search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச கருத்து"

    • இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • ஆபாசமான கருத்துகள் தெரிவித்த விவகாரத்தில் ஹரிஹரனை போலீசார் கைது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் செயல்படும் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த கட்சியின் தலைவர் ஹரிஹரன்.

    இவர் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் வடகரா தொகுதியில் இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரை தொடர்புபடுத்தி ஆபாசமான கருத்துக்களை தெரி வித்தார். அவரது அந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஹரிஹரன் மீது 509, 153 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தனக்கு எதிராக கண்ட னங்கள் அதிகமானதையடுத்து ஹரிஹரன், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட்டார். இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஹரிஹரனின் வீட்டின் மீது கடந்த 12-ந்தேதி மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.

    அவை வீட்டின் சுற்றுச்சுவரில் விழுந்து வெடித்தன. இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குபபதிந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்நிலையில் முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சுவாரியர் பற்றி ஆபாசமான கருத்துகள் தெரிவித்த விவகாரத்தில் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு போலீஸ் நிலைய ஜாமீனில் ஹரிஹரன் விடுவிக்கப்பட்டார்.

    ஜாமீனில் வெளியே வந்த ஹரிஹரன் கூறும்போது, 'கேரளாவில் நிறையபேர் தங்களது பேச்சில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் மீது வழக்கு பதியப்படுவதில்லை' என்றார்.

    • பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது.
    • தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த மாதம் 29-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்நிலையில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரின் மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்

    • இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள், ஹரிஹரனின் வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர்.
    • வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் வந்து சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்தமாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. வடகரை தொகுதியில் கேரள மாநில சுகாதாரத்துறை முன்னாள் மந்திரி சைலஜா இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டார்.

    அவருடன் அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரபுல் கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் ஷாபி பரம்பில் என மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது சமூகவலைதளங்களில் சைலஜாவின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ வெளியானது.

    அதனை ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் வெளியிட்டது என்று இடதுசாரி ஜனநாயக முன்னணி குற்றம் சாட்டியது. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அந்த கட்சியே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனநாயக முன்னணி கருத்து தெரிவித்தது.

    இதற்கிடையே மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தங்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் வடகராவில் கூட்டம் நடத்தப்பட்டது.

    அந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஹரிஹரன், முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சுவாரியர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார்.

    கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த கூட்டத்தில் ஹரிஹரன் பேசிய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரது பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் முன்னாள் மந்திரி சைலஜா பற்றி ஆபாசமாக பேசிய ஹரிஹரன் மீது பெண்களை அவமானப்படுத்துதல் (ஐபிசி 509), பாலியல் துன்புறுத்தல் (ஐபிசி 354 ஏ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள மாநில காவல்துறை தலைவரிடம் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு மாநில செயலாளர் சனோஜ் புகார் அளித்தார்.

    மேலும் கோழிக்கோடு காவல் கண்காணிப்பாளரிடம், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு வடகரா தொகுதி செயலாளர் விகேஷ் என்பவரும் புகார் கூறியிருக்கிறார். அவர்களது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஹரிஹரனின் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் தனது முகநூல் பக்கத்தில் அவர் வருத்தம் தெரிரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் 'வடகரையில் நான் பேசிய உரையில் தகாத கருத்தை தெரிவித்ததாக நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். அந்த கருத்தை தெரிவித்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஹரிஹரனின் வீட்டில் மர்ம நபர்கள் நேற்று இரவு வெடிகுண்டுகளை வீசினர். இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள், ஹரிஹரனின் வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர். ஆனால் அந்த குண்டுகள் வீட்டின் சுற்றுச்சுவரில் விழுந்து வெடித்தன.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் வந்து சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.

    முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சு வாரியர் பற்றி ஆபாசமான கருத்துக்களை தெரிவித்த நிலையில, புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி தலைவரின் வீட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது
    • தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

    கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்கள்தானா? என நீதிபதி ஜெயசந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பு, "ஆம்" என்று பதில் அளித்தது.

    இதனை தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ×