என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமரன்"
- தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
- போலீசார் நெல்லையில் முகாமிட்டு இன்று 3-வது நாளாக விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.
இந்த தியேட்டரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியபோது, அதில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். மேலும் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
மதுரையில் இருந்து அந்த பிரிவின் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் நெல்லையில் முகாமிட்டு இன்று 3-வது நாளாக விசாரித்து வருகின்றனர்.
சுமார் 60-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி சந்தேகப்படும்படியாக இருந்த 3 நபர்களை மேலப்பாளையம் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவருக்கு இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது என போலீசார் உறுதிபடுத்தி உள்ள நிலையில், அந்த நபரை கைது செய்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
அந்த நபர் அளிக்கும் தகவலின் அடிப்படையில், வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 2 பேர் யார்-யார்? என்பது தெரியவரும் எனவும், இன்றைக்குள் அவர்கள் போலீசில் பிடிபடுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
- அமரன் உலகளவில் 250 கோடி ரூபாயை கடந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் உலகளவில் 250 கோடி ரூபாயை கடந்துள்ளது. இப்படமே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகும்.
படத்தின் இடம் பெற்றுள்ள ஹே மின்னலே பாடல் மிகப் பெரியளவில் ஹிட்டாகியது. பலரது போன் ரிங்டோனாகவும் காலர் டியூனாகவும் இந்த பாட்டு மாறியுள்ளது. இந்நிலையில் ஹே மின்னலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாட்டில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இடையே உள்ள காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
- வார நாட்களிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோவாக ‘அமரன்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.200 கோடி வரை வசூலித்து இருந்த நிலையில் தற்பொழுது திரைப்படம் உலகளவில் 250 கோடி ரூபாயை கடந்துள்ளது. இப்படமே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகும். இத்திரைப்படம் 12 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வார நாட்களிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோவாக 'அமரன்' திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அமரன் கெட்டப்பில் சர்ப்ரைஸாக சென்று மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது தொடர்பான வீடியோவை சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Sivakarthikeyan and his wife Aarthi ? pic.twitter.com/YcOC9eL5CG
— SmartBarani (@SmartBarani) November 13, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'அமரன்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை ஹீரோ சுட்டு கொலை செய்வார்
- ஆயுதமற்ற-காயமடைந்த எதிரியை கொல்லக் கூடாதென இராணுவ சட்டங்களும், சர்வதேச சட்டங்களும் சொல்கின்றன.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர். தற்பொழுது திரைப்படம் உலகளவில் 250 கோடி ரூபாயை கடந்துள்ளது.
இந்நிலையில் முகுந்த் வரதராஜன் நிராயுதபாணியான நபர் ஒருவரை சுடுவதாக படத்தில் காட்டியிருப்பதன் மூலம் அவர் ஒரு போர்குற்றவாளி என திருமுருகன் காந்தி பேசியதாக தகவல் பரவியது. ஆனால் அதனை திருமுருகன் காந்தி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக திருமுருகன் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சங்கிக்கூட்டம் மாதிரியான முட்டாள் கூட்டத்தை தமிழ்நாடு கண்டதில்லை. 'அமரன்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், 'இந்திய இராணுவத்தின் முகத்தை பார்' என சொல்லி சுட்டுக்கொலை செய்வதாக சினிமா காட்சி அமைத்திருந்தார்கள்.
ஒரு ராணுவம் இப்படியாக ஆயுதமற்ற-காயமடைந்த எதிரியை கொல்லக் கூடாதென்பது இராணுவ சட்டங்களும், சர்வதேச சட்டங்களும் சொல்கின்றன. இதை மீறினால் போர்க்குற்றம் எனப்படும் குற்றச்சாட்டு சுமத்தப்படும், ஆகவே இப்படியான சினிமா காட்சி உண்மையானதா அல்லது சினிமாவிற்காக அமைக்கப்பட்டதா எனும் கேள்வியினை அமரன் திரைப்பட இயக்குனரை நோக்கி எழுப்பினோம். இதற்கு இயக்குனர் பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். காரணம்,'..முகுந்த் வரதராஜன் இப்படியாக சுடவில்லை, இது என்னுடைய கற்பனை..' என இயக்குனர் சொன்னாரென்றால், முகுந்த் வரதராஜனை குற்றவாளியாக்கியது தான்தான் என பொறுப்பேற்க வேண்டும் என்பதால் அவர் பதில் பேசாமல் கடந்து சென்றுவிட்டார்.
ஆனால், '..முகுந்த்வரதராஜன் ஒரு போர்க்குற்றவாளி..' என விமர்சிக்கப்பட்டதாக சங்கிகளே பொய்-பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். முகுந்த்வரதராஜனை குற்றவாளியாக காட்டி வீடியோ, மீம்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் திரைப்படத்தின் இயக்குனரையும், தயாரிப்பாளரையும் நோக்கி கேள்விகேட்டோம். ஆனால் இக்கேள்விகளை முகுந்த்வரதராஜனை நோக்கி திருப்பி அவரை இழிவுபடுத்துகின்றனர். இதுதான் ஆரிய-சங்கி சூழ்ச்சி.
சங்கிக்கூட்டம் ஒருவரை ஆதரிக்கதென்றால் அவர் தவறானவராக இருப்பார் என்பது தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. இவ்வகையில் 'முகுந்த் வரதராஜன்' பெயருக்கு இழுக்கு தேடிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது பாஜக-குரங்குக் கூட்டம்.
