என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவ்தத் படிக்கல்"

    • நடப்பு ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக பேட்டிங் செய்வதாக உணர்கிறேன்.
    • ஒவ்வொரு முறையும் நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்றுள்ளோம்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

    அந்த அவர்களின் சொந்த மைதானமான பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேயத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் வெளி மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.

    இந்நிலையில் சொந்த மைதானத்தில் வெல்லும் வழியை நாங்கள் அறிய வேண்டும் என ஆர்சிபி அணி வீரர் தேவ்தத் படிக்கல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக பேட்டிங் செய்வதாக உணர்கிறேன். டி20-ல் கடந்த இரு ஆண்டுகளாக நான் |சிறப்பாக விளையாடவில்லை, அதற்கு நானே முழுப் பொறுப்பு. அணியாக நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம்.

    ஒவ்வொரு முறையும் நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்றுள்ளோம். சொந்த மைதானத்தில் வெல்லும் வழியை நாங்கள் அறிய வேண்டும். அதற்கு நாங்கள் மிகவும் தகுதியானவர்கள்.

    என்று தேவ்தத் படிக்கல் கூறினார்.

    • இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
    • லக்னோ அணிக்கு எதிராக போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற தோனி, அதை நூர் அகமதுவுக்கு கொடுத்திருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்களும், படிக்கல் 61 ரன்களும் அடித்தனர். ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது படிக்கலுக்கு செல்ல வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள இரண்டு புள்ளிகள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை தவிர்த்து வெளியில் நாங்கள் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

    இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே என்னை பொறுத்தவரை இந்த ஆட்டநாயகன் விருது அவருக்கு தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதை ஏன் எனக்கு கொடுத்தார்கள்? என்று தெரியவில்லை.

    நான் இந்த போட்டியில் கடைசி வரை ஒருபுறம் நின்று விளையாட நினைத்தேன். அதற்கு ஏற்றாற்போல் எதிர்புறம் இருக்கும் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடினர்.

    என்று விராட் கோலி கூறினார். 

    லக்னோ அணிக்கு எதிராக போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற தோனி, அதை ஏன் எனக்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை எனவும் அதை நூர் அகமதுவுக்கு கொடுத்திருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியில் பும்ரா, தேவ்தத் படிக்கல் இடம் பிடித்துள்ளனர்.
    • ஆகாஷ் தீப், ரஜத் படிதார் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்குகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ராபின்சன் நீக்கப்பட்டு மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

     இந்திய அணியில் பும்ரா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரஜத் படிதார் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

    • ஜாக் கிராலி 71 பந்தில் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
    • குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் அறிமுகம் ஆனார். பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    ஜாக் கிராலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி பும்ரா- சிராஜ் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தது. இதனால் இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி விளையாடியது. அணியின் ஸ்கோர் 64 ரன்னாக இருக்கும்போது பென் டக்கெட் 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஒல்லி போப் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. அவரை 11 ரன்னில் குல்தீப் யாதவ் வெளியேற்றினார். அத்துடன் முதல் நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து 25.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.

    இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் கிராலி பாஸ்பால் ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 64 பந்தில் 9 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். தற்போது 71 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    • ஜெய்ஸ்வால், படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகினர்.
    • விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் பந்துகளை தடுத்தும், பந்து பின்னல் விட்டும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கே.எல். ராகுல் மட்டும் அவ்வப்போது ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் ரன்கள் எடுக்க திணறினார். இறுதியாக 23 பந்துகள் எதிர்கொண்ட நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் தேவ்தத் படிக்கல் டக்அவுட் ஆனார். இதனால் இந்தியா 14 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 12 பந்துகளை சந்தித்த விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் வீசிய பவுன்சரில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் இந்தியா 32 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்துள்ளது.

    தற்போது கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் விளையாடி வருகின்றனர். கே.எல். ராகுல் 21 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்திய அணி:-

    1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.

    ஆஸ்திரேலியா அணி:-

    1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.

    • ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகினர்.
    • விராட் கோலி 5 ரன்னில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை ஏற்றார். பும்ரா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    அடுத்து வந்த விராட் கோலி 12 பந்தில் 5 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார். கே.எல். ராகுல் ஒருபக்கம் தாக்குப்பிடித்து விளையாடினார். இருந்தாலும் 74 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    இந்திய அணி:-

    1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.

    ஆஸ்திரேலியா அணி:-

    1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி வீரர் தேவ்தத் படிக்கல் இன்றைய முதல் நாள் ஏலத்தில் unsold ஆகி இருக்கிறார். இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    இதே போன்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னரையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. முதல் நாள் ஏலத்தில் இந்திய வீரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ஏலம் போயினர். இதற்கு மாறாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் ஏலம் போகாததும் அரங்கேறியிருக்கிறது.

    • முதலில் பேட் செய்த கர்நாடகா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

    வதோதரா:

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியும், குருணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். அனீஷ் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பரோடா அணி சார்பில் ராஜ் லிம்பானி, அதித் ஷேத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. ஷாஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அதித் ஷேத் அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் பரோடா அணி 49.5 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகம் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

    • இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா, அரியானா அணிகள் மோதின.
    • இதில் கர்நாடகா அணி வெற்றி பெற்று 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வதோதரா:

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும், அங்கித் குமார் தலைமையிலான அரியானா அணியும் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித் குமார் 48 ரன்னும், ஹிமான்ஷு ரானாவும் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கர்நாடகா அணி சார்பில் அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் 86 ரன்னும், ஸ்மரன் ரவிச்சந்திரன் 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், கர்நாடகா அணி 47.2 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

    நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் மகாராஷ்டிரா, விதர்பா அணிகள் மோதுகின்றன.

    ×