என் மலர்
நீங்கள் தேடியது "டாம் லாதம்"
- நியூசிலாந்து அணியில் டாம் லாதம் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார்.
- ஹேசில்வுட் 5 விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்தின் பேட்டிங்கை சீர்குலைத்தார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டாம் லாதம்- வில் யங் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. வில் யங் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
வில் யங் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் லாதம் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். நம்பிக்கை நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் இந்த முறையும் 17 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் சீரான இடைவெளியில் நியூசிலாந்து பேட்ஸ்கள் வெளியே 162 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து அணியால் 45.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

கேன் வில்லியம்சன்
ரச்சின் ரவீந்திரா (4), டேரில் மிட்செல் (4), கிளென் பிலிப்ஸ் (2) ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
டாம் பிளெண்டல் (22), மேட் ஹென்றி (29), சவுத்தி (26) ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். ஸ்டார்க் 3 விக்கெட்டும் கம்மின்ஸ் மற்றும் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 32 ரன்னுக்குள் தொடக்க வீரர்களை இழந்தது. ஸ்மித் 11 ரன்னிலும், கவாஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- 36 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்டில் வெற்றி பெற்றது சிறப்பு வாய்ந்த உணர்வை தருகிறது.
- அணி வீரர்களுக்கு இது பெருமைமிக்க தருணம்.
பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே 36 ஆண்டுக்கு பிறகு வீழ்த்தி வரலாறு படைத்தது.
இது குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறுகையில்:-
36 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்டில் வெற்றி பெற்றது சிறப்பு வாய்ந்த உணர்வை தருகிறது. அணி வீரர்களுக்கு இது பெருமைமிக்க தருணம். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுவோம். அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் கடும் சவாலாக இருக்கும் என்பதை அறிவோம். இந்திய அணியில் ஆற்றல் மிக்க வீரர்கள் நிறைய பேர் உள்ளனர்.
முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் ஆட்டம் கொஞ்சம் சமநிலையில் இருந்தது. 8-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திராவும், டிம் சவுதியும் இணைந்து திரட்டிய 137 ரன்களே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத வில்லியம்சன் அடுத்த டெஸ்டுக்கு திரும்புவாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஓரிரு நாட்களில் அது தெளிவாகி விடும்' என்றார்.
- 2-வது இன்னிங்சில் டாம் லாதம் 86 ரன்களும், பிளிப்ஸ் 48 ரன்களும் சேர்த்தனர்.
- வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே பந்து அதிக அளவில் டர்ன் ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள திணறினர்.
என்றபோதிலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் குவித்தது. கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 156 ரன்னில் சுருண்டது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில் தலா 30 ரன்கள் சேர்த்தனர். சான்ட்னெர் 7 விக்கெட் சாய்த்தார்.
பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் டாம் லாதம் 86 ரன்கள் விளாசினார். இது நியூசிலாந்து 300 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிக்க உதவியாக இருந்தது.

நேற்றை 2-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்திருந்தது. பிளண்டெல் 30 ரன்களுடனும், பிளிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 9.30 மணிக்கு 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிளண்டெல் 41 ரன்கள எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் சான்ட்னெர் 4 ரன்னிலும், சவுத்தி ரன்ஏதும் எடுக்காமலும், அஜாஸ் பட்டுல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கிளென் பிளிப்ஸ் தாக்குப்பிடித்து விளையாடினார். கடைசி விக்கெட்டாக வில்லியம் ஓ'ரூர்கே ரன்ஏதும் அடிக்காமல் ரன்அவுட் ஆக, நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 255 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து ஒட்டுமொத்தமாக 358 ரன்கள் முன்னிலைப் பெற்று, இந்தியாவுக்கு 359 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. பிளிப்ஸ் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
- மும்பை வான்கடே டெஸ்டில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூரு மற்றும் புனேயில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
3-வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் ஒயிட்வாஷ் ஆகும். சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகக்கூடாது என்ற எண்ணத்தில் இந்தியா விளையாடும். அதேவேளையில் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் ஆக்கிவிட வேண்டும் என நியூசிலாந்து நினைக்கும்.
இந்த நிலையில் வான்கடே டெஸ்ட் குறித்து டாம் லாதம் கூறியதாவது:-
இந்தியா மிகவும் தரமான அணி. கடந்த இரண்டு மூன்று வாரங்களாக அவர்கள் நினைத்தபடி அவர்களுக்கு அமையவில்லை. இருந்தபோதிலும், ஒரேநாள் இரவில் அவர்களை மோசமான அணியாக உருவாக்கிவிடாது. அவர்கள் 1 முதல் 15 பேர் கொண்ட சூப்பர் ஸ்டார்களை பெற்றுள்ளனர். அவர்கள் அவர்களுடைய சிறந்த ஆட்டத்தை நாளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம். இரண்டு அணிகளுக்கும் மீண்டும் ஒரு புதிய சாவல். சிறந்த போட்டியாக இருக்கப் போகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. நாங்கள் போட்டியின் முடிவைவிட, வெற்றிக்கான முக்கியமான தருணத்தில் கவனம் செலுத்த முயற்சி செய்வோம்.
