என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஃப் தாமு"

    • மீடியா மேசன்ஸ்” நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான ரவூபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவிட்டுள்ளார்.
    • சில சூழல்கள் சரி இல்லாதக் காரணத்தினால் நாங்கள் எங்கள் பயணத்தை விஜய் டி.வியுடன் தொடரப் போவதில்லை.

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்த media masons நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளது.

    விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து பல ஹிட்டான ஷோக்களான "சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, Mr.Mrs சின்னத் திரை, சமையல் சமையல், கிச்சன் சூப்பர் ஸ்டார், சூப்பர் மாம்" போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கியது மீடியா மேசன் என்ற நிறுவனம்தான்.

    இதுகுறித்து "மீடியா மேசன்ஸ்" நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான ரவூபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவிட்டுள்ளார்.

    அதில், "தனது 25 வருட தொலைக்காட்சி பயணத்தை நாங்கள் விஜய் டிவியிடம் பணியாற்றினோம். விஜய் டி.வி எங்களின் இன்னொரு வீடு என்றும், துரதிஷ்ட்டவசமாக , சில சூழல்கள் சரி இல்லாதக் காரணத்தினால் நாங்கள் எங்கள் பயணத்தை விஜய் டி.வியுடன் தொடரப் போவதில்லை. இது வரைக்கும் எங்கள் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் இயக்குனரும் சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    குக் வித் கோமாளி புதிய சீசனில் யார் நடுவராக வரப்போகிறார், யார் அதை தயாரிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி
    • குக் வித் கோமாளி புதிய சீசனில் யார் நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.

    குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.

    குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
    • குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.

    குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.

    குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வரவுள்ளார்.

    இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் 19 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
    • இதில் தெலுங்கு திரைப்பட நடிகர் பாலகிருஷ்ணாவும் ஒருவர் ஆவார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

    அதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ உள்பட மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித்குமார், நடிகை சோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தெலுங்கு திரைப்பட நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சமையல்கலை அறிஞர் செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    பத்ம விருது பெற்றவர்களை பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×