என் மலர்
நீங்கள் தேடியது "ED Raid"
- அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
- ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை என்று அமலாக்கத்துறை வாதம்.
தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
அமைச்சருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் வந்து சிகிச்சை தொடர்பான விவரங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டறிகிறார். அப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதேசமயம், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வாதத்தின்போது அமலாக்கத்துறை கூறியதாவது:-
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது.
நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது.
கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டன. கைது செய்யப்படுவோம் என தெரிந்தே செந்தில் பாலாஜி மெமோவை பெற மறுத்துவிட்டார்.
நீதமன்ற காவல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் ஜாமின் தான் கோர வேண்டும். செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் சரியானது. ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை.
செந்தில் பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார். இன்று திடீரென உடல்நலக் குறைவு என்கிறார்.
செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சையை அமலாக்கப் பிரிவே வழங்கும்.
இவ்வாறு அமலாக்கத்துறை வாதிட்டது.
மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், 15 நாள் அமலாக்கத்துறை காவல் கேட்ட வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்.
- காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருப்பதாகவும் உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். காவிரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஸ்டண்ட் கருவி பொருத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
கட்டாயம் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மணிக்கு மேல் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, காவிரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர்.
- மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர்.
காரைக்குடி :
காரைக்குடியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 8 நாட்கள் சோதனை முடிந்து அதில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி அதன் பின்னர் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தனர். இதை சகித்து கொள்ள முடியாதவர்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க.வினர் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு காரணம் மக்களிடம் அனுதாபம் பெறலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர். ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் அந்த மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடைபிடித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதை அனைத்து மீடியாக்களும் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்படுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கவர்னரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர். அதைபோல் இன்று அதே நாடகத்தை கையில் எடுத்துள்ளனர்.
இது மக்களுக்கு நன்றாக தெரியும். அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு வரை வராத நெஞ்சுவலி அதற்கு பின்னர் எப்படி வந்தது? திடீரென ஒரு நாள் இரவு எப்படி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகம் உள்ளது. இதற்கு உயர்தர டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அமலாக்கத்துறை கைது செய்ததால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.
நேற்று நீட் தேர்வு ரிசல்ட் வந்துள்ளது. இதில் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதல் மாணவனாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் இந்திய அளவில் முதல் 10 இடத்தில் நான்கு பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான். இதன் மூலம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலக பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ள நிலையில் இந்தியா உலகில் 5-வது மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது.
- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் திட்டத்துக்கு ரூ.100 ஒதுக்கினால் ரூ.15 மட்டுமே சென்று சேர்வதாக கூறியிருந்தார்.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கில் பா.ஜனதா சார்பில் நடந்த பிரதமரின் 9 ஆண்டுகால சாதனை விளக்க மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-
2014-க்கு முன் நாட்டை ஆண்டவர்கள், ஊழலை பிரத்யேகமாக கொண்டு ஆட்சி செய்தனர். மக்கள் விடிவுக்காக காத்திருந்தபோது பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஏழைகளின் நலன், மக்கள் சேவை ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு ஆட்சி செய்து வருகிறார். அரசின் மானியம் மக்களை நேரடியாக சென்றடைய மக்களுக்கு இலவச வங்கி கணக்கு தொடங்கினார்.
ஏழை மக்கள் வீடு கட்டும் திட்டம், சுகாதாரமான குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் இணைப்பு, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை உட்பட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது அதிகளவில் உள்ளதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.
உலக பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ள நிலையில் இந்தியா உலகில் 5-வது மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் திட்டத்துக்கு ரூ.100 ஒதுக்கினால் ரூ.15 மட்டுமே சென்று சேர்வதாக கூறியிருந்தார். தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் 100 சதவீதமும் மக்களை நேரடியாக சென்றடைகிறது.
சமூகநீதி பற்றி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாராயணசாமி ஆகியோர் பேசுகின்றனர். உண்மையில் சமூகநீதிக்கு உதாரணம் பிரதமர் மோடிதான். புதுவையில் பா.ஜனதா அமைச்சர் வசம் உள்ள உள்துறை மூலம் 700 போலீசார் எந்த முறைகேடும் இன்றி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவைக்கு ரூ.ஆயிரத்து 500 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளோம். பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுவையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இளைஞர்களை திருமாவளவன் திசை திருப்புவதாக சிலர் கூறுகின்றனர். இளைஞர்கள் வளர்ச்சிப்பாதையை நோக்கி திரும்ப வேண்டும்.
வரும் 2047-ல் இந்தியா வல்லரசாக மாற பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நிருபர்கள் கேட்டபோது, அமலாக்கத்துறை என்பது ஒரு தனி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்பு. அதை யாரும் ஏவிவிடவில்லை. அமலாக்கத்துறையினர் தங்களுக்கு வந்த புகார்கள், ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களின் கடமையை செய்கின்றனர் என்றார்.
- செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள 3 அடைப்புகளை சரி செய்ய இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
- செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள 3 வழக்குகள் அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இது தொடர்பான நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கி சம்மனையும் அனுப்பினார்கள். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலையில் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதன் முடிவில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அருள்மணி என்பவர் அளித்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் பேரில் கூட்டு சதி, மோசடி, 5 பிரிவுகளின் கீழும், கணஷே்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்துள்ளனர்.
கோர்ட்டின் அனுமதி கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்த உள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள 3 அடைப்புகளை சரி செய்ய இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆபரேஷன் முடிந்ததும் செந்தில் பாலாஜியை ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஓய்வு முடிந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வருவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக சில நாட்கள் பொறுமை காக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். எந்த ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்ட நபர் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது என்பது சட்டப்படி சாத்தியமாகும்.
இதற்காகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சில நாட்கள் கழித்து செந்தில் பாலாஜியிடம் தீவிரமாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் முடிவில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அனுராதா ரமேஷ் என்ற பெண் தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் செந்தில் பாலாஜியின் பினாமி ஒருவருக்கு ரூ.10.9 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னணி குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட பெண்ணின் நிலம் எந்த வகையில் இது போன்று விற்பனை செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள 3 வழக்குகள் அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை
- நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தா
சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதைத் தொடா்ந்து, தி.மு.க. சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய மற்றொரு மனு தாக்கல் ஆனது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆா்.இளங்கோ, 'அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலனை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும். அவரது இதயத்தில் 3 அடைப்புகள் உள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் இ.எஸ்.ஐ. மருத்துவர்களை வைத்தும் அமலாக்கத்துறை பரிசோதனை செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார். அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. மேலும், கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கைதுக்கான காரணங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டார்.
அப்போது, அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தைப் பொறுத்தவரை, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பொருந்தாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்பதை அவரிடம் தெரிவித்தோம்.
சம்மன் அளித்தோம். கைது செய்யப்படுவோம் என தெரிந்தே அதற்கான குறிப்பாணையைப் பெற அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார். கைது குறித்து அவரது மனைவிக்கும், சகோதரிக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளது.
கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே எந்தவித இடைக்கால நிவாரணமும் அளிக்கக்கூடாது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது. நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அவா் ஜாமினில் தான் வெளியில் வர முடியும்; அதை நிராகரிக்க கோர முடியாது.
விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சரிவர ஒத்துழைக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை வரை நன்றாகத்தான் இருந்தார். ஆனால், திடீரென உடல்நலக்குறைவு என்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் தொடா்பாக தமிழக அரசு அளித்திருக்கும் மருத்துவர் அறிக்கையை நம்ப முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும்.
மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்கலாம். அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டார். பிறகு இது தொடர்பான விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்று ஒத்தி வைத்தார்.
காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.
அதன்படி முதலில் நீதிமன்ற காவல் தொடர்பான மனு மீது விசாரணை நடந்தது. அந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, "நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக" உத்தரவிட்டார்.
- செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது மனித உரிமை மீறல் எனக் குற்றச்சாட்டு
- மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்
தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என செந்தில்பாலாஜி தெரிவித்த போதிலும், அதிகாரிகள் அவரை துன்புறுத்தியுள்ளனர். மிகுந்த மனஉளைச்சல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் நடந்த விதத்தில் மனித உரிமை மீறப்பட்டது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் மருத்துவமனை வந்து, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப்பின் அவர் கூறியதாவது:-
செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள வந்தேன். அவர் சோர்வாக காணப்பட்டார். அதனால் காத்திருந்து அவரிடம் விசாரணை நடத்தினேன். அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய பின்னரும் தரையில் தரதரவென இழுத்து துன்புறுத்தினர்.
நெஞ்சுவலி என்று கூறியபோதிலும் அதிகாரிகள் வாகனத்தில் இருந்து தள்ளி துன்புறுத்தினர். கைது செய்யப்பட்டபோது கடுமையான வகையில் நடத்தப்பட்டேன். மூன்று அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் தற்போது பேசமுடியவில்லை என்று கூறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மனித உரிமை மீறப்பட்டதாக புகார்கள் வந்தனர். புகார் அடிப்படையிலும் தாமாக முன்வந்தும் மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம். தற்போதும் புகார் வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
- தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.
- செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது
கோவை:
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. குற்றம்சாட்டியது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார்.
தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.
மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பா.ஜ.க அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
அ.தி.மு.க.வில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.
செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதிக்காது.
பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உணர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது.
- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ.க.-வின் எதிர்க்கட்சிக்கார்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை.
பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும்-உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?
செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை! அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?
அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும், அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான பின்னர்தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்! இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்? அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பா.ஜ.க. தயாராக இல்லை. பா.ஜ.க.வை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பா.ஜ.க.வை நம்புவார்கள். பா.ஜ.க.வின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்!
கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்.
