என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் சோர்வு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.
    • வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

    பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப்படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.

    அறிகுறிகள்:

    · பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்

    · வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.

    · வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

    · சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்

    · வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.

    · இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல். நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

    · பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.

    · ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

    · அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

    · தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

    · சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

    · அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

    · அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

    இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப்பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

    வெள்ளைபடுதலை தவிர்க்க

    · உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    · பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    · உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

    · நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    வீட்டுமருத்துவம்

    * கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

    * யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    * அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

    * ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

    வெள்ளைப்படுதலுக்கு வர்மப் பரிகார மருந்து

    நன்னாரி வேர் - 10 கிராம்

    அதிமதுரம் - 5 கிராம்

    காய்ந்த திராட்சை - 5 கிராம்

    மணத்தக்காளி விதை - 5 கிராம்

    சீரகம் - 1 ஸ்பூன்

    சோம்பு - 1 ஸ்பூன்

    காய்ந்த செம்பருத்திப் பூ - 5 கிராம்

    காய்ந்த ரோஜா இதழ் - 5 கிராம்

    சின்ன வெங்காயம் - 3

    நன்னாரி வேரை எடுத்து சிதைத்து அதன் உள்ளே உள்ள வேரை நீக்கி சதையை மட்டும் எடுத்து, அதனுடன் அதிமதுரம், மணத்தக்காளி விதை, காய்ந்த செம்பருத்திப் பூ, காய்ந்த ரோ ஜா இதழ், சீரகம், சோம்பு இவற்றை சேர்த்து நன்றாக இடித்து, அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த திராட்சை சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி அரை கப் அளவாக வந்தவுடன் வடிகட்டி தினமும் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் அடியோடு நீங்கும்.

    · சிறுநீர் வெளியேறும்போது சுண்டி சுண்டி இழுப்பது மாறிவிடும்.

    · மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிக குருதிப் போக்கை மாற்றும், ஒழுங்கற்ற குருதிப்போக்கை சரி செய்யும்.

    · ரத்தத்தை சுத்தப்படுத்தும். கண்களைச் சுற்றி உள்ள கருப்பு, கழுத்திலுள்ள கருப்பு, இடுப்புப்பகுதியில் உள்ள கருப்பு போன்றவற்றை மாற்றும்.

    · உடலிலுள்ள தேவையற்ற உப்புகளை நீக்கி முகத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

    · மன உளைச்சல் நீங்கும். கை கால் குடைச்சல் நீங்கும்.

    சிறுநீர் தண்ணீர்போல் வெளியேறும்வரை, இந்த கஷாயத்தை அருந்தலாம். இந்த கஷாயம் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். தேவைப்பட்டால் கஷாயத்துடன் தேன் கலந்து அருந்தலாம்.

    உணவு முறை

    · அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.

    · உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    · உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    · தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    * சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * முக்குளிக் கீரைச் சாறில் தான்றிக்காய் தோலை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * துயிலிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * சாணாக்கிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

    மேற்கண்ட மருந்துகளை முறையாக செய்து அருந்தினால், வெள்ளைப்படுதல்  பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

    • சில தவறான பழக்கங்கள் ‘ஸ்லோ பாய்சன்’ எனப்படும்.
    • தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல.

    அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் சில தவறான பழக்கங்கள் 'ஸ்லோ பாய்சன்' எனப்படும் மெதுவாக கொல்லும் விஷம் போல செயல்பட்டு படிப்படியாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் பற்றியும் பார்ப்போம்.


    மன அழுத்தம்

    எப்போதாவது மன அழுத்தத்திற்கு ஆளாவது பிரச்சனையில்லை. ஆனால் தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல. அது நாள்பட்ட மன அழுத்தமாக மாறினால் ஆபத்தானது. ஏனெனில் நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' எனப்படும் அமைதியான கொலையாளியோடு தொடர்புடையது.



    உடலையும், மனதையும் படிப்படியாக சோர்வடையச் செய்துவிடும். நாளடைவில் மன அழுத்தம் நிரந்தரமாக குடிகொண்டுவிட்டால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.


    நலம் விரும்பிகள் இல்லாத நிலை

    நம் நலனில் அக்கறை கொள்பவர்களும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எதிர்மறையான விஷயங்கள், கருத்துக்களை பேசுபவர்களுடன் பழகுவதோ, அவர்களுடைய ஆலோசனையை கேட்டறிவதோ நம்மை பலவீனமாக்கும்.

    குறிப்பாக உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்கள், உங்கள் சாதனைகளை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள், தேவையற்ற எண்ணங்களை உங்களிடத்தில் விதைப்பவர்கள், எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பது மன ஆரோக்கியத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.


    துரித உணவு

    துரித உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். ஆனால் தொடர்ந்து அதனை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இந்த உணவுகளில் பெரும்பாலும் கொழுப்புகள், சோடியம், சர்க்கரை அதிகமாக இருக்கும். அவை மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய்க்கு வித்திடும்.


    வேலையில் நாட்டமின்மை

    எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். வேலையை வெறுப்பது, விருப்பமின்றி செய்வது உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் கேடு விளைவிக்கும். அதிருப்தி, தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் வெளிப்படும். நாளடைவில் மெதுவாக கொல்லும் விஷமாக மாறும்.


    உணர்ச்சிகளை அடக்குதல்

    நம் நலனில் அக்கறை கொண்டவர்கள் திடீரென்று எதிர்மறையாக நடந்து கொள்ளும்போது கடும் அதிருப்தி உண்டாகும். அந்த சமயத்தில் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வது மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம்.

    ஆனால் தொடர்ந்து உணர்ச்சிகளை அடக்குவது, மனதில் பதிந்திருக்கும் ஆழ் மனக்கவலைகளை வெளிக்காட்டாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். காலப்போக்கில் உடலையும், மனதையும் பாதிக்கும் நோயாக மாறிவிடும். எனவே உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.


    தொடர்ந்து கவலையாக இருத்தல்

    தொடர்ந்து கவலையாகவோ, பதற்றமாக இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். தொடர்ந்து கவலைப்படுவது மன அழுத்தத்தை தூண்டிவிடும். அதனால் கார்டிசோல் ஹார்மோனின் அளவு உயர்வதற்கு வழிவகுக்கும்.

    நாளடைவில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பு மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் எடை அதிகரிப்புக்கும், நோய் எதிர்ப்பு தன்மை பலவீனமடைவதற்கும், ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் காரணமாகிவிடும்.


    சோர்வாக காட்சி அளித்தல்

    உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, தொடர்ந்து சோர்வுக்கு ஆளாகுவது மனச்சோர்வு, நாள்பட்ட சோர்வு மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    இதற்கு இடம் கொடுக்காமல் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். சின்ன விஷயமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டும். அந்த மகிழ்ச்சியான மன நிலையை உங்கள் நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    காலை உணவைத் தவிர்த்தல்

    காலை உணவுதான் அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    ×