என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிர்ச்சி சிவா"

    • சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் உருவாகிறது.
    • இப்படத்திற்கு 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.

    ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். அண்மையில் சூது கவ்வும் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    ஏற்கனவே இப்படத்தின் 'மண்டைக்கு சூறு ஏறுதே' என்ற பாடலும் 'பேட் பாய்ஸ் மிஷன்' என்ற பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றிந்த நிலையில், தற்போது 'என்ன நடக்கும்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்கி இருக்கிறார்.
    • 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகவுள்ளது.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.

    'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

    'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
    • 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம் 2 ஓரளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சி.எஸ். அமுதன். இவர் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

    இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் உருவான தமிழ்ப் படம் 2 ஓரளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    'தமிழ்ப் படம்' படத்தின் கதை, தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்களை கிண்டல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருந்ததே அதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.

    இப்படங்களை தொடர்ந்து சி.எஸ். அமுதன் இயக்கிய ரத்தம் என்ற படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில், விரைவில் 'தமிழ்படம் 3' உருவாகவுள்ளதாக அப்படத்தின் கதாநாயகன் சிவா உறுதிப்படுத்தியுள்ளார்.

    அண்மையில் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த சிவா, ''தமிழ்ப்படம் 3 குறித்து 'ஒய் நாட்' தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்ரீகாந்த்திடம் பேசியுள்ளோம். கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கு மேலாக பேசி, 2025ல் தமிழ்ப்படம் 3 எடுக்க முடிவுசெய்துள்ளோம். ஒரு கதை எழுதி படம் பண்ணுவது நார்மல். ஆனால், 100 படங்களை பார்த்து கதை எழுதுவது சவாலான விஷயம்'' என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கற்றது தமிழ் மற்றும் பேரன்பு போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
    • ராம் அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் ராம். இலக்கிய பூர்வமான சினிமா எடுப்பதில் மிகவும் திறமையானவர். கற்றது தமிழ் மற்றும் பேரன்பு போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தியவர். இயக்குனர் ராம் அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சூரி, நிவின் பாலி மற்றும் அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வருகிறது.

    திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் ராம் பறந்து போ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஒரு பிடிவாதமாக இருக்கும் சிறுவனுக்கும் பணம் கஷ்டத்தில் இருக்கும் அவனது தந்தைக்கும் ஒரு பயணத்தின் போது இருவரும் சந்திக்கும் மனிதர்களின் மூலம் வாழ்க்கையை புரிந்துக் கொள்ளும் சூழல் ஏற்டுகிறது. இதனை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

    படத்தில் கிரேஸ் ஆண்டனி , மிதுல் ரியான், அஞ்சலி ,மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை ஏகாம்பரம், படத்தொகுப்பை மதி மேற்கொள்கின்றனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ளார். படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.

    திரைப்படம் தற்பொழுது நடைப்பெற்று வரும் சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பறந்து போ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.
    • இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம்  பறந்து போ, மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.

    ராமின் இயக்கத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், அடுத்த படமான 'பறந்து போ' படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட, ஒரு ரோட் டிரிப் மேற்கொள்கிறார்கள். அவர்களின் பயணம் தான் இந்தப்படத்தின் கதை. 

    ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு 'பறந்து போ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில்…, 'பேரன்பு' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர் ரோட்டர்டாம் (IFFR) திரைப்பட விழாவில் அரங்கேறியதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் IFFR 2024 இல் 'ஏழு கடல் ஏழு மலை' திரையிடப்பட்டபோது, 'பறந்து போ' (ஃப்ளை அவே) திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார். ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'பறந்து போ' (ஃப்ளை அவே) IFFR 2025 இன் லைம்லைட் பிரிவில் ப்ரீமியர் செய்யப்படுகிறது. சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு de Doelen Jurriaanse Zaal இல் நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .

    "இந்தத் திரைப்படம், காமெடி ஜானரில் வித்தியாசமான புதிய குழுவுடன் எனது முதல் முயற்சி. மலையாளத் திரையுலகில் பிரபலமான கிரேஸ் ஆண்டனி, இப்படத்தில் மிகச்சரியான ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார். எப்போதும் போல, அஞ்சலி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் இருவரும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றில், சிறப்பான பணியைச் செய்துள்ளனர். மாஸ்டர் மிதுல் ரியானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு திறமையான இளம் நடிகரின் இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். ஹாட்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது - அவர்கள் எனது பார்வையை நம்பி, எனது திரைக்கதைக்கு முழுமையான ஆதரவு தந்தனர். ஒட்டுமொத்த குழுவிற்கும், இப்படம் ஒரு அமைதியான மற்றும் இனிமையான பயணமாக அமைந்தது," என்று ராம் கூறினார்.

    படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார், இசை சந்தோஷ் தயாநிதி. மதி VS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு, NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×