பாவம், முகுந்த்வரதராஜனை சங்கிகளிடத்திலிருந்து யார் காப்பாற்ற போகிறார்களென தெரியவில்லை? ஆகவே நாமே இந்த பொய் செய்தியை அம்பலப்படுத்த வேண்டும்.
இந்த பொய்செய்தியை அம்பலப்படுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என நம்புகிறேன். உங்களது பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் பொய்செய்திகள் மூலம் எதிர்காலத்தில் வன்முறையை பரப்பும் துணிச்சல் சங்கிகளுக்கு உருவாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
சங்கிக்கூட்டம் மாதிரியான முட்டாள் கூட்டத்தை தமிழ்நாடு கண்டதில்லை. 'அமரன்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், 'இந்திய இராணுவத்தின் முகத்தை பார்' என சொல்லி சுட்டுக்கொலை செய்வதாக சினிமா காட்சி அமைத்திருந்தார்கள்.ஒரு ராணுவம் இப்படியாக… pic.twitter.com/Meu2wvel8Y
— thirumurugan gandhi (@thiruja2009) November 12, 2024
- 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
- மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.200 கோடி வரை வசூலித்து இருந்த நிலையில் தற்பொழுது திரைப்படம் உலகளவில் 250 கோடி ரூபாயை கடந்துள்ளது. இப்படமே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகும். இத்திரைப்படம் 12 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வார நாட்களிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோவாக அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமரன் திரைப்படம் எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை இங்கே விதைக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.
- அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ஓர் அங்கமான காஷ்மீரை பாதுகாத்து அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாக்க எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள். அப்படி, காஷ்மீர் எல்லையில் பணியாற்றி, வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின், தியாக வாழ்வையும், காதல் வாழ்க்கையையும் அமரன் எனும் திரைப்படத்தின் மூலம் கலை படைப்பாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கி உள்ளார்.
இந்த படம், தமிழக மக்களின் மனங்களை வென்றுள்ளது. ஆனால், அமரன் திரைப்படத்துக்கு எதிராக சிலர் அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். சிலர் இந்தியாவுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் பேசி வருகின்றனர். அமரன் திரைப்படம் எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை இங்கே விதைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.
தேச பக்தியை வலியுறுத்தும் அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் அமரன் திரைப்படத்தை திரையிடவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்,சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியானது 'அமரன்' திரைப்படம்
- பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.170 கோடி வரை வசூலித்து இருந்த நிலையில் தற்பொழுது திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது. இப்படமே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகும். இத்திரைப்படம் 10 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் நாட்களில் இன்னும் அதிகளவு வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
From Battle Field to Box Office!#Amaran Hits 200 crores theatrical gross in 10 days #StrongerTogether#AmaranMajorSuccess #MajorMukundVaradarajan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy A Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran… pic.twitter.com/dWC2oUhJnt
— Raaj Kamal Films International (@RKFI) November 9, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது
- சாய் பல்லவியின் இன்ட்ரோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது. விரைவில் ரூ.200 கோடியை நெறுங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே மின்னலே பாடல் அனைவரது ரிங்டோனாக மாறி வருகிறது. மேலும், சாய் பல்லவியின் இன்ட்ரோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். 'அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு இனிய பரிசு வழங்கியதற்கு நன்றி' என எக்ஸ் தளத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.
Thanks @Siva_Kartikeyan for the sweet gift for #Amaran success ❤️✨ pic.twitter.com/HhnxCxI6w1
— G.V.Prakash Kumar (@gvprakash) November 9, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
- எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
- திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தனர்.
சென்னையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனால், திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்த நிலையில் காவல்துறை போலீஸ் பாதுகாப்பு போட்பபட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை வெஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டுள்ளது.
இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் திரையரங்கம், சத்யம் சினிமாஸ் திரையரங்கிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல், அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளராக நடிகர் கமல்ஹானின் ஈசிஆர் இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- அமரன் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
- அமரன் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தனது மொபைல் எண்ணை கூறுவது போல ஒரு காட்சி வரும்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், அமரன் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தனது மொபைல் எண்ணை கூறுவது போல ஒரு காட்சி வரும்.
அந்த காட்சியில் வரும் மொபைல் எண் தன்னுடைய மொபைல் எண் என்று சென்னையை சேர்ந்த மாணவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த எண்ணிற்கு ரெபேக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டி தினமும் நிறைய அழைப்புகளும், வாய்ஸ் மெசேஜும் வருவதாக அந்த மாணவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக படக்குழுவினருக்கு சமூக வலைத்தளத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் இப்படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
- ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
- திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
அமரன் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இணையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே மின்னலே பாடல் அனைவரது ரிங்டோனாக மாறி வருகிறது. மேலும், சாய் பல்லவியின் இன்ட்ரோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஹே மின்னலே பாடலில் இடம்பெற்றுள்ள "எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே.." என்கிற காதல் வரியை ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜி.வியின் இந்த பதிவுக்கும், அவரது இசைக்கும் லைக்ஸ்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
Enge irul endraalum….. ange oli needhaaney ….✨✨✨✨❤️❤️❤️ #Amaran pic.twitter.com/waRKrM9ApM
— G.V.Prakash Kumar (@gvprakash) November 6, 2024