search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகேஷ்"

    • முகேஷ் மீதான குற்றச்சாட்டை பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும்.
    • பொய்யான குற்றச்சாட்டுகளை வேறுபடுத்துவது கடினமாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.

    இதையடுத்து பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது நடிகைகள் கூறிவரும் பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாளம் மட்டுமின்றி அனைத்து திரையுலகையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரபல நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு கோர்ட்டு முன் ஜாமீன் வழங்கி இருக்கிறது.


    இந்நிலையில் முகேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அவரது முன்னாள் மனைவியான மெத்தில் தேவிகா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    முகேஷ் மீதான குற்றச்சாட்டை பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும். அது உண்மை என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள நோக்கத்தை சந்தேகிக்கிறேன்.

    நான் முகேசுடனான உறவை முறித்துக் கொண்டாலும், நாங்கள் நல்ல நண்பர்களாக தொடர்கிறோம். எங்களுக்குள் பகையை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு மனைவியாக அவருடன் நான் இனி உறவை தொடர விரும்பவில்லை.

    ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதுடன், உண்மையான குற்றச்சாட்டுகளில் இருந்து பொய்யான குற்றச்சாட்டுகளை வேறுபடுத்துவது கடினமான பணியாக உள்ளது. பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் என்று யாரையும் குற்றம் சாட்டுவது ஒரு புதிய இயல்பான ஒன்றாகிவிட்டது.

    இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களின் பொருத்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றல்ல.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பலரின் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • தன் மீதான பாலியல் வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று நடிகர் முகேஷ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

    அவர்கள் மலையாள திரையுலக நடிகைகள் மற்று பெண் கலைஞர்கள் பலரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்தனர். அந்த அறிக்கை 4 ஆண்டுகளுக்கு பிறகு கேரள அரசு தற்போது வெளியிட்டது. அதில் மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    விசாரணை அறிக்கை வெளியான நிலையில், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக புகார் தெரிவித்தனர். அவர்கள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது நேரடியாக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது. அந்த குழுவினர் புகார் கூறிய நடிகைகளிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றது.

    அதன் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., சித்திக், மணியன் பிள்ளை ராஜூ, ஜெயசூர்யா, இடைவேள பாபு, பாபுராஜ், இயக்குனர் ரஞ்சித், காங்கிரஸ் நிர்வாகி வக்கீல் வி.எஸ். சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் மீது கேரளாவில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன.

    பலரின் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது. மலையாள சினிமா துறையில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் முறைகேடு தொடர்பான புகார்கள் மீது மொத்தம் 17 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

    வழக்கு பதியப்பட்டுள்ள நடிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் கேரள போலீசார் ஈடுபட்டுள்ளனர். அறத்கான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆதாரங்களை சேகரிப்பதற்காக கொச்சியில் உள்ள அம்மா அலுவலகம், கத்திரிக்கடவில் உள்ள ஓட்டல், போர்ட் கொச்சியில் உள்ள ஓட்டல் உள்பட பல இடங்களில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். அதில் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் சில ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது.

    இந்த சூழலில் தங்களின் மீதான பாலியல் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திக்க புகார் கூறப்பட்டிருக்கும் நடிகர்கள் உள்ளிட்டவர்கள் தயாராகினர். தன் மீதான பாலியல் வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று நடிகர் முகேஷ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த கோர்ட்டு, அதன் மீதான மறு விசாரணை 2-ந்தேதி (அதாவது இன்று) நடக்கும் எனவும், அதுவரை அவரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் நடிகர் முகேசை 5 நாட்களுக்கு கைது செய்ய முடியாக நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் நடிகர் முகேசின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா? என்பது தெரியவரும். அதேபோல் காங்கிரஸ் பிரமுகர் வி.எஸ். சந்திரசேகரனின் முன்ஜாமீன் மனுவும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

    இவர்கள் இருவருக்கும் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்குமா? அல்லது அவர்களது மனுவை தள்ளுபடி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. நடிகர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் கோர்ட்டு உத்தரவை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விசாரணை குழு முடிவு செய்திருக்கிறது.

    • நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, எடவேல பாபு மற்றும் டைரக்டர் ரஞ்சித் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
    • நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடிகை பலாத்காரம் தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாகவும், மலையாள பட உலகில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு முடிவு செய்தது.

    இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தீவிர விசாரணை நடத்தி 2019-ம் ஆண்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. 233 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.

    இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் பயனாக அறிக்கையின் சில தகவல்கள் வெளியானது. அதில் மலையாள பட உலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பது உறுதியானது. இந்த அறிக்கை வெளியானதையடுத்து, மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டனர். கேரள திரைப்பட அகாடமி இயக்குநர் ரஞ்சித் மீது மேற்கு வங்காள நடிகை ஸ்ரீலேகா பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார். தொடர்ந்து நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவேல பாபு, சுதீஷ், டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டன.

    இந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த சூழலில் பாலியல் புகாரில் சிக்கிய சித்திக், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், டைரக்டர் ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி இயக்குநர் பதவியில் இருந்தும் விலகினர்.

    இதற்கிடையில் பாலியல் புகார்கள் தொடர்பாக டைரக்டர்கள், நடிகர்கள் மீது போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, எடவேல பாபு மற்றும் டைரக்டர் ரஞ்சித் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர்களை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்து பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர்கள் தங்களின் மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் புகார்களை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் வழக்கில் தொடர்புடைய நடிகர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நடிகர் முகேஷ் கொச்சி மாரட் பகுதியில் உள்ள வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் சோதனை செய்து சாட்சியங்களை சேகரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஏற்கனவே வீட்டு சாவியை ஒப்படைக்க நடிகர் முகேசுக்கு தகவல் கொடுத்ததாகவும் ஆனால் அவர் சாவியை கொடுத்துச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு உள்ளார்? என்ற விவரமும் தெரியவில்லை. இதனால் போலீசார் வீட்டில் சோதனை நடத்த முடியவில்லை.

