search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கருடபுராணம் கூறும் சில அரிய தகவல்கள்!
    X

    கருடபுராணம் கூறும் சில அரிய தகவல்கள்!

    • கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.
    • பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம், கருட பகவான் மனித பிறப்பு மற்றும் இறப்புகளைப் பற்றி கேட்டறிந்த விஷயங்கள் அடங்கிய தொகுப்பே 'கருடபுராணம்' என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில தகவல்கள் உங்களுக்காக...


    * அன்னதானம் செய்தால், விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

    * கோ தானம் செய்தால் பசுக்களின் உலகமான கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

    * கன்றை ஈனும் சமயத்தில், பசுவை கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

    * குடை தானம் செய்தவர், 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

    * தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை போன்றவற்றில் எதை தானம் செய்தாலும், சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

    * வஸ்திர தானம் கொடுத்தவருக்கு, வாயு லோகத்தில் வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

    * வஸ்திரத்தை கடவுளுக்கு சாற்றினால், எந்த கடவுளுக்கு சாற்றுகிறார்களோ, அவர்களின் உலகத்தில் வாழுவர்.

    * ரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர்கள், அக்னி லோகத்தில் ஆனந்தமாக இருப்பார்கள்.

    * விஷ்ணு - சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர்கள், சொர்க்கத்தில் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள்.

    * குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு, 14 இந்திரர்களின் காலம் வரை வருண லோகத்தில் வாழும் வாய்ப்பு அமையும்.

    * ஆலயங்களில் நந்தவனங்களை அமைத்துக் கொடுப்பவர், வாயு லோகத்தில் ஒரு மன்வந்த்ர காலம் வாழ்வர்.

    * தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் செய்தவர், மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

    * பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாய் அமைவதோடு, அவருக்கு மீண்டும் பிறவிகள் இருக்காது.

    * நற்செயலை விரும்பி செய்கிறவர்கள், சூரியலோகம் செல்வார்கள்.

    * தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு, சத்தியலோகத்தில் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.

    * ஒரு பெண்ணை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்தவருக்கு, 14 இந்திரனின் ஆயுட்காலம் வரை அமராவதியில் இன்பமாய் இருக்கும் வாய்ப்பு அமையும்.

    * நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும், ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

    * பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    * தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர், 10 ஆயிரம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பர்.

    * சுவையான பழங்களை தானம் கொடுத்தவருக்கு, ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

    * ஒரு சொம்பு நல்ல நீரை தானம் செய்தவர்களுக்கு, கயிலாய வாசம் கிடைக்கும்.

    * கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.

    * பறவைகளை காப்பாற்றியவர்கள், கருடனின் ஆசிபெற்று வைகுண்டம் சென்றடைவர்.

    * விலங்குகளை காப்பாற்றியவர்கள், நந்திதேவரின் ஆசி பெற்று சிவலோகம் அடைவர்.

    Next Story
    ×