search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்தாம் வகுப்பு"

    • பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தேர்வானதாகவும், அந்த தேர்வுகள் டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளார்.
    • பணிக்கு சேர்ந்த மற்றவர்களின் கல்வி சான்றிதழின் உண்மை தன்மையை கண்டறியவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவைச் சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகரே (23). 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் கொப்பல் நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கோர்ட்டுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தூய்மை பணியாளராக வேலைபார்த்து வரும் பிரபுலட்சுமிகாந்த் லோகரே தான் 10-வது படித்து முடித்ததாக கூறி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தார். அதில் அவர் 625 மதிப்பெண்களுக்கு 623 மதிப்பெண் (99.5 சதவீதம்) பெற்றதாக இடம் பெற்றிருந்தது.

    இதன் அடிப்படையில் பிரபுலட்சுமிகாந்த் லோகரேவுக்கு கோர்ட்டில் ஊழியராக வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தான் தூய்மை பணியாளராக வேலை பார்த்த கோர்ட்டிலேயே ஊழியராக பணியை தொடங்கினார். இந்த நிலையில் அவர் படிப்பதற்கும், எழுதுவதற்கும் திணறியது நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியரை வரவழைத்து நீதிபதி முன்பு வாசிக்க வைத்தனர். அப்போதும் அவர் திணறினார்.

    இதையடுத்து அவரது கல்வி சான்றை பார்த்தபோது 7-ம் வகுப்பில் இருந்து அவர் நேரடியாக 10-ம் தேர்வு எழுதி அதில் 99.5 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனாலும் அவருக்கு கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் படிக்கவோ, எழுதவோ தெரியாததால் அவரது கல்விச் சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மோசடி நபர்களால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் இதேபோல் பணிக்கு சேர்ந்த மற்றவர்களின் கல்வி சான்றிதழின் உண்மை தன்மையை கண்டறியவும் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் போலீசார் பிரபுலட்சுமி காந்த் லோகரேவின் கையெழுத்தையும், 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாளில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே பிரபுலட்சுமிகாந்த் லோகரே தான் 2017, 2018-ம் ஆண்டில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தேர்வானதாகவும், அந்த தேர்வுகள் டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளார். 10-ம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீத தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த கோர்ட்டு ஊழியருக்கு எழுத, படிக்க தெரியாத சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதில், மண்டல வாரியாக 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.04 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 98.47 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 96.95 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.

    12 ஆம் வகுப்பு தேர்ச்சியில் முதல் 4 இடங்களையும் தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.

    உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (78.25%) , நொய்டா (80.27%) மண்டலங்கள் கடைசி இடங்களையே பிடித்துள்ளது.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதில், மண்டல வாரியாக, 99.75 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.60 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 99.30 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 99.26 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.

    10 ஆம் வகுப்பு தேர்ச்சியிலும் முதல் 4 இடங்களை தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.

    அசாம் மாநிலத்தின் கவுகாத்தி ( 77.94%) , உத்தரபிரதேசத்தில் நொய்டா (90.46%) மண்டலங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளது.

    • சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடந்தது.
    • நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    மத்திய கல்வி பாட வாரியம் (சி.பி.எஸ்.இ.) பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்த தேர்வை நாடு முழுவதும் 25,724 பள்ளி மாணவ-மாணவிகள் 7,603 மையங்களில் எழுதினார்கள். 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.60 சதவீதமாகும்.

    கடந்த ஆண்டை விட 0.48 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    அகில இந்திய அளவில் சென்னை மண்டலம் தேர்ச்சி விகிதத்தில் 3-வது இடத்தில் உள்ளது. திருவனந்தபுரம் 99.75 சதவீதம் பெற்று முதலிடமும், விஜயவாடா 99.60 சதவீதத்துடன் 2-வது இடமும், சென்னை 99.30 சதவீதத்துடன் 3-வது இடமும் பெற்றுள்ளது.

    • புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 553 மாணவர்கள் பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
    • அறிவியலில் 3 பேரும், சமூகவியலில் 4 பேர் என 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.

    இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 289 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 590 மாணவர்கள், 7 ஆயிரத்து 362 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 952 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 6 ஆயிரத்து 527 மாணவர்கள், 6 ஆயிரத்து 801 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.14 ஆகும்.

    இதில் புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 924 மாணவர்கள், 3 ஆயிரத்து 99 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 86 மாணவர்கள், 2 ஆயிரத்து 617 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 703 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளிகளில் மட்டும் 78.08 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவையில் மட்டும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 267 மாணவர்கள், 2 ஆயிரத்து 430 மாணவிகள் என 4 ஆயிரத்து 697 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆயிரத்து 713 மாணவர்கள், 2 ஆயிரத்து 124 மாணவிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 837 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவையில் அரசு பள்ளிகள் மட்டும் 81.69 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    காரைக்காலில் 657 மாணவர்கள், 669 மாணவிகள் என மொத்தம் 1,326 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 373 மாணவர்கள், 493 மாணவிகள் என மொத்தம் 866 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    காரைக்காலில் அரசு பள்ளிகளில் 65.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 289 அரசு, தனியார் பள்ளிகள் 107 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 90 பள்ளிகளும், காரைக்காலில் 17 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 108 அரசு பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 7, காரைக்காலில் ஒரு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 553 மாணவர்கள் பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ஆங்கிலத்தில் 20 பேர், கணிதம் 355 பேர், அறிவியல் 77 பேர்,சமூகவியலில் 101 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் புதுவை, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதத்தில் 15 பேரும், அறிவியலில் 3 பேரும், சமூகவியலில் 4 பேர் என 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

    மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ×