என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசிகை"

    • 2005-ம் ஆண்டில் இந்தியா போட்டியின் போது ஜாகீர் ஐ லவ் யூ என ரசிகை ஒருவர் பெயர் பலகை வைத்திருந்தார்.
    • அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் அவர்களது அணியில் ஒவ்வொருவராக இணைந்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த தொடரில் லக்னோ அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் இணைந்துள்ளார். லக்னோ அணியின் முன்னாள் ஆலோசகராக இருந்த கம்பீருக்கு பதிலாக ஜாகீர் கான் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் ஜாகீர் கான் லக்னோ அணியில் இணைவதற்காக அணியினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருகை தந்தார். அப்போது ஹோட்டலில் ரசிகர்கள் கையில் பெயர் பலகையுடன் அவரை வரவேற்றனர். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஜாகீர்கானின் தீவிர ரசிகையும் இருந்தார்.

    20 ஆண்டுகளுக்குப் முன்பு பெங்களூருவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடினர். அப்போது இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகை ஒருவர் ஜாகீர் ஐ லவ் யூ என பெயர் பலகை வைத்திருந்தார். அதனை மைதானத்தின் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.

    இதனை ஓய்வு அறையில் ஜாகீர் கான் மற்றும் யுவராஜ் சிங் பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகையையும் ஜாகீர்கானை மாறி மாறி அந்த பெரிய திரையில் காண்பித்து கொண்டிருந்தனர். உடனே ரசிகை ஜாகீர் கானை பார்த்து ஐ லவ் யூ என தெரிவித்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.

    இதனை பார்த்த யுவராஜ், ஜாகீர் கான் சிரித்தனர். யுவராஜ் உடனே நீங்களும் முத்தம் கொடுங்கள் என தெரிவிக்க ஜாகீர் கானும் சிரித்தபடி பறக்கும் முத்தத்தை கொடுத்தார். இதற்கு ரசிகை வெட்கப்பட்டும் அவர் வைத்திருந்த பெயர் பலகையை வைத்து தனது முகத்தை மறைத்துக் கொள்வார்.

    இவர்கள் இரண்டு பேரும் செய்த செயலை மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சேவாக் சிரித்தபடி பார்த்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.

    அந்த ரசிகை அதே மாதிரி ஜாகீர் ஐ லவ் யூ என்ற பெயர் பலகையுடன் வெட்கத்தில் ஜாகீர் கானை பார்ப்பதும் அவரும் சிரித்தப்படி கடந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சம்பவத்தை ரீ கிரியேட் செய்யும் வகையில் லக்னோ அணி இதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    • கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.
    • இதில் ஹாட்ரிக் சிக்சர் அடங்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.

    20 ஓவர் முடிந்த நிலையில் ஓய்வு அறையை நோக்கி டோனி சென்று கொண்டிருந்த போது படியில் அவர் சிக்சர் அடித்த பந்து கிடந்தது. அதனை எடுத்து குட்டி ரசிகைக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விஜய்யின் நடிப்பு, நடனம், வசனம் என அனைத்தும் வள்ளியம்மாளை கவர்ந்துள்ளது.
    • ஒவ்வொரு படத்திலும் விஜய்யை ரசித்து வந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் விஜய்யை தனது மகனாகவே பாவித்து வருகிறார்.

    வி.கே.புரம்:

    நடிகர் விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் விஜய்யின் தீவிர ரசிகையாக மட்டுமின்றி, விஜயை தனது மகனாகவே பாவித்து வாழ்ந்து வருகிறார்.

    அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 65). இவருக்கு வெங்கடேசன் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார்.

    கணவரை இழந்த நிலையில் வள்ளியம்மாள் தனது மகனுடன் மன்னார்கோவில் கிராமத்தில் வசித்து வருகிறார். வள்ளியம்மாள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார்.

    விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு கடந்த 1992-ம் ஆண்டு வெளியானது. அப்படத்தை பார்த்த வள்ளியம்மாள் அன்று முதல் விஜய்யின் நடிப்பு பிடித்து அவரது ரசிகையாக மாறினார்.

    1993-ம் ஆண்டு வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் இணைந்து நடித்திருப்பார். அந்தப் படத்தையும் திரையில் பார்த்த வள்ளியம்மாள் விஜய்யின் தீவிர ரசிகையாக மாறத் தொடங்கினார். அன்று முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களை ஒன்று விடாமல் தியேட்டரில் சென்று பார்த்து வந்துள்ளார்.

    விஜய்யின் திரைப்படம் ஒரு தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடுகிறதோ, அதுவரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வள்ளியம்மாள் தவறாமல் அந்த படத்தை பார்த்து வருகிறாராம்.

