என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுனில் நரைன்"
- மும்பை மற்றும் டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதி வருகிறது.
- மும்பை அணிக்காக ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார்.
புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா, உள்ளிட்ட 12 அணிகள் மோதுகிறது. இந்த போட்டிகள் திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில் மும்பை மற்றும் டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் மும்பை அணியில் விளையாடும் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீசும் போது சுனில் நரைன் ஸ்டைலில் பந்து வீசி அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#ShreyasIyer imitates bowling action of Sunil Narine in Buchi Babu 2024 tournament
— Gowri Sankar S (@GowriS_Official) August 28, 2024
During the 90th over of the match,the Mumbaikar was seen hiding and gripping the ball behind his back before starting the follow-up runup & delivered the ball in a similar action to that of #Narine pic.twitter.com/PSARTBe8EF
ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுனில் நரைன் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுனில் நரைன் இந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 488 ரன்கள் விளாசினார்.
- 17 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2024 சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். பேட்டிங்கில் 2 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சாளரான சுனில் நரைன் இந்த தொடரில் பேட்டிங்கில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
15 போட்டிகளில் 14 இன்னிங்சில் பேட்டிங் செய்து மொத்தம் 488 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 109 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் 3 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் பந்து வீச்சில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இறுதி போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் வெளியில் இருந்து வந்த இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது. நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற சுனில் நரைன் சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுனில் நரைன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக கொல்கத்தா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு நன்றி.
அதேபோல் நேற்றிரவு ஆதரவை வெளிப்படுத்திய சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு சிறப்பு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
- டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை நரைன் படைத்துள்ளார்.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 முறை சுனில் நரைன் டக்அவுட் ஆகியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே சுனில் நரைன் கிளீன் போல்டு ஆனார். இதன்மூலம் நரைன் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
அவர் 44-வது முறையாக டக்அவுட் ஆகி முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் அலெக்ஸ் ஹால்ஸ் 43 முறை டக்அவுட் ஆகி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுனில் நரைன் அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 முறை சுனில் நரைன் டக்அவுட் ஆகியுள்ளார்.
அதிகமுறை டி20-யில் டக்அவுட் ஆன வீரர்கள்:
சுனில் நரைன் (44)
அலெக்ஸ் ஹால்ஸ் (43)
ரஷீத் கான் (42)
பால் ஸ்டிர்லிங் (32)
கிளென் மேக்ஸ்வெல் (31)
ஜேசன் ராய் (31)
- டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
- இதில் விளையாடக் கோரி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன்.
இதற்கிடையே, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடக் கோரி அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, சுனில் நரைன் ஓய்விலிருந்து வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என அழைப்புகள் வந்தன. நான் ஓய்விலிருந்து திரும்ப வந்து டி20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் தொடர்ந்து ஆதரிப்பேன். அவர்கள் கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
- நேற்று நடைபெற்ற கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சுனில் நரைன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்
- இதன் மூலம் 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உள்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் பகுதி நேர பேட்ஸ்மேனான சுனில் நரேன் இந்த சீசனில் விராட் கோலி (361), ரியன் பாராக (284) ஆகியோருக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை நெருங்கி வருகிறார்.
இந்நிலையில் தம்முடைய முதல் சதத்திற்கும் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடுவது குறித்தும் சுனில் நரேன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு போட்டியிடுவீர்கள் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் அதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக ஓப்பனிங்கில் விளையாடவில்லை. இருப்பினும் அணிக்கு மீண்டும் வந்துள்ள கௌதம் கம்பீர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்.
இந்த தொடரில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார். எனவே 14 போட்டிகளிலும் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு சிறந்த துவக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய வேலையாகும்" என்று கூறினார்.
- கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
- அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம்.
கொல்கத்தா:
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார்.
இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார்.
நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் வரும் ஜூன் 1-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை அணியில் சுனில் நரைன் இடம் பெறுவாரா என ராஜஸ்தான் வீரர் ரோவ்மன் பவலிடம் கேள்வி கேட்க்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
220 ரன்களை சேசிங் செய்தது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது. நான் களமிறங்கிய போது சுனில் நரைனை அட்டாக் செய்யும் திட்டத்துடன் தான் களமிறங்கினேன்.
ஏனென்றால் கொல்கத்தா அணியின் சிறந்த பவுலர் நரைன் தான். அதேபோல் சூழலும் அதற்கேற்றபடி அமைந்தது. அதனால் எனது பலத்தை அறிந்து, ஷாட்களை விளையாடினேன். அது ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
ஆனால் எங்கள் எல்லோரையும் அவர் தவிர்த்துவிட்டு செல்கிறார். அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம். டி20 உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன் நிச்சயம் மனதை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.
ராஜஸ்தான் அணியின் சிந்தனையும், எண்ணமும் ஒன்றாக உள்ளது. அதேபோல் பெஞ்சில் உள்ள வீரர்களுக்கும் சரியான விஷயங்கள் சரியான நேரத்தில் பகிரப்படுகிறது. சர்வதேச வீரரான எனக்கு சரியாக தகவல்கள் சொல்லப்படுவதை நிச்சயம் பாராட்ட வேண்டும். எங்கள் வீரர்கள் அனைவரும் நல்ல சூழலில் உள்ளோம்.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்காக நான் 4 அல்லது 5 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடி வருகிறேன். அதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் என்னை மேல் வரிசையிலும் களமிறக்கலாம். அடுத்த சில நாட்கள் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு நாட்களில் சங்கக்காராவின் காதுகளில் இதனை தொடர்ச்சியாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் சதம் அடித்து அசத்தினார்.
- கொல்கத்தா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உல்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:-
107 & 3/21 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக பஞ்சாப், பெங்களூரு, 2011
175* & 2/5 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக புனே, பெங்களூரு, 2013
104* & 2/38 - ஷேன் வாட்சன் (ஆர்ஆர்) எதிராக கேகேஆர், பிரபோர்ன், 2015
106 & 1/13 - ஷேன் வாட்சன் (சிஎஸ்கே) எதிராக ஆர்ஆர், புனே, 2018
109 & 2/30 - சுனில் நரைன் (கேகேஆர்) எதிராக ஆர்ஆர், கொல்கத்தா, 2024
- சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார்.
- 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்தல் செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், பிலிப் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிலிப் சால்ட் 13 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி சிறப்பாக விளையாடி 18 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் சுனில் நரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 49 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது.
தொடர்ந்து விளையாடிய அவர் 56 பந்தில் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 17.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.
- நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் இஷான் சர்மா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட்- சுனில் நரைன் களமிறங்கினர். சால்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நரைனுடன் இளம் வீரர் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்து டெல்லி அணியின் பந்து வீச்சை சரமாரியாக விளாசினர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த ரஸல் (41) - ரிங்கு சிங் (26) அவர்களது பங்குக்கு அதிரடியை காட்டினார்.
இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்