என் மலர்
நீங்கள் தேடியது "ஐடி துறை"
- காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்.
- காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்.
ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பழைய பான் எண்ணை (PAN Number) பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிபப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- படித்த இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு உண்டான வேலைகள் தற்போது கிடைப்பதில்லை.
- 3000 இளைஞர்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கு உண்டான வேலைகள் கிடைக்காததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. .
இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வெளியே வாக்-இன் நேர்காணலுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாசலில் வரிசையாக காத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
100 காலி பணியிடங்களுக்காக கிட்டத்தட்ட 3000 இளைஞர்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.