என் மலர்
கிரிக்கெட் (Cricket)
விஜய் ஹசாரே டிராபி: படிக்கல் சதத்தால் பரோடாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா
- முதலில் பேட் செய்த கர்நாடகா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார்.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியும், குருணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். அனீஷ் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பரோடா அணி சார்பில் ராஜ் லிம்பானி, அதித் ஷேத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. ஷாஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அதித் ஷேத் அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் பரோடா அணி 49.5 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகம் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.