என் மலர்
நீங்கள் தேடியது "எலிஸ் பெர்ரி"
- மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெர்ரி 49 ரன்கள் குவித்தார்.
- பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி மும்பையில உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 20-வது மற்றும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.
இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிசுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில் 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 65 ரன்கள் திரட்டினர். எலிஸ் பெர்ரி 49 ரன்களுடன் (38 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.
அடுத்து களம் இறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் 49 ரன்கள் குவித்ததன் மூலம் ஆர்சிபி அணி வீராங்கனை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் பெங்களூரு வீராங்கனை எலிஸ் பெர்ரி முதலிடத்தை பிடித்தார். அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 972 ஆக (25 ஆட்டம்) உயர்ந்தது. டெல்லி கேப்டன் மெக்லானிங் 939 ரன்களுடன் (26 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.
- உ.பி. வாரியர்ஸ் அணிக்கெதிராக அடித்த சிக்ஸ் பரிசளிக்க நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை தாக்கியது.
- உடைந்த கண்ணாடியை டாடா ஃபிரேம் செய்து எலிஸ் பெர்ரிக்கு பரிசாக அளித்துள்ளது.
பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆர்சிபி- உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கடந்த 4-ந்தேதி சின்னசாமி மைதானத்தில் மோதின. அப்போது ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அடித்த பந்து மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே தொடரில் சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த காரின் கண்ணாடியை தாக்கியது. இதில் கண்ணாடி உடைந்து சிதறியது.
இந்த நிலையில் ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், உடைந்த கார் காண்ணாடியை ஃப்ரேம் (Frame) செய்து எலிஸ் பெர்ரிக்கு டாடா பரிசாக அளித்துள்ளது. அத்துடன் அதில் "பெர்பரி பவர்புல்பஞ்ச் (PerryPowerfulPunch)" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 வயதான எலிஸ் பெர்ரி வலது கை பேட்ஸ்மேன் ஆவார். இந்த சீசனிலா் எலிஸ் பெர்ரி 8 போட்டிகளில் 312 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக எலிமினேட்டர் போட்டியில் 50 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எலிஸ் பெர்ரி 9 போட்டிகளில் 347 ரன்கள் விளாசினார்.
- ஷ்ரேயங்கா பாட்டீல் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பெண்களுக்கான பிரீமியர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் லீக்கில் ஆர்சிபி பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இதனால் அந்த அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டி வருகிறார்கள்.
இந்த தொடரில் ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் 9 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 347 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை வென்றார். அவரது ஸ்கோரில் 41 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். சராசரி 69.4 ஆகும். டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் 4 அரைசதங்களுடன் 331 ரன்கள் எடுத்து 2-வது இடத்தை பிடித்தார்.

எலிஸ் பெர்ரி
அதேபோல் பந்து வீச்சிலும் ஆர்சிபி வீராங்கனைகள் அசத்தினர். ஷ்ரேயங்கா பாட்டீல் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். மற்றொரு ஆர்சிபி வீராங்கனை 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும், மோலினிக்ஸ் 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.
- எலிஸ் பெர்ரி அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை வென்றார்.
- ஷ்ரேயங்கா பாட்டீல் பர்பிள் தொப்பி மற்றும் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை வென்றார்.
பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த வரும் அறிமுகமானது. ஐந்து அணிகள் கொண்ட அறிமுகமான முதல் தொடரில் 4-வது இடம் பிடித்து பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
ஆனால் இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் களம் இறங்கியது. கடந்த முறை புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இரண்டு முறை லீக் சுற்றில் தொல்வியடைந்தது. என்றாலும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி, கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பையை எலிமினேட்டர் சுற்றில் வெறியேற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியில் ஷ்ரேயங்கா பாட்டீல் அபாரமாக பந்து வீச டெல்லி அணி 113 ரன்னில் சுருண்டது. எலிஸ் பெர்ரி அபாரமாக பேட்டிங் செய்த கடைசி ஓவரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டத்துடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் பர்பிள் தொப்பி, வளர்ந்து வீரம் வீராங்கனை விருது, ஃபேர் பிளே விருது என நான்கு விருதுகளையும் ஆர்சிபி வீராங்கனைகள் தட்டிச் சென்றனர்.

எலிஸ் பெர்ரி
9 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 347 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை வென்றார். அவரது ஸ்கோரில் 41 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். சராசரி 69.4 ஆகும். டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் 4 அரைசதங்களுடன் 331 ரன்கள் எடுத்து 2-வது இடத்தை பிடித்தார்.

ஷ்ரேயங்கா பாட்டீல்
ஷ்ரேயங்கா பாட்டீல் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். மற்றொரு ஆர்சிபி வீராங்கனை 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும், மோலினிக்ஸ் 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.
ஷ்ரேயங்கா வளர்ந்து வரும் வீராங்கனை விருதையும் வென்றார். உ.பி. வாரியர்ஸ் அணியின் தீப்தி சர்மா இந்த தொடரின் மதிப்புமிக்க வீராங்கனை என்ற விருதை வென்றார்.
மொத்தமாக ஏறக்குறைய அனைத்து விருதுகளும் ஆர்சிபி வீராங்கனைகள் சுருட்டினர்.