என் மலர்
நீங்கள் தேடியது "ஷாப்பிங் மால்"
- தனது மகனுக்கு படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தினார்.
- "உங்கள் மகன் இறந்துவிட்டான்" என்ற செய்தியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.
பஞ்சாபில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் பஞ்சாபில் மொஹாலியில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றின் 4 ஆவது மாடியில் இருந்து அந்த மாணவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்த மாணவர் 17 வயது அபிஜித் என அடையாளம் காணப்பட்டார். தனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அன்றைய தினம் காலை 10 மணியளவில் காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒருவர் மாலின் நான்காவது மாடியில் இருந்து குதித்ததாகத் தெரிவித்தனர்.
ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது, அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

அபிஜித்தின் தந்தை மன்மோகன் சிங், தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த அன்று காலை, தனது மகனுக்கு படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தினார். இது ஒரு சிறிய வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.
பின்னர் அபிஜித் விதமாக வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். இந்நிலையில் "உங்கள் மகன் இறந்துவிட்டான்" என்ற செய்தியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இன்று பிற்பகல் 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) நுழைந்த ஒருவர் கையில் இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை வைத்து மற்றவர்களை தாக்கியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் நிலைமைகள் இன்னும் தெரியவில்லை என்று தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இனிமேல் யாரும் இங்கு வரவேண்டும் என்று காவல்துறை தரப்பில் இருந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்திய வம்சாவளி தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
- வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வணிக வளாகத்தில் புகுந்த ஆண் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் அவரை பிடித்து சுட்டுக்கொன்றது. இதனிடையே கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
அவருடைய பெயர் ஜோயல் காச்சி (40) என்பதும் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த அவர் மனநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் எவ்வித பயங்கரவாத தாக்குதலோ, திட்டமிட்ட சதியோ கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளியை பெண் போலீஸ் அதிகாரி எமி ஸ்காட் சம்பவ இடத்தில் லாவகமாக மடக்கி பிடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமயோசிதமாக செயல்பட்டு பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்திய எமி ஸ்காட்டுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளி தம்பதியினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். சிட்னி நகரை சேர்ந்த டெபாஷிஸ் சக்ரபர்த்தி-ஷாய் கோஷல் தம்பதி சம்பவம் நடந்தபோது வணிக வளாகத்தில் இருந்துள்ளனர். தாக்குதலின்போது அங்குள்ள சேமிப்பு கிட்டங்கியில் மறைந்திருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றி கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார். சம்பவம் நடந்த வணிக வளாக கட்டிடத்திற்கு நேரடியாக வந்த அவர், வணிக வளாகம் முகப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ட்ருஜிலோ.
- நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் மால் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ட்ருஜிலோவில் உள்ள ரியல் பிளாசா ஷாப்பிங் மாலில் இந்த விபத்து நடந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை இரவு மாலில் உணவு அருந்தும் அரங்கத்தில் கனமான இரும்பு கூரை அங்கிருந்த மக்கள் மீது இடிந்து விழுந்தது. உடனே அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் இறந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் வால்டர் அஸ்டுடிலோ நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.
மொத்தம் 78 பேர் காயடைந்தனர், அதில் 30 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 48 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இடிந்து விழுந்த கூரையின் பரப்பளவு 700 முதல் 800 சதுர மீட்டர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே 100க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் தேடுதல் பணியில் எஈடுபட்டுள்ளனர்.