search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கி டாக்கி"

    • நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன.
    • ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    லெபனானில் கடந்த மாதம் 17-ந் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. அதற்கு அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த 2 சம்பவங்களிலும் 37 பேர் பலியாகினர்.

    இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடைவிதித்துள்ளது.

    இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துபையிலிருந்து அல்லது துபை வழியாக செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 35-ஐ கடந்துள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

    பெய்ரூட்:

    லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இதற்கிடையே, வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 35-ஐ கடந்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் சதி இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பயணிகள் தங்களுடனோ, தாங்கள் கொண்டு வரும் பைகளுடனோ பேஜர், வாக்கி டாக்கி ஆகியவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படாது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    லெபனான் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிவுறுத்தலால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் பயப்படும் நிலை உள்ளது.
    • சோலார் தகடுகளும் வெடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.

    பெய்ரூட்:

    இஸ்ரேல் மீது அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே லெபனானில் நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்து சிதறியது. ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள்.

    2800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட பேஜர்களில் உள்ள பேட்டரியில் வெடிமருந்தை கலந்து இஸ்ரேல் வெடிக்க வைத்ததாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்தது.

    இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியது.


    பேஜர் வெடித்து சிதறியதில் பலியான ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 3 பேர் மற்றும் ஒரு குழந்தையின் உடல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வைத்திருந்த வாக்கி-டாக்கிகள் வெடித்தது.

    அதேபோல் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியது. இதில் பலர் காயம் அடைந்து கீழே விழுந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

    வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. 450-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வீடுகளில் இருந்த சோலார் தகடுகளும் வெடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் லெபனான் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் பயப்படும் நிலை உள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறும்போது, நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்து உள்ளோம். அதற்கு எங்களிடமிருந்து தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை என்றார். இவரது இந்த கருத்து லெபனான் மீதான தாக்குதல் சம்பந்தமானதா என்பது உறுதி செய்யப்பட வில்லை.

    லெபனானில் நடந்த பேஜர் வெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது.

    • வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

    பெய்ரூட்:

    லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

    இதில் 9 பேர் உயிரிழந்தனர். 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

    இதற்கிடையே, லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும், வீடுகளில் இருந்த சோலார் பேனல்கள் உள்பட சில மின் சாதனங்களும் வெடித்ததாக தகவல்கள் வெளியாகின.

    இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் சதி இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது. இதனால் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் என தெரிகிறது.

    • இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது.
    • இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    லெபனானில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நேற்றைய தினம் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் 9 பேர் உயிரெலந்த நிலையில் 3000 க்கும் மேற்பட்டோர் வரை படுயாகம் அடைந்தனர். லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது.

    இந்நிலையில் இன்று [செப்டம்பர் 18] லெபனான் தெற்கு பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லாவிரின் தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    • வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
    • தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள சாலைமறைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தவக்கண்ணன். டிப்ளமோ என்ஜினீயரான இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.

    கடந்த 2020 மார்ச் 20-ந்தேதி பாஸ்போர்ட் விசாரணைக்காக அ.முக்குளம் போலீசார் அழைத்ததன் பேரில் தவக்கண்ணன் தனது நண்பருடன் 21-ந் தேதி காலை அ.முக்குளம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு விசாரணை சரிபார்ப்பு முடிந்த நிலையில் வீடு திரும்பினார்.

    இதற்கிடையில் அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தனது போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வாக்கி-டாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டு போலீசார் குடியிருப்புக்கு திரும்பிய நிலையில் அங்கிருந்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ.மணிகண்டன் திரும்பியுள்ளார்.

    அப்போது திடீரென அவரது வாக்கி-டாக்கி காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் கடைசியாக போலீஸ் நிலையத்திற்கு பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்து விட்டு திரும்பிய தவக்கண்ணனை தொடர்பு கொண்டு தனது வாக்கி-டாக்கி காணாமல் போனதாகவும் அதனை நீ திருடியதாகவும் அது சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் பதிவாகிய சி.சி.டி.வி. பதிவுக்காட்சிகள் ஆதாரமாக இருப்பதாகவும் கூறி விசாரணைக்காக போலீஸ் வருமாறு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அழைத்துள்ளார்.

    அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு சென்ற தவக்கண்ணனை எஸ்.ஐ. உள்பட போலீசார் தாக்கியதாக கூறப்பட்டது. இதற்கிடையே தொலைந்து போனதாக கூறப்படும் வாக்கி டாக்கி கிடைத்து விட்ட நிலையிலும் தவக்கண்ணனை விடுவிக்காமல் வாக்கி-டாக்கியை திருடியதாக ஒப்புக்கொள்ள சொல்லி தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் வாக்கி-டாக்கி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அ.முக்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தவக்கண்ணன் குடிபோதையில் பொது இடத் தில் ஆபாசமாக பேசியதாகவும், அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் தவக்கண்ணனுக்கு மதுப்பழக்கம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் தவக்கண்ணன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கில் வாதிட்டனர்.

    தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரியான தவக்கண்ணனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து திருச்சுழி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அபர்ணா நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

    ×