இவ்வாறு டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
- வில் யங் 113 பந்தில் 107 ரன்கள் விளாசினார்.
- டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 104 பந்தில் 118 ரன்கள் குவித்தார்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி:-
1. வில் யங், 2. கான்வே, 3. கேன் வில்லியம்சன், 4. டேரில் மிட்செல், 5. டாம் லாதம், 6. பிலிப்ஸ், 7. பிரேஸ்வெல், 8. சான்ட்னெர், 9. மேட் ஹென்றி, 10. நாதன் ஸ்மித், 11. வில் ஓ, ரூர்கே.
பாகிஸ்தான் அணி:-
1. ஃபஹர் சமான், 2. பாபர் அசாம், 3. சாத் ஷாகீல், 4. முகமது ரிஸ்வான், 5. சல்மான் ஆகா, 6. தையப் தாஹிர், 7. குஷ்தில் ஷா, 8. ஷாஹீன் ஷா அப்ரிடி, 9. நசீம் ஷா, 10. ஹாரிஷ் ராஃப், 11. அப்ரார் அகமது.
அதன்படி நியூசிலாந்து அணியின் வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கான்வே 17 பந்தில் 10 ரன் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 2 பந்துகளை சந்தித்த நிலையில் 1 ரன் எடுத்து நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து 40 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேரில் மிட்செலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இவரும் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வில் யங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே நியூசிலாந்து 10 ஓவரில 48 ரன்கள் சேர்த்தது. 11 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது, வில் யங் 56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் விளாசினார். 22.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
4-வது விக்கெடடுக்கு வில் யங் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். டாம் லாதம் 59 பந்தில் அரைசதம் அடிக்க வில் யங் சிறப்பான விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார்.
56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த வில் யங், 107 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். சதம் விளாசிய வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில் யங் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 37.2 ஓவரில் 191 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங்- டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 5-வது விக்கெட்டுக்கு டாம் லாதம் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.
இதனால் நியூசிலாந்து ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. டாம் லாதம் 47-வது ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் எடுது்து 95 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடி பிலிப்ஸ் 49-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து அரைசதம் அடித்தார்.
நியூசிலாந்து அணி 45-வது ஓவரில் 16 ரன்களும், 46-வது ஓவரில் 9 ரன்களும், 47-வது ஓவரில் 18 ரன்களும், 48-வது ஓவரில் 11 ரன்களும், 49-வது ஓவரில் 12 ரன்களும் விளாசின. இதனால் 44.5 ஓவரில் 250 ரன்னைக் கடந்த நிலையில் 48.3 ஓவரில் 300 ரன்னைத்தொட்டது. கடைசி ஓவரின் 4-வது பந்தில் பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்கருடன் 61 ரன்கள் குவித்தார். அடுத்து பிரேஸ்வெல் களம் இறங்கினார்.
கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்துள்ளது. டாம் லாதம் 104 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து கடைசி 10 ஓவரில்
பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹாரிஸ் ராஃப் 10 ஓவரில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார் அகமது 10 ஓவரில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். நசீம் ஷா 10 ஓவரில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 320 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 260 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
கராச்சி:
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது.
கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. டாம் லாதம் 104 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில் யங்-டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது. பிலிப்ஸ் 39 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்கருடன் 61 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அப்ரார் அகமது 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவூத் ஷகில் 6 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய முகமது ரிஸ்வான் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பகர் சமான் 22 ரன்னில் வெளியேறினார்.
விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சல்மான் ஆகா அதிரடியாக ஆடி 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த பாபர் அசாம்-சல்மான் ஆகா ஜோடி 58 ரன்கள் சேர்த்தது.
கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர், வில்லியம் ரூர்கி தலா 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- வில் யங், டாம் லாதம் ஆகியோருக்கு இது தான் முதலாவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாகும்.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வில் யங், டாம் லாதம் ஆகியோரையும் சேர்த்து இதுவரை 5 நியூசிலாந்து வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் சதம் விளாசிய டாம் லாதம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்களான டாம் லாதம், வில் யங் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வில் யங், டாம் லாதம் ஆகியோரையும் சேர்த்து இதுவரை 5 நியூசிலாந்து வீரர்கள் சதம் அடித்துள்ளனர். ஏற்கனவே கிறிஸ் கெய்ன்ஸ், நாதன் ஆஸ்டில், கேன் வில்லியம்சன் ஆகியோர் சதம் அடித்து இருக்கிறார்கள்.
வில் யங், டாம் லாதம் ஆகியோருக்கு இது தான் முதலாவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாகும். சாம்பியன்ஸ் கோப்பையில் தங்களது அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர்கள் இவர்கள் தான். மொத்தத்தில் அறிமுக ஆட்டத்தின் சதம் 10 ஆக உயர்ந்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பையில் ஒரே இன்னிங்சில் இரு வீரர்கள் சதம் காண்பது இது 5-வது நிகழ்வாகும்.