* சிவசேனா எதிர்க்கிறதா? அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தை கைது செய்ய வேண்டும்.
* ஆம் ஆத்மி எதிர்க்கிறதா? டெல்லி மாநில அமைச்சர் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்ய வேண்டும்.
* ராஷ்ட்ரிய ஜனதா தளம் எதிர்க்கிறதா? பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு செய்ய நடத்த வேண்டும்!
* மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி பாஜக-வை எதிர்க்கிறார்களா, அவர்களது கட்சிக்காரர்களது இடங்களில் ரெய்டு நடத்த வேண்டும்!
* கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரைக் கைது செய்தார்கள். அவர் மக்களைச் சந்தித்து, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று, இப்போது துணை முதலமைச்சராகவே ஆகி விட்டார்!
* முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தார்கள்.
* தெலுங்கானாவில் அமைச்சருக்குத் தொடர்புள்ள இடங்களில் ரெய்டு!
* சத்தீஸ்கரில் முதலமைச்சர் தொடர்பான இடங்களில் ரெய்டு!
ஆனா, உத்தரப்பிரதேசத்தில் மத்தியப் பிரதேசத்தில், குஜராத்தில் எல்லாம் ரெய்டு நடத்தப்படாது. ஏனென்றால், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது 'உத்தமபுத்திரன்' பாஜக. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத் துறைக்கோ, மத்தியப் புலனாய்வுத் துறைக்கோ தெரியாது.
பா.ஜ.க.வை எதிர்க்கிற அனைத்துக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டுக்குள்ளேயும் பா.ஜ.க.வோட துணை அமைப்புகள் ரெய்டு நடத்தி விட்டார்கள். அப்படி இல்லை என்றால், அ.தி.மு.க. மாதிரி அடிமைகளை, இந்த விசாரணை அமைப்புகளைக் காட்டி மிரட்டி அடிபணிய வைத்து விடுவார்கள்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், முந்தைய பத்து ஆண்டுகளில் அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 112-தான்.
ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ.க.-வின் எதிர்க்கட்சிக்கார்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ வெறும் 0.05 விழுக்காடுதான்! மற்றபடி எல்லா ரெய்டுகளும் மிரட்டல், அரட்டல், உருட்டல்தான்.
இப்படி ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க.-வில் சேர்ந்த பின்னர் 'புனிதர்கள்' ஆகி விடுகிறார்கள். அப்படிப்பட்ட 'புனிதர்கள்' மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ஒரு பட்டியலையே போட்டிருக்கிறார்! ஏன் இங்கே இருக்கும் அ.தி.மு.க.வே அதற்கு ஓர் உதாரணம்தான். இந்த ரெய்டுகளின் உண்மையான நோக்கம் என்பது இதுதான்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ரெய்டு நடத்தி குற்றப்பத்திரிகையை வரிசையாகத் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம். வழக்குப் பதிவு செய்து கொண்டு இருக்கிறோம். இவற்றில் எல்லாம் விசாரணை நடத்த ஏன் அமலாக்கத்துறை வரவில்லை? எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அவர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தத் தயாரா?
பழனிசாமி அடிமைக் கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை தி.மு.க! உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை தி.மு.க.காரர்கள்! சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரி தான் ஒவ்வொரு தி.மு.க.காரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான். நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டு இருக்கி றேன்.
நிறைய கழக உடன்பிறப்புகள் தலைவர் கலைஞர் பேசிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். "என்ன யாரும் அடிக்க முடியாது.. ஞாபகம் வெச்சிக்க.. நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது…" என்று கலைஞர் பேசிய வீடியோ. அதுதான் இப்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.
எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு தாழ்வு, மேல்-கீழ், இந்த மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்கத் தயாராக இருக்கிறோம். அதை விடுத்து, மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.! நேருக்கு நேர் சந்திப்போம்!
நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காகக் கட்சி நடத்து கிறவர்கள். கொள்கைகளைக் காப்பாற்றத்தான் கடைசி வரைக்கும் போராடுவோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறே இதற்கு சாட்சி! ஆதிக்க மனோ பாவத்துடன் எதிர்த்தால், கொள்கைப் பட்டாளத்துடன் உறுதியோடு தடுப்போம். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், மிசா காலம் என, நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை, நாங்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை.
தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். தி.மு.க.வையோ-தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!
எனவே, பொறுப்புள்ள ஒன்றிய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க., அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எதேச்சாதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! pic.twitter.com/MTA0suBkSh
— M.K.Stalin (@mkstalin) June 15, 2023
- கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது.
- கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில், கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை விசாரணை செய்துள்ளனர்.
இவ்வாறு வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
- பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் தனிப்பட்ட மருத்துவர் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல. எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் கோர முடியாது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் பொருந்தாது. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சரியா? இல்லை? என உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது.
மேலும், தமிழக மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு வாதம் நடைபெற்றது.
- அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவரை கைது செய்தபோது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.