search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாடும்"

    • கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.
    • பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம், கருட பகவான் மனித பிறப்பு மற்றும் இறப்புகளைப் பற்றி கேட்டறிந்த விஷயங்கள் அடங்கிய தொகுப்பே 'கருடபுராணம்' என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில தகவல்கள் உங்களுக்காக...


    * அன்னதானம் செய்தால், விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

    * கோ தானம் செய்தால் பசுக்களின் உலகமான கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

    * கன்றை ஈனும் சமயத்தில், பசுவை கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

    * குடை தானம் செய்தவர், 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

    * தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை போன்றவற்றில் எதை தானம் செய்தாலும், சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

    * வஸ்திர தானம் கொடுத்தவருக்கு, வாயு லோகத்தில் வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

    * வஸ்திரத்தை கடவுளுக்கு சாற்றினால், எந்த கடவுளுக்கு சாற்றுகிறார்களோ, அவர்களின் உலகத்தில் வாழுவர்.

    * ரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர்கள், அக்னி லோகத்தில் ஆனந்தமாக இருப்பார்கள்.

    * விஷ்ணு - சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர்கள், சொர்க்கத்தில் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள்.

    * குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு, 14 இந்திரர்களின் காலம் வரை வருண லோகத்தில் வாழும் வாய்ப்பு அமையும்.

    * ஆலயங்களில் நந்தவனங்களை அமைத்துக் கொடுப்பவர், வாயு லோகத்தில் ஒரு மன்வந்த்ர காலம் வாழ்வர்.

    * தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் செய்தவர், மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

    * பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாய் அமைவதோடு, அவருக்கு மீண்டும் பிறவிகள் இருக்காது.

    * நற்செயலை விரும்பி செய்கிறவர்கள், சூரியலோகம் செல்வார்கள்.

    * தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு, சத்தியலோகத்தில் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.

    * ஒரு பெண்ணை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்தவருக்கு, 14 இந்திரனின் ஆயுட்காலம் வரை அமராவதியில் இன்பமாய் இருக்கும் வாய்ப்பு அமையும்.

    * நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும், ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

    * பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    * தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர், 10 ஆயிரம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பர்.

    * சுவையான பழங்களை தானம் கொடுத்தவருக்கு, ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

    * ஒரு சொம்பு நல்ல நீரை தானம் செய்தவர்களுக்கு, கயிலாய வாசம் கிடைக்கும்.

    * கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.

    * பறவைகளை காப்பாற்றியவர்கள், கருடனின் ஆசிபெற்று வைகுண்டம் சென்றடைவர்.

    * விலங்குகளை காப்பாற்றியவர்கள், நந்திதேவரின் ஆசி பெற்று சிவலோகம் அடைவர்.

    • மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம்.
    • தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது.

    மண்ணச்சநல்லூர்:

    தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இறுதியில் இருந்து மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்செரிதல் நடைபெறும்.

    பூச்செரிதலையடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி அம்மன் பட்டினி விரதம் முடிவடைந்து, சித்திரை தேர்திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் மூலஸ்தானத்திலிருந்து அம்மன்(உற்சவர்) புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் மிதுன லக்கனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மிகுந்த உற்சாகத்துடன் ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் சென்று, முக்கிய வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னர் நிலையை அடைந்தது.

    விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்ரனர். இத்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

    இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் திருவிழாவையொட்டி 7 மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    இதேபோன்று திருச்சியில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துறையூர் வழியாக சென்னை செல்வதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக மரக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 48 இடங்களில் மண்டகப்படி பூஜைக்கான அம்பாள் நேற்று இரவு புறப்பட்டார்.

    பல்வேறு இடங்களில் பூஜைகளை பெற்றுக் கொண்டு பின்னர் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மன் தேரில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேர் திருவிழாவை கண்டுகளிக்க குவிந்தனர்.

    இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வாயுத் தலமாக விளங்குவது காளஹஸ்தி.
    • புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு.

    பஞ்சபூதத் தளங்களில் வாயுத் தலமாக விளங்குவது காளஹஸ்தி. உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் ஊர், ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள் நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு.

    சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன் கொடியேற்றம் வெகுசிறப்பாக நடந்தது.

    பக்த கண்ணப்பர் கோயிலில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து காளத்திநாதர் கோயில் முன் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேதங்கள் முழங்க, உற்சவர்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காலை, வெள்ளி சப்பரத்தில் ஞானபூங்கோதை சமேதமாய் உற்சவர் காளத்திநாதர், விநாயகர், முருகர் ஆகியோரின் திருவீதி உலா நடந்தது. இன்றும் வாகன உலா நடைபெறும்.

    ×