என் மலர்
நீங்கள் தேடியது "சட்டத்துறை அமைச்சர் ரகுபதி"
- ஒருகாலமும் திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.
- ஆள் பிடிக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது.
பாஜகவின் ஆள்பிடிக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆள் பிடிக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது.
முதுகெலும்பில்லாத கோழைகள் பாஜகவிற்கு அடிபணியலாம் ஒருகாலமும் திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.
அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது, என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பாஜக, தனது அச்சுறுத்தல் ஆயுதத்தை அமலாக்கத் துறை மூலம் நீட்டியது. பாஜகவின் ஆணவத்திற்கான அடிதான் உயர்நீதிமன்றம் இப்போது எழுப்பிய கேள்விகள்.
"இரவில் சோதனை நடக்கவில்லை; அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்; அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை" என்றெல்லாம் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சொன்ன போது, "பொய் சொல்ல வேண்டாம்.
அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது" என நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. 'டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மார்ச் 25-ஆம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது' என அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
* எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் எனத் தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் எப்படித் தடுத்து வைக்க முடியும்?
* அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதைச் செயல்படுத்திய விதம் தவறு.
* அமலாக்கத்துறை சோதனை நடத்தக் காரணமான வழக்குகள், விவரங்களைப் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்.
* இரவு வரை பெண் அதிகாரியை சிறைபிடித்து சோதனை நடவடிக்கை எடுப்பது அச்சுறுத்தல்.
என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது உயர் நீதிமன்றம்.
எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளைத் தனது கைப்பாவையாக ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.
பாஜக ஆளாத மாநிலங்களில் முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளைப் புனைந்து, எதிர்க்கட்சிகளை முடக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் செயல்படுகிறது அமலாக்கத் துறை.
மோடி அரசின் 10 ஆண்டு ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை 193 ஆனால், இதுவரை 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது CONVICTION RATE வெறும் 1.03 சதவிகிதம்தான்.
இதனை நாடாளுமன்றத்திலேயே பாஜக ஒத்துக் கொண்டிருக்கிறது. சோதனைகள், கைதுகள் மூலம் தனது அரசியல் எதிரிகளை மிரட்டிப் பழிவாங்கவும் அவர்களது செயல்பாடுகளை முடக்கவும் அமலாக்கத் துறை அரசியல் சதியை நடத்தி கொண்டிருப்பதைத்தான் CONVICTION RATE வெளிக்காட்டுகிறது.
அமலாக்கத் துறையால் வழக்குகள் பதியப்பட்டவர்கள், பாஜகவில் இணைந்ததும், அவர்கள் மீதான நடவடிக்கைகள் நின்றுவிடுவது அமலாக்கத்துறையின் அறிவிக்கப்படாத விதியாகும். அமலாக்கத்துறை சோதனை நடத்துவதும் வழக்கு பதிவதும் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆள்பிடிக்க மட்டுமே.
எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து சோதனை நடத்துவது அதை வைத்து வழக்கு போடுவேன் எனச் சொல்லி மிரட்டி அவர்களை பாஜகவிற்கு ஆதரவாளராக மாற்றுவது என ஒன்றிய பாஜக அரசின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த ED பேர அரசியலுக்கு அடிபணியாதவர்களை மட்டும் சிறையில் வைத்து மிரட்டிப் பார்ப்பது என்ற மிக மிகக் கேடுகெட்ட கேவலமான வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.
அமலாக்கத் துறையை வைத்து பூச்சாண்டி காட்டியதால் பாஜகவோடு இணைந்தவர்களைப் பட்டியல் போட்டால், சுவேந்து அதிகாரி, முகுல் ராய், ஷிண்டே, அஜீத் பவார், பிரேம் காந்த் என அவர்கள் நம்பும் அனுமார் வால் போல அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
வடக்கே அமலாக்கத்துறையை வைத்து பாஜகவிற்கு ஆள் பிடித்த பார்முலாவை இங்கே செய்து பார்க்கலாம் எனக் கணக்கு போடுகிறது பாஜக ஆனால் முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால் பாஜகவின் சித்து விளையாட்டிற்குப் பயந்து பாஜகவை ஆதரித்து அடிபணியலாம் ஆனால், ஒருகாலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.
பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத்துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் சோதனை மேற்கொண்டது.
தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் இப்போது எடுத்திருக்கும் முயற்சி நாடாளுமன்ற மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு பாஜக-வை நிலைகுலையச் செய்திருக்கிறது.
தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டத் தொகுதி சீரமைப்பின் பெயரால் பாஜக போட்டிருந்த பாசிசத் திட்டத்தை முளையிலேயே முதலமைச்சர் அம்பலப்படுத்திவிட்டார் என்ற ஆத்திரத்திரத்தில் ஆற்றாமையிலும் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு ஏவிவிட்டுள்ளது.
வரும் மார்ச் 22-ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிற ஆலோசனைக் கூட்டம் பாஜகவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதனால்தான் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறையைப் புனிதமான விசாரணை அமைப்பாகக் காட்டி வந்த பாஜகவின் பிம்பம் தமிழ்நாட்டில்தான் முதல்முறையாகத் துடைத்தெறியப்பட்டது. திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானார்.
கொள்ளையனோடு கூட்டுச் சேர்ந்த காவலனாக அமலாக்கத்துறை பாஜகவோடு கூட்டு வைத்து, பாஜகவின் குற்றங்களுக்குத் துணை போய்க் கொண்டிருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் என்னை ரிமாண்ட் செய்யட்டும்.
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.
சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்திலும் ஈடுபடப் போகிறோம்.
சட்டத்தை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை. அமைச்சர் ரகுபதி மீது சொத்து குவிப்பு வழக்க நிலுவையில் உள்ளது.
முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் எனு்னை ரிமாண்ட் செய்யட்டும்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.
இவ்வாறு கூறினார்.
- மக்களவை தேர்தலுக்காக மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்
- போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது.
தேர்தலுக்கு தேர்தல் மதுரை எய்ம்ஸ் வரும் என்றும் தேர்தலுக்குப் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவை தேர்தலுக்காகவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அப்பணிகள் நடைபெறாது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "இந்தியா முழுவதும் போதைப் பொருள் புழக்கம் உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்காக பாஜக தமிழகம் மீது பழி போட வேண்டாம். தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றும் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது.
தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
மேலும், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது என்று குற்றம் சாட்டிய அமைச்சர், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிக அளவில் உள்ளது என்றும் பாஜகவில் உள்ளவர்கள் போதைப்பொருள் கடத்துவதை முதலில் அண்ணாமலை தடுக்கட்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
- ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவை துண்டிப்பதாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது.
ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.
காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. திமுக அரசு மது விலக்கிற்கு எப்போதும் ஆதரவான அரசு.
மதுவை ஒழிப்பது மத்திய அரசின் கையில் தான் உள்ளது. மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழித்து விட முடியாது.
மது விலக்கு தொடர்பாக ஒட்டுமொத்த தேசத்திற்குமான கொள்கையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
- அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக ரகுபதியையே வந்து சேரும்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை தாக்கி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது.
அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
அண்ணா தி.மு.க. வேட்டியைக் கட்டி அரசியல் வாழ்வு பெற்று, இந்த இயக்கத் தொண்டர்கள் சிந்திய வியர்வையிலும் ரத்தத்திலும் சட்டமன்ற உறுப்பினராகி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும் உழைப்பால் அமைச்சர் பதவியைப் பெற்ற இந்த ரகுபதிக்கு, வாழ்வளித்த இயக்கத்தின் மீதே இழிச்சொல் உரைக்க நா கூசவில்லையா?
அஇஅதிமுக கொடுத்த முகவரியால் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தும் ரகுபதி, திமுகவின் முதல் குடும்பத்தின் சிறந்த கொத்தடிமை விருது பெற முயற்சிப்பது அவருடைய தனிப்பட்ட வேள்வியாக இருக்கலாம். அதற்கு அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக அவரையே வந்து சேரும்.
கருணாநிதி ஆட்சியில் விவசாய பம்பு செட்களுக்காண மின் கட்டணம் குறித்து கேட்ட விவசாயிகளை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வரலாற்றை ரகுபதி திமுக-வில் இணைந்த பின் வசதியாக மறந்து விட்டாரா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விமான நிலையம் வந்ததும் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சு வலித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- அடைப்பு காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமான நிலையம் வந்ததும் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சு வலித்ததால் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் ரகுபதிக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதயத்தில் அடைப்பு காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.