என் மலர்
நீங்கள் தேடியது "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்"
- 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது.
- நிதியாண்டு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளதால், அதே தேதியில் இந்த அரசாணை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு வழங்கும் தின கூலியை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது.
நிதியாண்டு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளதால், அதே தேதியில் இந்த அரசாணை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு 8.5 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.319 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 27 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரிக்கும் 319 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் உயர்த்தப்பட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக அரியானாவில் 374 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 234 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது.
The Centre notifies the latest revision in MGNREGA wages pic.twitter.com/gcq2mrFWn7
— ANI (@ANI) March 28, 2024
- ஏழை தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் மிகவும் தாமதமாக ஊதியம் வழங்கப்படுகிறது.
- அரசு இவற்றை கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் மக்களவையில் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் குறித்த நேரத்தில் ஊதியம் கிடைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
நாட்டில் பெருகி வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தினமும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 500 வழங்க வேண்டும். ஏழை தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் மிகவும் தாமதமாக இந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
அரசு இவற்றை கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- MGNREGS என்பது கிராமப்புற இந்தியாவிற்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும்.
- தமிழ்நாட்டில் சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் இந்த திட்டப் பணிகளில் பங்கேற்று வருகின்றனர்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற இந்தியாவிற்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும். இது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமியப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடங்கப்பட்ட நாள் முதல் தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பல்வேறு அளவுகோல்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் 76 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர் என்றும், 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 29% தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டில், 06.01.2025 வரை 20 கோடி மனித உழைப்பு நாட்களாக இருந்த நிலையில், தமிழ்நாடு ஏற்கனவே 23.36 கோடி மனித உழைப்பு நாட்களை எட்டியுள்ளது என்றும் தமிழ்நாட்டிற்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாட்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கனவே 23.11.2024 அன்று ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்து விட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 1,056 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களின் முதன்மையான மற்றும் முக்கியமானதுமானதுமான அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை, ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது என்பதை தாம் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், இத்திட்டத்தின் கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமரை தாம் கேட்டுக்கொள்வதாகவும், தமிழ்நாட்டில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போன்று ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.