என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "மக்கள் வெளியேற்றம்"
- மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
- லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.
ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் கூறும்போது, காட்டுத்தீயில் பல கட்டமைப்புகள் அழிந்துள்ளன. ஆனால் சரியான எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 13 ஆயிரம் கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார். இன்று இரவு காற்று வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டுத்தீ இன்னும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.
- எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
- சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் தீவில் எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலையானது நள்ளிரவில் இருந்து 5 முறை பயங்கரமாக வெடித்தது. அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.
ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. எரிமலை வெடிப்பையடுத்து சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2,378 அடி உயரமுள்ள ருவாங் எரிமலையில் இருந்து குறைந்தது 6 கி.மீ. தொலைவில் இருக்குமாறு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
மேலும் எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலையின் வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்தியது. அதன்பின் மலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து 430 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.