    இதற்கிடையில் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. ஆனால் அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. இருப்பினும் விசாரணையின் போது முகேஷ் எம்.எல்.ஏ. எந்த பலனும் பெறக்கூடாது என அவர் தெரிவித்து உள்ளார்.

    • நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • அவர் நள்ளிரவில் குடிபோதையில் திரும்பியபோது, ஏன் தாமதமாக வந்தீர்கள் என்று நான் கேட்டேன்.

    பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்பட உலகம் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு, இயக்குனர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பாலியல் புகார் குறித்து நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வுமான நடிகர் முகேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்நிலையில் நடிகர் முகேஷ் பற்றி முன்னாள் மனைவி நடிகை சரிதா பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

    நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

    முகேசுடன் சேர்ந்து வாழ்ந்தபோது அனுபவித்த கொடுமைகளை நடிகை சரிதா பகிர்ந்துள்ளார்.

    நான் கர்ப்பிணியாக இருந்தபோது சண்டை போட்டு என்னை வயிற்றில் அவர் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அப்போது ஒரு நல்ல நடிகை என்று அவர் கூறினார்.

    9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஒன்றாக இரவு உணவிற்கு சென்றோம். திரும்பி வரும்போது, நான் காரில் ஏற முயன்றபோது, அவர் என்னை ஏமாற்றிக்கொண்டே காரை முன்னும் பின்னுமாக எடுத்துச் சென்றார்.

    காரின் பின்னால் ஓடும்போது நான் விழுந்தேன். கீழே உட்கார்ந்து அழுது விட்டேன்.

    ஒருமுறை, அவர் நள்ளிரவில் குடிபோதையில் திரும்பியபோது, ஏன் தாமதமாக வந்தீர்கள் என்று நான் கேட்டேன்.

    அவர் என்னை முடியை பிடித்து இழுத்து, தரையில் இழுத்து சென்று அடித்தார்," என்று அவர் கூறினார்.

    அதன்பின்னர் அவர் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.

    பின்னர் ஒரு நாள் முகேஷின் தந்தை என்னை பார்க்க வீட்டுக்கு வந்தார். அவர் என் கையை பிடித்து முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை என கூறி அழுததோடு, அவரைப்பற்றி யாரிடமும் வெளியே சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கினார். இதனால் அவர் உயிருடன் இருந்தவரை அதை வெளியில் சொல்லவில்லை" என சரிதா கூறி இருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் சித்திக் மீது புகார் கூறிய நடிகையிடம் திருவனந்தபுரத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது.
    • பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    அதில் மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    அவர்கள் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர். அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது.

    அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர். திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், கொல்லம் நகரங்களுக்கு சிறப்பு விசாரணை குழுவினர் நேரில் சென்று நடிகைகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

    நடிகர் சித்திக் மீது புகார் கூறிய நடிகையிடம் திருவனந்தபுரத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது. நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறிய 2 நடிகைகளிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலங்களில் அவர்கள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    ஒரு நடிகை அளித்த வாக்குமூலத்தில், "என்னை பிரபல நடிகர் கழிவறைக்குள் தள்ளி பாலியல் துன்புறுத்தல் செய்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்பு விசாரணை குழு ஈடுபட்டு வருகிறது.

    பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் கள் மீது மேலும் பல நடிகை கள் புகார் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சித்திக் மீது 376 மற்றும் 506 சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    கேரளாவில் இரண்டாவது முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை நேற்று 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்நிலையில் பாலியல் புகார் குறித்து நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வுமான நடிகர் முகேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் அளித்துள்ளார்.

    நடிகைகள் தன் மீது பொய் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதோடு தன்னை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நடிகை தன்னை பணம் கேட்டு மிரட்டியதற்கான வாட்ஸ் அப் பதிவுகள் உள்ளதாக கேரள முதல்வரிடம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    • வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.
    • எம்.எல்.ஏ.க்கள், மேல்சபை எம்.பி.க்கள் பலர் களம் இறங்கி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பல தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள், மேல்சபை எம்.பி.க்கள் உள்பட பலர் களம் இறங்கி உள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் எந்த பதவியை ராஜினாமா செய்கிறார்களோ அதற்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

    கேரள மாநிலத்தில் கடந்த 26-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அங்கு 5 இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் மட்டுமின்றி உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    கடந்த முறை வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற அவர், இந்த முறையும் அங்கு வெற்றியை பெறுவார் என தெரிகிறது. ஆனால் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில் அவர் வெற்றி பெற்றால், வயநாடு தொகுதியில் பெற்ற வெற்றியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இதனால் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

    இதேபோல், கேரள மாநிலத்தில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் ராதாகிருஷ்ணன், முகேஷ், ஷபி பரம்பில், கே.கே.சைலஜா மற்றும் வி.ஜாய் ஆகியோரும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் உள்ளனர். வடகரை தொகுதியில் பாலக்காடு எம்.எல்.ஏ. ஷபி, மட்டனூர் எம்.எல்.ஏ. சைலஜா போட்டியிடுகின்றனர்.

    கொல்லம் தொகுதியில் கொல்லம் எம்.எல்.ஏ. முகேஷ், அட்டிங்கல் தொகுதியில் வர்கலா எம்.எல்.ஏ. ஜாய், ஆலத்தூர் தொகுதியில் ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்யும் போது அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

    ×