search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்பராஸ்கான்"

    • டெஸ்ட் போட்டிகளில் ராகுல் மிகவும் முக்கியம் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் நினைக்கிறார்.
    • எது அணிக்கு சிறந்ததோ அதன் அடிப்படையில் ஆடும் 11 பேரை தேர்வு செய்வோம்.

    புனே:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கழுத்து பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத இந்திய வீரர் சுப்மன் கில்லும் பயிற்சி செய்தார். கில் அணிக்கு திரும்பும் போது சர்ப்ராஸ்கான் அல்லது லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவர் வெளியே உட்கார வேண்டி இருக்கும்.

    இது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கான போட்டியில் சர்ப்ராஸ்கானும், லோகேஷ் ராகுலும் இருக்கிறார்கள். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. கடந்த டெஸ்டில் சர்ப்ராஸ்கான் அற்புதமாக விளையாடி சதம் விளாசினார். அதற்கு முன்பாக இரானி கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்திருந்தார்.

    லோகேஷ் ராகுல் பெரிய அளவில் ரன் எடுக்காவிட்டாலும் அவரது பேட்டிங் பார்ம் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். மனதளவிலும் வலுவாக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ராகுல் மிகவும் முக்கியம் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் நினைக்கிறார். அவர் மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்த டெஸ்டில் மொத்தம் 6 இடத்திற்கு 7 பேர் போட்டியில் உள்ளனர். ஆடுகளத்தை பார்த்த பிறகு எது அணிக்கு சிறந்ததோ அதன் அடிப்படையில் ஆடும் 11 பேரை தேர்வு செய்வோம்.

    விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இப்போது நன்றாக இருக்கிறார். பெங்களூரு டெஸ்டில் அவர் தன்னுடைய முழங்காலை அசைப்பதில் கொஞ்சம் அசவுகரியத்தை உணர்ந்தார். அதனால் கேப்டன் ரோகித் சர்மா முன்னெச்சரிக்கையாக கீப்பிங் செய்வதில் ஓய்வு கொடுத்தார். ஆனால் 2-வது டெஸ்டில் அவர் கீப்பிங் பணியை செய்வார் என்று நம்புகிறேன். சுப்மன் கில்லை பார்க்கும் போது 2-வது டெஸ்டுக்கான அணித் தேர்வுக்கு தயாராக இருப்பார் என்றே தெரிகிறது' என்றார்.

    • முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் கைப்பற்றினார்.

    பெங்களூரு:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னும், ரிஷப் பந்த் 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 22 ரன்னும், டேரில் மிட்செல் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், நியூசிலாந்து அணி விளையாடியபோது பீல்டிங் செய்த சக வீரர் சர்பராஸ் கான் பொசிஷனில் இல்லாததைப் பார்த்த கேப்டன் ரோகித் சர்மா சத்தம் போட்டுக் கத்தினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    • ஐந்து இன்னிங்சில் மூன்று அரைசதம் அடித்துள்ளார் சர்பராஸ் கான்.
    • தேனீர் இடைவேளைக்குப்பின் முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன் குவித்துள்ளது. கில், ரோகித் சர்மா ஆகியோர் சதம் விளாசிய நிலையில் ஜெய்ஸ்வால், தேவ்தத் படிகல், சர்பராஸ் கான் ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர்.

    சர்பராஸ் கான் தனது ஐந்து இன்னிங்சில் 3 அரைசதம் விளாசியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய ஸ்கோர்களை எட்டிய அவர் இன்னும் மூன்று இலக்க ரன்னை (100) தொடவில்லை.

    நேற்றைய ஆட்டத்தில் சர்பராஸ் கான் தொடக்கத்தில் 30 பந்தில் 9 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின் 55 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 25 பந்தில் 42 ரன்கள் விளாசினார். மதிய தேனீர் இடைவேளையின்போது அவர் அவர் 59 பந்தில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டம் இழந்தார். சோயிப் பஷீர் வீசிய பந்தை ஆஃப் சைடு கட் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பந்து ஷார்ட் ஆக வீசப்படவில்லை. டாஸ்அஃப் ஆக வீசப்பட்ட பந்து சற்று கூடுதலாக பவுன்ஸ் ஆனது. இதனால் எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் கேட்ச் ஆனார்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்தையே அவர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதிர்கொண்ட விதம் சுனில் கவாஸ்கருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

    பொதுவாக டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு பந்தையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். அரைசதம் அடித்து விட்டோம், சதம் அடித்துவிட்டோம் என கவனக்குறைவாக விளையாடினால் விக்கெட்டை இழக்க நேரிடும்.

    கவாஸ்கர் டான் பிராட்மேனுடன் உரையாடியபோது, இது தொடர்பாக பிராட்மேன் கூறிய கருத்தை கவாஸ்கர் சர்பராஸ்கானுக்கு நினைவூட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "டான் பிராட்மேன் உடன் உரையாடும்போது அவர் என்னிடம் "நான் 200 ரன்கள் அடித்திருந்தாலும் கூட ஒவ்வொரு பந்தையும் நான் எதிர்கொள்ளும்போது, என் மனதில் நான் ஜீரோவில் இருக்கிறேன் என்றுதான் நினைத்துக் கொள்வேன்" என்றார். ஆனால் சர்பராஸ் கான் இங்கு இதுபோன்ற ஷாட்டை செசன் தொடங்கிய முதல் பந்திலேயே அடித்துள்ளார்" என்றார்.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்ட நிலையில், இந்தியா 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பும்ரா 19 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    ×