search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிப்பாறைகள்"

    • பனிப்பாறைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தன.
    • புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக உலகின் பல நாடுகளிலும் பனிப்பாறைகள் இழந்து வருகின்றன. இந்நிலையில் இதனை உணர்த்தும் வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாக டங்கன் போர்ட்டர் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், 15 வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு பெண்ணுடன் சுவிட்சர்லாந்தில் உள்ள ரோன் பனிப்பாறையின் முன்பு நின்று கொண்டு எடுத்த புகைப்படம் உள்ளது.

    அதில், பனிப்பாறைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தன. 2-வது புகைப்படத்தில் அவர் தற்போது அதே பனிப்பாறையின் முன்பு நின்று எடுத்த புகைப்படம் உள்ளது. அதில் பனிப்பாறை பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இமயமலைப் பகுதியில் உள்ள நதிகளுக்கு நன்னீர் ஆதாரங்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • மோரைன் அல்லது பனிக்கட்டி போன்ற இயற்கை அணைகள் உடைவதால் பனிப்பாறை ஏரிகள் அதிக அளவு உருகும் நீரை வெளியிடும் போது வெள்ளம் ஏற்படுகிறது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கால நிலை மாற்றம் மற்றும் வெயில் கொளுத்தி வருவதால் இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

    இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இமயமலைப் பகுதியில் இருக்கும் ஏரிகளின் விரிவாக்கத்திற்கும் புதிய ஏரிகள் உருவாவதற்கும், பனிப்பாறை விரிவடைதல் வழிவகுக்கிறது. பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் உருவாகும் இந்த நீர்நிலைகள் பனிப்பாறை ஏரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

    இமயமலைப் பகுதியில் உள்ள நதிகளுக்கு நன்னீர் ஆதாரங்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன. பனிப்பாறை விரிவடைவதால் ஏரி வெடிப்பு, பெரு வெள்ளங்கள் போன்ற குறிப்பிடத்தக்க அபாயங்களும் ஏற்படுகின்றன. இது பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

    மோரைன் அல்லது பனிக்கட்டி போன்ற இயற்கை அணைகள் உடைவதால் பனிப்பாறை ஏரிகள் அதிக அளவு உருகும் நீரை வெளியிடும் போது வெள்ளம் ஏற்படுகிறது. இதன் விளைவாக கீழ்நோக்கி திடீர் மற்றும் கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது.

    கடந்த 1984-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான இந்திய இமயமலை ஆற்றுப்படுகைகளின் நீர்ப்பிடிப்புகளை உள்ளடக்கிய நீண்ட கால செயற்கைக்கோள் படங்கள் பனிப்பாறை ஏரிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. 2016-17 ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 10 ஹெக்டேருக்கும் அதிகமான 2,431 ஏரிகளில், 89 சதவீதம் அதாவது 676 பனிப்பாறை ஏரிகள் 1984-ம் ஆண்டில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்துள்ளன.

    கடந்த 38 ஆண்டுகளில் இரு மடங்கு வேகத்தில் பனிப்பாறைகள் உருகுவதால், ஏரிகள் சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல், பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தின் அபாயமும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×