என் மலர்
ஐ.பி.எல்.

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

- முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எல்லீஸ் பெரி அதிரடியாக ஆடி 43 பந்தில் 2 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 81 ரன் எடுத்து அவுட்டானார்.
ரிச்சா கோஷ் 28 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 26 ரன்னும் எடுத்தனர்.
மும்பை சார்பில் அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். நாட் சீவர் பிரண்ட் 21 பந்தில் 42 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் அமன்ஜோத் கவுர் போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். அமன்ஜோத் கவுர் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.