்போது வரை முன்வைக்கப்படவில்லை.

    இந்த சுரங்கபாதை அரை கிலோமீட்டர் தூர நீளத்துக்கு உள்ளது என்றும் இதில் ஆங்காங்கே 10 கதவுகள் இருந்து உள்ளன என இதனை பார்வையிட்ட பத்திரிகையாளர்களிடம் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    காசாவின் குறுக்கே பல கிலோமீட்டர் சுரங்கப்பாதைகளை கட்டியதை ஹமாஸ் ஒப்புக்கொண்டு உள்ளது.

    அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முக்கிய நோக்கங்களில், காசாவில் ஹமாஸ் அமைத்திருக்கும் அனைத்து கட்டுமான வசதிகளை அழிப்பதும் ஒன்று என இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று இந்தியா நம்புகிறது.
    • காசாவில் போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை குறித்த ஒப்பந்தத்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இந்த ஒப்பந்தம் காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று இந்தியா நம்புகிறது.

    காசாவில் போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை குறித்த ஒப்பந்தத்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

    அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கவும், போர் நிறுத்தம் செய்யவும், பேச்சுவார்த்தை பாதைக்குத் திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளது.

    • 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
    • ஒப்பந்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

    காசா:

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. முதலில் ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக இஸ்ரேல் ஆலோசனை நடத்தி வந்தது.

    பின்னர் ஒப்பந்தத்தை இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரிசபை ஏற்றுக்கொண்டது. அந்த ஒப்பந்தம் இஸ்ரேல் முழு மந்திரிசபைக்கு பரிந்துரைக்கப்பட்டது.


    இதற்கிடையே ஹமாசுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் முழு மந்திரிசபை இன்று அதிகாலை ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

    6 வார கால போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில், காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படும். இஸ்ரேலிய படைகள் காசாவின் பல பகுதிகளில்இருந்தும் பின்வாங்கும்.

    ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள 33 இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். அதேபோல் 735 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. அதேபோல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் படிப்படியாக அமல்படுத்தப்படும். இதன்மூலம் காசா மீதான போர் 15 மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வர உள்ளது.

    ×