search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருவ் ஜூரல்"

    • முதல் டி20 போட்டியில் துருவ் ஜுரேல் விக்கெட்டை லூக் ஜோங்வே கூறினார்.
    • துருவ் விக்கெட்டை வீழ்த்தியவுடன், லூக் ஜோங்வே தனது ஷூவை கழற்றி, அவர் காதில் வைத்து போன் பேசுவது போல அந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார்.

    ஹராரே:

    இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

    முன்னதாக முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் லூக் ஜோங்வே 10 வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் துருவ் ஜுரேல் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். துருவ் 14 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். துருவ் விக்கெட்டை வீழ்த்தியவுடன், லூக் ஜோங்வே தனது ஷூவை கழற்றி, அவர் காதில் வைத்து போன் பேசுவது போல அந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். இந்திய வீரர் ஒருவரை ஆட்டமிழக்க செய்தவுடன் அவர் ஷூவை அவிழ்த்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் நான் யாரையும் அவமானப்படுத்துவதற்காக அப்படி கொண்டாடவில்லை என்று லூக் ஜாங்வே தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    முதல் போட்டிக்கு முன் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது விக்கெட் வீழ்த்தினால் அதை எப்படி கொண்டாட வேண்டும் என இருவரும் விவாதித்ததாகவும், அப்போது அவரது காதலி விக்கெட்டை வீழ்த்தினால் ஷூவை அவிழ்த்து காதில் வைத்து போன் பேசுமாறு தெரிவித்தார்.

    என லூக் ஜாங்வே கூறினார்.

    • வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
    • போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி என சச்சின் கூறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி மீண்டும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.

    துருவ், இரு இன்னிங்சிலும் பந்தின் லென்த்தை கணித்து விளையாடினார். மேலும் அவரது புட்வொர்க் துல்லியமாக இருந்தது. அவருடன் குல்தீப் யாதவின் பார்ட்னர்ஷிப் முதல் இன்னிங்சில் ஆட்டத்தை நமது கையில் வைத்திருந்தது. 2-வது இன்னிங்சில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. 2-வது இன்னிங்சில் குல்தீப்பின் பந்து வீச்சு முக்கியமானது.

    சுப்மன் கில் சேசிங்கில் தனது உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தி முக்கியமான அரை சதம் எடுத்தார். மேலும் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரோகித் ஆகியோர் தங்களது வேலைகளை சரியாக செய்தனர்.

    போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    • இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
    • இந்திய அணியில் இரண்டு வீரர்கள் புதிதாக அறிமுகம்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

    அந்த வரிசையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். 

    • இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர்.
    • அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    ராஜ்கோட்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியாவின் அதிரடி இந்த போட்டியிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 டெஸ்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி விலகினார். தற்போது தொடர் முழுவதும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. அதே நேரத்தில் கடந்த போட்டியில் ஆடாத ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார்.

    சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஆகிய டெஸ்டில் அறிமுகமாகிறார்கள். அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் பேட்டிங் தொடர்ந்து மோசமாக இருப்பதால் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை ரஜத் படிதார் சுழற்றிவிடப்பட்டால் தேவ்தத் படிக்கல் இடம் பெறுவார். அவரும் இதுவரை டெஸ்டில் விளையாடவில்லை.

    ஜடேஜா அணிக்கு திரும்பியதால் குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் படேல் நீக்கப்படலாம். முகமது சிராஜ் முழு உடல் தகுதியுடன் இருந்தால் முகேஷ் குமார் இடம் பெறமாட்டார்.

    கடந்த டெஸ்டில் ஜெய்ஷ்வாலின் இரட்டை சதமும், சுப்மன்கில்லின் சதமும், 9 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் அபார பந்துவீச்சும் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

    இங்கிலாந்து அணி இந்த தொடரில் முதல் முறையாக 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர். ஆண்டர்சனும், மார்க்வுட்டும் இங்கிலாந்தின் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

    அந்த அணியின் பேட்டிங்கில் ஆலி போப், கிராவ்லி, பென்ஸ்டோக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சில் ஹார்ட்லே, ரேகான் அகமது, ஆண்டர் சன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். 2-வது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வேட்கையில் இங்கிலாந்து அணி இருக்கிறது.

    நாளைய போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    ×