search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலியோ"

    • இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
    • நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

    பாலஸ்தீன நகரங்களின்மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். தொடர் போரால் காசா நகரம் முழுவதுமாக உருக்குலைந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களும் சுகாதார சேவைகளும் கிடைக்காமல் தோற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது. இதனை முன்னிட்டு இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு  தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும் நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன.

     

    அந்த வகையில், நேற்றைய தினம் நாசர் மருத்துவமனை வார்டுகளில் அடையாள முகாம் நடத்தி, சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இந்நிலையில், நேற்றய தினம் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் சொட்டு மருந்து முகாம்களுக்கு தயாரான நிலையில், காசா பகுதியில் அமைந்த அகதிகள் முகாம்களில் ஒன்றான நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காசாவில் நேற்று அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

    • இயந்திர நுரையீரலுக்குள் 70 ஆண்டுகள் வாழ்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞராக மாறினார்
    • போலியோ ஒரு நபரின் முதுகுத் தண்டுவடத்தை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்தும்

    அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6-வது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது கழுத்துக்கு கீழ் உள்ள பாகங்கள் செயல் இழந்து முடங்கினார். இதனையடுத்து சுவாசிக்க முடியாமல் அவர் சிரமப்பட, டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு அவசர மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் 600 பவுண்டுகள் (272 கிலோ கிராம்) எடையுள்ள இயந்திர நுரையீரலின் உதவியுடன் அவர் உயிர் பிழைத்தார். பின்பு வாழ்நாள் முழுவதும் அந்த உலோகக் கட்டமைப்பிற்குள் வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

    இப்படி 70 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் நேற்று (மார்ச் 12) உயிரிழந்துள்ளார். இயந்திர நுரையீரலுடன் 70 ஆண்டுகள் வாழ்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞராக மாறினார். பின்னர் எழுத்தாளராக ஆனார். இவரின் கதை உலகம் முழுவதும் உள்ள மக்களை ஈர்த்தது.

    பால் அலெக்சாண்டர் இறப்பு குறித்து பேசிய அவரது சகோதரர் பிலிப், "எனது சகோதரரின் நிதி திரட்டலுக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது அவரது கடைசி சில வருடங்களை மன அழுத்தமின்றி வாழ அனுமதித்தது" என தெரிவித்துள்ளார்.

    போலியோ வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவுகிறது. போலியோ ஒரு நபரின் முதுகுத் தண்டுவடத்தை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

    ×