என் மலர்
நீங்கள் தேடியது "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்"
- அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடிமக்கள் அல்லாத அனைவரும் அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
- தங்கள் முகவரியை மாற்றுபவர்கள் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாடு கடத்தப் பட்டனர். மேலும் அமெரிக்காவில் பல்வேறு விசாக்கள் மூலம் வசிக்கும் வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல் என்ற டிரம்பின் நிர்வாக உத்தரவின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும் அவர்களின் அடையாள ஆவணத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதற்கு இணங்கவில்லையென்றால் எந்த அடைக்கலமும் இருக்காது. அமெரிக்காவில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அல்லாத அனைவரும் படிவத்தை நிரப்பி அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
குடியேறிகளின் குழந்தைகளும் 14 வயது ஆன 30 நாட்களுக்குள் மீண்டும் பதிவு செய்து கைரேகைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 11-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தங்கள் முகவரியை மாற்றுபவர்களும் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும், தவறினால் அவர்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்-1பி உள்ளிட்ட செல்லுபடியாகும் விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் மீண்டும் படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை.
ஆனாலும், அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்களுடன் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதிகாரிகள் கேட்கும்போது அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.
அமெரிக்காவில் சுமார் 54 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
- அவர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றார் மம்தா பானர்ஜி.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பா.ஜ.க.வின் ரகசிய பங்காளிகள்.
மாநில போலீசாரை முற்றிலுமாக நிராகரித்து நீங்கள் எப்படி தேர்தலை நடத்த முடியும்?
மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடாது என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியா?
மத்திய அரசு திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.
இருசக்கர வாகனம் வைத்திருப்பவர் கூட அதன் பலனைப் பெறமுடியாது.
ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது.
நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் அவர்கள் (பா.ஜ.க) உங்கள் ஆதார் அட்டையையும், குடியுரிமையையும் பறிப்பார்கள். நான் விடமாட்டேன் என தெரிவித்தார்.
- 81 கோடி மக்களுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு நாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என கேள்வி எழுப்பினர்.
புதுடெல்லி:
கொரோனா பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த இடர்கள் மற்றும் அவர்களுக்கான நிவாரணம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சூர்ய கந்த் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
இதில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆகியோர் ஆஜராகினர்.
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.
விசாரணையின்போது நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
அந்தவகையில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து 81 கோடி மக்களுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உடனே நீதிபதிகள், 'அப்படியென்றால் வரி செலுத்துவோர் மட்டும்தான் விடுபட்டு இருக்கிறார்கள்' என சொலிசிட்டர் ஜெனரல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலைப்பார்த்து தெரிவித்தனர்.
அதேநேரம் வக்கீல் பிரசாந்த் பூஷன் தனது வாதத்தில், 'ரேஷன் கார்டு இல்லையென்றாலும் இ-ஸ்ராம் தளத்தில் பதிவு செய்த அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் வழங்க உத்தரவிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
உடனே நீதிபதிகள், 'எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும்?, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு நாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என கேள்வி எழுப்பினர்.
அப்போது பிரசாந்த் பூஷன், 'புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய அரசு வழங்கும் இலவச ரேஷனைப் பெறுவதற்கு ரேஷன் கார்டுகளை வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த கோர்ட்டு அவ்வப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது' என தெரிவித்தார்.
இவ்வாறு விவாதம் நீண்ட நிலையில், புலம் பெயர் தொழிலாளர் பிரச்சினை குறித்த இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை எனக்கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.