என் மலர்
நீங்கள் தேடியது "ராயல் சேலஞ்சர் பெங்களூரு"
- பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.
- பெங்களூரு அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
முதல் போட்டியில் கொல்கத்தாவை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்திய பெங்களூரு, 2 ஆவது போட்டியில் சென்னையை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தியது.
இப்போது 3 ஆவது போட்டியில் குஜராத் அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது,. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.
லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள். அதாவது ஒரு போட்டி பெங்களூரில் அடுத்த போட்டி வெளியூரில் என ஆர்.சி.பி. அணி விளையாடும் போட்டிகளில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணை பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
ஆர்.சி.பி. அணி ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளது. ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணையை பாருங்கள். ஒருபோட்டி பெங்களூரில், அடுத்த வெளியூரில், மறுபடியும் பெங்களூரில் அடுத்தப்போட்டி வெளியூரில்.. இது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.
இதுபோன்ற ஒரு சவாலான சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. ஆனால் அது அவர்களின் பலமாகவும் இருக்கலாம்.
கொல்கத்தாவில் நடப்பு சாம்பியன் கே.கே.ஆர். அணியை வீழ்த்தினார்கள். சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தினார்கள். தற்போது நல்ல ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதல் இடத்தில உள்ளது" என்று தெரிவித்தார்.
- குறைந்த தூரம் பயணிக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இருக்கிறது.
- ஐ.பி.எல். லீக் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 8,536 கிலோமீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறது.
திருவனந்தபுரம்:
கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விரும்பி பார்க்கும் போட்டியாக ஐ.பி.எல். உள்ளது. 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு அணி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள்.
பேட்டிங்கில் அனைத்து அணிகளுமே அதிரடி காட்டுவதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ.பி.எல். போட்டி பெரும் விருந்தாக இருக்கிறது. 18-வது ஐ.பி.எல். போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை(22-ந்தேதி) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் போட்டி நடக்கும் நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கிறார்கள்.
போட்டியில் பங்கேற்கும் நேரம் மிகக் குறைவு என்றாலும், பயணிக்கும் தூரம் மற்றும் நேரம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதில் அதிக தூரம் பயணிக்கும் அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது.
சுமார் 2 மாதங்கள் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட பெங்களூரு அணி பல நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கிறது. அந்த அணியின் வீரர்கள் லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்.
நாளை முதல் போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா சென்றுள்ள அந்த அணி வீரர்கள், நாட்டின் தெற்கில் உள்ள சென்னைக்கு வருகிறார்கள். பெங்களூரு அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் 1,500 கிலோமீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்க வேண்டி உள்ளது.
ஐ.பி.எல். கோப்பையை இந்த முறையாவது வென்று விட வேண்டும் என்ற இலக்குடன் விளையாட உள்ள பெங்களூரு அணி வீரர்களுக்கு அதிக தூர பயணம் என்பது சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதே நேரத்தில் குறைந்த தூரம் பயணிக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இருக்கிறது. அந்த அணி ஐ.பி.எல். லீக் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 8,536 கிலோமீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறது. இது அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஐதராபாத் அணி இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் 4 போட்டிகளை சொந்த மைதானமான ஐதராபாத்தில் விளையாடுகிறது. அந்த அணி வீரர்கள் முதல் வெளியூர் போட்டிக்காக 500 கிலோ மீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறார்கள். இதேபோல் மற்ற அணிகளும் பயணிக்கும் தூரம் தொடர்பான விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 16,184 கிலோமீட்டரும், பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் 14,341 கிலோமீட்டரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் 13,537 கிலோ மீட்டரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 12,730 கிலோமீட்டரும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் 12,702 கிலோ மீட்டரும், குஜராத் டைட் டன்ஸ் அணி வீரர்கள் 10,405 கிலோமீட்டரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர்கள் 9,747 கிலோ மீட்டரும், டெல்லி கேப்பிட் டல்ஸ் அணி வீரர்கள் 9,270 கிலோமீட்டரும் விமானத்தில் பயணிக்கிறார்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட நிலையில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணி வீரர்கள் போட்டிகளில் விளையாட ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பறக்க வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் (277 ரன்கள்) என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது
- 49 ரங்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு அணியின் சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமலே உள்ளது
ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.
பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் (277 ரன்கள்) என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது. இதற்கு முன்பு பெங்களூரு அணி 263 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
Highest score in IPL: SRH - 277/3 v MILowest score in IPL: RCB - 49/10 v KKRWho's breaking the other RCB record? ? pic.twitter.com/Z7BuvCxcgf
— CricTracker (@Cricketracker) March 27, 2024
சொன்னபோனால் இந்த போட்டிக்கு முன்பு வரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் என்ற 2 சாதனையையும் பெங்களூரு அணி தான் வைத்திருந்ததது. 49 ரன்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு அணியின் சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமலே உள்ளது.
இந்நிலையில், நேற்றைய போட்டிக்கு பிறகு, பெங்களூருவில் அதிகபட்ச ஸ்கோர் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் பெங்களூருவில் குறைந்த பட்ச ஸ்கோர் சாதனையை முறியடிக்கவே முடியாது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதே போல், ஐபிஎல் வரலாற்றில், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை பெங்களூரு அணி வென்றதில்லை. ஆனால் பெண்கள் பிரிமியர் லீக் ஆரம்பித்த 2-வது வருடத்திலேயே பெங்களூரு அணி கோப்பையை தட்டி தூக்கியது. அந்நேரமும் பெங்களூரு அணியை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எல்லீஸ் பெரி அதிரடியாக ஆடி 43 பந்தில் 2 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 81 ரன் எடுத்து அவுட்டானார்.
ரிச்சா கோஷ் 28 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 26 ரன்னும் எடுத்தனர்.
மும்பை சார்பில் அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். நாட் சீவர் பிரண்ட் 21 பந்தில் 42 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் அமன்ஜோத் கவுர் போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். அமன்ஜோத் கவுர் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.