    விஜய்யின் நடிப்பு, நடனம், வசனம் என அனைத்தும் வள்ளியம்மாளை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் விஜய்யை ரசித்து வந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் விஜய்யை தனது மகனாகவே பாவித்து வருகிறார்.

    கடந்த பல ஆண்டுகளாகவே வள்ளியம்மாள் ஊருக்குள் தனக்கு விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 2 மகன் அதில் நடிகர் விஜய் தான் எனக்கு மூத்த மகன் என்று கூறி வருகிறார். இதன் காரணமாகவே ஊருக்குள் வள்ளியம்மாள் பாட்டியை விஜய் வள்ளியம்மாள் என்று அழைத்து வருகின்றனர்.

    விஜய்யின் நினைவாக வள்ளியம்மாள் பாட்டி வீட்டில் ஆங்காங்கே விஜய் நடித்த படங்களின் புகைப்படங்கள் மற்றும் விஜய் தனது மனைவியுடன் இருக்கும் படங்களை பிரேம் செய்து மாட்டி வைத்துள்ளார்.

    தனது வீட்டு பீரோவில் விஜய்யின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த செய்திகளை பத்திரப்படுத்தி வருகிறார். விஜய் மீது தீராத அன்பை வள்ளியம்மாள் பாட்டி செலுத்தி வருகிறார்.

    வள்ளியம்மாள் கூறும் போது, நடிகர் விஜய் தான் எனக்கு தலைமகன். செந்தூரபாண்டி படம் பார்த்ததில் இருந்து விஜய்யை பார்க்க வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் ஆசை.

    விஜய் வரலாறு புத்தகம் மூலம் அவர் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ளேன். சினிமாவை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தது வருத்தம் தான். இருந்தாலும் அவர் அரசியலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். முதலமைச்சரோடு நின்று விடாமல் பிரதமராக வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.

    • உதித் நாராயண், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஒடியா, நேபாளி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
    • காதலன் படத்தில் 'காதலிக்கும் பெண்ணின்' பாடல் மூலம் தமிழில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.

    இந்தியாவின் பிரபல பாடகர்களுள் ஒருவராக விளங்குபவர், உதித் நாராயன். 90ஸ் மற்றும் அதற்கு பிந்தைய கால கட்டங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயண், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஒடியா, நேபாளி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

    நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள உதித் நாராயண், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் 'காதலிக்கும் பெண்ணின்' பாடல் மூலம் தமிழில் பின்னணி பாடகராக அறிமுகமானார். பின்னர் மிஸ்டர் ரோமியோ படத்தின் 'ரோமியோ ஆட்டம் போட்டால்', ரட்சகன் படத்தில் 'சோனியா சோனியா', ரன் படத்தில் 'காதல் பிசாசே', கில்லி படத்தில் 'கொக்கரக்கொ', யாரடி நீ மோகினி படத்தில் 'எங்கேயோ பார்த்த மயக்கம்', மதராசப்பட்டினம் படத்தில் 'வாம்மா துரையம்மா', குருவி படத்தில் 'தேன் தேன்', படிக்காதவன் படத்தில் 'ராங்கி ரங்கம்மா' உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

    இந்நிலையில் பல பாடகர்கள், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இணை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அப்படி, உதித் நாராயணும் உலகளவில் பல நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அப்படி, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த நிகழ்ச்சியில் உதித் நாராயண், டிப் பார்சா பானி என்ற பாடலை மேடையில் பாடிக்கொண்டிருந்தார். மேடையின் அருகே இருக்கும் ரசிகர்கள், மேடை மேல் நிற்கும் பிரபலங்கள் அல்லது பாடகர்களிடம் செல்பி கேட்பது வழக்கம். அது போல, உதித்திடமும், ஒரு ரசிகை, செல்ஃபி கேட்டு அருகே வந்தார். அப்போது செல்பி எடுத்துக்கொண்டிருந்த அந்த ரசிகை உதித்திற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

    இதை எதிர்பார்க்காத உதித், அதிர்ச்சியாவார் என்று பார்த்தால், குஷியாக, தனது வாயுடன் வாய் வைத்து அந்த ரசிகைக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதைப்பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் கத்தி உற்சாகப்படுத்தினர். அந்த பெண்ணும் சிரித்துக்கொண்டே சென்று விட்டார். அந்த ரசிகை மட்டுமல்லாமல் பல ரசிகைகளுக்கு அவர் முத்தமிட்டார்.

    இந்த வீடியோ சில மணி நேரத்தில் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, தற்போது ஒரு பெரிய விவாதமே நடைப்பெற்று வருகிறது. உதித் நாராயண் போன்ற ஒரு சீனியர் பாடகரிடம் இது போன்ற ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை எனவும், உதித் நாராயண் தனது எல்லையை மீறிவிட்டார் எனவும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பத்திற்கு உதித் நாராயண் சார்பில் இருந்து எந்த விதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. 

    ×