என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி பந்த்"
- புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
- அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.
கடலூர்:
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி `இந்தியா' கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று (18-ந்தேதி) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், திரையரங்குகள் அடைக்கப்படும். மேலும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை ஓடாது என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் அருகில் கடலூர் மாவட்டம் உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கும், பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததால் காலை 6 மணி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் காலை 6 மணிக்குள் புதுச்சேரி வழியாக சென்றன.
அதன் பிறகு இயக்கவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்கள் விக்கிரவாண்டி வழியாக சென்றது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடலூர் மற்றும் புதுச்சேரி போலீசாரை அணுகிய நிலையில், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.
அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்ற பஸ்சில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறினார்கள் . இதன் காரணமாக பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர் மாவட்ட எல்லை பகுதியான சின்ன கங்கணாங்குப்பம் வரை கடலூர் மாவட்ட போலீசாரும், அதன் பிறகு புதுச்சேரி மாநில போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.
மேலும் சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்குவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து புதுச்சேரி மாநில போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய பஸ்கள் இயக்க ப்படாத காரணத்தினால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
- புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
- மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி 'பந்த்' போராட்டம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட தாமதமானது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும், பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ் டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) 'பந்த்' போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் நடைபெற உள்ளது.
முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- தமிழக அரசு பஸ்கள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும்.
- தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட தாமதமானது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும், பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ் டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) 'பந்த்' போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் நடைபெற உள்ளது.
இதற்காக இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தனியார் பஸ் உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ மற்றும் கடை உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தமிழக அரசு பஸ்கள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும். இதே போல் கடைகளும் அடைக்கப்படுகிறது.
தற்போது தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டததிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டு அன்று நடைபெறும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
- புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு அ.தி.மு.க., மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று பந்த் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்தனர். இதனால் ஓட்டல்கள் மற்றும் சிறிய பெட்டி கடைகள் கூட திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வாசலில் உள்ள உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவர். நேற்று பந்த் போராட்டம் காரணமாக அந்த உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.
இதை அறிந்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் இணைந்து உணவு தயாரித்து ஆஸ்பத்திரி எதிரில் உணவுக்காக தவித்த நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
மனித நேயமிக்க போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.
- பஸ்கள் இயங்காத காரணத்தினால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோவில் சென்று வந்தனர்.
- கூடுதல் தொகை என்றாலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தனர்.
கடலூர்:
புதுச்சேரியில் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இருந்தபோதும் கடலூரில் இருந்து கன்னியகோயில், மகாத்மா காந்தி, ரெட்டிச்சாவடி வரைக்கும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது.
பஸ்கள் இயங்காத காரணத்தினால் இந்த பகுதிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் ஷேர் ஆட்டோவில் சென்று வந்தனர். இதில் கன்னியகோவிலுக்கு 30 ரூபாயும், மகாத்மா காந்தி கல்லூரி வரை 50 ரூபாயும், ரெட்டிச்சாவடி வரை 80 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு பயணிகளை ஏற்றி சென்று வருவதாக கூறப்படுகிறது.
ஏராளமான பொதுமக்கள் தாங்கள் பயணம் செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் கூடுதல் தொகை என்றாலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்