search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்காணம்"

    • பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.
    • பொதுமக்கள் பசுமாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு சென்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன். விவசாயி. இவரது விவசாய தோட்டத்தில் பசு மாடுகள் வளர்க்கிறார். அதில் ஒரு பசுமாடு சினையாக இருந்தது. இந்நிலையில், நேற்று அந்த மாடு அடுத்தடுத்து இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்றது.

    இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் பசுமாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு சென்றனர். பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.

    கலப்பின மாடுகளுக்கு, செயற்கை கருத்தரிப்பு முறை கையாளப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பில் சினை பிடித்த பசுமாடு, 2 கன்றுகள் ஈன்றுவது அடிக்கடி நடக்கிறது. பசுவையும், கன்றுகளையும் நன்கு பராமரிக்க மரக்காணம் கால்நடைத் துறையின் ஆலோசனைகள் தேவைப்படுவதாகவும் அவர்கள் நேரில் பார்வையிடவும் விவசாயி கதிரவன் கோரிக்கை வைத்துள்ளார்.

    • பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.
    • ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கவுசல்யாவிற்கும் கடந்த வாரம் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது குழந்தைகளான ஜோவிதா (4), ஒன்றரை வயது பெண் குழந்தை சஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்திற்கு கடந்து 10-ந் தேதி வந்துவிட்டார்.

    இவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மதியம் வெளியில் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் என உறவினர்கள் நினைத்திருந்தனர்.

    இந்த நிலையில் கூனிமேடு கடற்கரையோரம் ஒரு பெண் குழந்தையின் உடலும், அனுமந்தைகுப்பம் கடற்கரை ஓரம் ஒரு பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இத்தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

    பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்த போது, கரை ஒதுங்கி கிடந்த குழந்தைகளின் உடல் ஆனந்தவேலுவின் பெண் குழந்தைகள் என தெரியவந்தது. உடனடியாக அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், 2 பெண் குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தவேலு தனது குழந்தைகளுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகி விட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனந்தவேலு அல்லது அவரது உடல் கரை ஒதுங்கினால் மட்டுமே நடந்தது என்ன என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகளின் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை.
    • கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த அனைத்து பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை நடத்துவது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு கடந்த 7 வருடங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அரசு அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் எவ்வித பிரச்சனையும் உண்டாகாமல் இருக்க கோவில் திருவிழாவை நடத்தாமல் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 7 ஆண்டு களாக திருவிழா நடைபெறவில்லை.


    இந்நிலையில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் சார்பில் எங்கள் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதை அரசு அதிகாரிகள் சட்டவிதிகளை பயன்படுத்தி தடுக்கின்றனர்.

    அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கோவிலுக்கு வழக்கம்போல் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு அதிகாரிகள் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

    மேலும் அரசு சார்பில் எங்களுக்கு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் திரும்ப அரசிடமே ஒப்படைப்போம் என கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.

    ×