என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஸ்னி + ஹாட்ஸ்டார்"

    • இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம்.
    • கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

    அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வெளியான சபா நாயகன் திரைப்படம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒட்டி தளத்தில் வெளியாகியுள்ளது.

    அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட்டடு ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் "சபா நாயகன்".

    ரொமான்டிக் காமெடிப்படமாக உருவான இப்படம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

    உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சிஎஸ் கார்த்திகேயன் இப்படத்தை இயக்கினார்.

    இந்நிலையில், சபாநாயகன் படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
    • மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது லவ்வர் திரைப்படம்.

     

    இந்த வார ஓடிடி ரிலீஸ் - 4 படங்கள்

    1. லால் சலாம் {lal salaam} - Netflix

    பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான லால் சலாம் படம். மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ரஜினியின் மகளான ஐஷ்வர்யா தான் இத்திரைப்படத்தின் இயக்குனர். இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரகுமான் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

     

     

    2. லவ்வர் {lover} - Hot star

    பிப்ரவரி 9-ஆம் தேதி நடிகர் மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா, கண்ணா ரவி நடித்து வெளியான படம் தான் "லவ்வர்".இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவரின் முதல் படம் இதுவே. இவர் இதற்கு முன்பு 'லிவ் இன்"என்ற வெப் சீரீஸை யூ ட்யூபில் இயக்கியுள்ளார்.

    படம் வெளியான சில நாட்களிலையே மக்கள் இடையே நல்ல பெயரையும், நம்பிக்கையையும் இப்படம் பெற்றது. 25 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்து. தற்போது வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

     

    3. மெரி கிறிஸ்துமஸ் {merry christmas} - Netflix

    விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடித்து ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது மெரி கிறிஸ்துமஸ் படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படத்தை "அந்தாதுன்" படத்தின் இயகுனரான ஸ்ரீராம் ராஹவன் இயக்கியிருந்தார். மெரி கிறிஸ்துமஸ் வரும் மார்ச் 8-ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

     

    4. ஹனுமான் {Hanu-man} - zee 5

    ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான மற்றொரு படம் ஹனுமன். தெலுங்கு மொழியில் திரையரங்கில் வெளியானது. தேஜா சஜ்ஜா முன்னணி ஹீராவாக நடித்திருந்தார். வரலக்ஷ்மி சரத்குமார், அமிர்தா ஐயர், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ப்ரசாந்த் வர்மா என்பவர் இயக்கியுள்ளார். ஹனுமன் திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது




     


     

     

    • ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • துபாயில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை வாங்கியுள்ளனர்

    அதிக ஓடிடி தளங்களின் வருகையால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருவதால் மற்றொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டது. அதன்படி அம்பானியின் ரிலையன்ஸ் நடத்தும் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    இந்த இரண்டு தளங்களும் இணைந்தால் அதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயர் வைக்கப்படும். ஹாட்ஸ்டார் ஜியோ சினிமாவுடன்தான் இணையும் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்த டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் [Jio- hotstar.com] என்ற இணையதள முகவரியை [domain] முன்கூட்டியே கண்டது வருடமே வாங்கி வைத்தார்.

    இந்த முகவரியை சொந்தமாக்கினால் மட்டுமே தற்போது ஒருங்கிணைத்து ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உருவாக்க உள்ள ஓடிடி அந்த பெயரில் செயல்பட முடியும். இந்நிலையில் அந்த முகவரியை அவர் ரிலையன்ஸிடம் நல்ல விலைக்கு விற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அந்த முகவரிக்கு ரூ.1 கோடி வரை அந்த டெவலப்பர் விலை வைத்திருந்தார் என்ற தகவல்களும் வெளியாகின.

     

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் துபாயை சேர்ந்த இருவருக்கு டெல்லி டெவலப்பர் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இருவரும் குழந்தைகள் என்பது இந்த விவகாரத்தை அதிக சுவாரஸ்யமாகியுள்ளது. துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜைனம் மற்றும் ஜீவிகா என்ற சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

    இவர்கள் இருவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்குக் கல்வி ரீதியாக உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வாங்கி உள்ள ஜியோ ஹாட்ஸ்டார் இணைய முகவரியை அதற்கு பயன்படுத்த உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

    • பறந்து போ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.
    • இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம்  பறந்து போ, மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.

    ராமின் இயக்கத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், அடுத்த படமான 'பறந்து போ' படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட, ஒரு ரோட் டிரிப் மேற்கொள்கிறார்கள். அவர்களின் பயணம் தான் இந்தப்படத்தின் கதை. 

    ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு 'பறந்து போ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில்…, 'பேரன்பு' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர் ரோட்டர்டாம் (IFFR) திரைப்பட விழாவில் அரங்கேறியதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் IFFR 2024 இல் 'ஏழு கடல் ஏழு மலை' திரையிடப்பட்டபோது, 'பறந்து போ' (ஃப்ளை அவே) திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார். ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'பறந்து போ' (ஃப்ளை அவே) IFFR 2025 இன் லைம்லைட் பிரிவில் ப்ரீமியர் செய்யப்படுகிறது. சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு de Doelen Jurriaanse Zaal இல் நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .

    "இந்தத் திரைப்படம், காமெடி ஜானரில் வித்தியாசமான புதிய குழுவுடன் எனது முதல் முயற்சி. மலையாளத் திரையுலகில் பிரபலமான கிரேஸ் ஆண்டனி, இப்படத்தில் மிகச்சரியான ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார். எப்போதும் போல, அஞ்சலி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் இருவரும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றில், சிறப்பான பணியைச் செய்துள்ளனர். மாஸ்டர் மிதுல் ரியானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு திறமையான இளம் நடிகரின் இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். ஹாட்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது - அவர்கள் எனது பார்வையை நம்பி, எனது திரைக்கதைக்கு முழுமையான ஆதரவு தந்தனர். ஒட்டுமொத்த குழுவிற்கும், இப்படம் ஒரு அமைதியான மற்றும் இனிமையான பயணமாக அமைந்தது," என்று ராம் கூறினார்.

    படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார், இசை சந்தோஷ் தயாநிதி. மதி VS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு, NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஆஃபிஸ்’ சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது.
    • வில்லங்கமான கிராமமும், அட்ராசிட்டியான ஆஃபீஸும்" என்ற பொருத்தமான டேக்லைனுடன் முடிகிறது.

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'ஆஃபிஸ்' சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸின் புரோமோக்கள், டைட்டில் பாடல் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது, இந்த சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

    டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோ, ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தையும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை பாணி திரைக்கதையையும் எடுத்துக்காட்டுகிறது.

    கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தாசில்தார் அலுவலகத்திற்கு வருவதில் இந்த புரோமோ துவங்குகிறது. அவர் கிராமப்புற குடும்ப பின்னணியில் இருந்து வருவதால், அவர் தனது கணவரின் பெயரைக் கூற மறுக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கிறது. முழு அலுவலகமும் அவரின் கணவரின் பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. இறுதியில், அவள் சைகை மொழி மூலம் பெயரையறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்பின்னான வேடிக்கையான சம்பவங்கள் நகைச்சுவையுடன் முடிவடைகின்றன.

    இந்த புரோமோ கிரேஸியான கிராமத்தையும் அதன் மக்களையும் விவரிக்கும் வகையில், "வில்லங்கமான கிராமமும், அட்ராசிட்டியான ஆஃபீஸும்" என்ற பொருத்தமான டேக்லைனுடன் முடிகிறது.

    நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை, கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன்நாத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸான 'ஹார்ட் பீட்' இல் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள இருவர் இடம்பெற்றுள்ளனர்.

    'ஹார்ட் பீட்' சீரிஸில் நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா அரவிந்த், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

    ஒரு அரசு அலுவலகத்தில் நடக்கும் நகைச்சுவையான நிகழ்வுகளும், வித்தியாசமான சம்பவங்களும், பார்வையாளர்களைச் சிரிப்பில் ஆழ்த்துவது உறுதி. இந்த ஆஃபீஸ் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலான நகைச்சுவையால் நிரம்பியுள்ளது. மனம் விட்டுச் சிரித்து மகிழ, ஒரு அட்டகாசமான சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பயனர்களுக்கு 149 ரூபாய் முதல் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
    • சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்யும்.

    ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒன்றிணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய ஸ்ட்ரீமிங் தளத்தை இன்று [பிப்ரவரி 14] அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக இந்த ஜியோ ஹாட்ஸ்டார் தொடங்கப்பட்டுள்ளது. இதில்  ரிலையன்ஸ் 60% பங்குகளை வைத்துள்ளது. டிஸ்னி 37% பங்குகளை வைத்துள்ளது.

    இரண்டு தளங்களிலும் இருந்த ஓடிடி கண்டென்ட்டுகளை இனி ஒரே தளத்தில் பார்க்கலாம். தற்போது இதில் இருக்கும் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், லைவ் ஷோக்கள் போன்றவற்றை இலவசமாகப் பார்க்கலாம். இடையில் வரும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா கட்ட வேண்டியிருக்கும்.

    இரு தளங்களிலும் ஏற்கனவே சந்தா கட்டியுள்ள பயனர்களுக்கு அவர்களின் சந்தா காலம் முடியும் வரை இந்த சேவை தொடரும். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் புதிதாக சந்தா கட்ட தேவையில்லை.

    ஜியோ சினாவில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்க முடியும். ஆனால் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டிகள் சந்தா முறைக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் சில நிமிடங்களுக்கு பின் வீடியோ லாக்- இன் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சந்தா செலுத்தினால் மட்டுமே விளம்பரம் இன்றி அதிக குவாலிட்டியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

     

    புதிய பயனர்களுக்கு 149 ரூபாய் முதல் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மொபைல் வெர்ஷனுக்கு ரூ. 149, சூப்பர் திட்டத்திற்கு ரூ. 299 மற்றும் விளம்பரம் இல்லாத பிரீமியம் திட்டத்திற்கு ரூ. 349 என மூன்று மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

    ஜியோ ஹாட்ஸ்டாரில் கூடுதலாக NBCUniversal Peacock, Warner Bros, Discovery, HBO மற்றும் Paramount ஆகிய சேனல்களின் படங்கள் மற்றும் தொடர்கள் இதில் காணக்கிடைக்கும்.

    மேலும் IPL, WPL மற்றும் ICC நிகழ்வுகள் போன்ற முக்கிய கிரிக்கெட் போட்டிகளையும், பிரீமியர் லீக், விம்பிள்டன், புரோ கபடி மற்றும் ISL போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்யும். 

     

    ×