என் மலர்
நீங்கள் தேடியது "போலி வாக்காளர் அட்டை"
- வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து பேசினார்.
- இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற மற்றும் தோல்வியுற்ற நிறுவனம் என்று மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
இன்று டெல்லியில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கபில் சிபல் பல்வேறு விசுஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி காட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு கபில் சிபல் பதில் கூறினார்.
அவர் பேசியதாவது, தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற அமைப்பு. தேர்தல் ஆணையம் அதன் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆணையம் இன்று ஒரு தோல்வியடைந்த நிறுவனமாக உள்ளது. இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்தப் பிரச்சினையை நாம் எவ்வளவு விரைவில் கையாள்கிறோமோ, அவ்வளவுக்கு ஜனநாயகம் உயிர்வாழும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் ஒருபுறம் இருக்க , தேர்தல் செயல்முறை ஊழல் நிறைந்தது என்பதைக் காட்டும் சில கடுமையான பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் ஒன்றாக இணைந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்
இதற்கிடையே தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் நிலுவையில் உள்ள பூத் அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்க 4,000க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 59). இவருக்கு ரூ.50லட்சம் மதிப்பிலான 38 சென்ட் நிலம் பண்ருட்டி அருகே உள்ள மனம்தவிழ்ந்த புத்தூர் கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில் கலியமூர்த்திக்கு சொந்தமான 38 சென்ட் நிலம், அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் திருசங்குவின் பெயரில் மாறியதாக தகவல் வந்தது. இதையடுத்து கலியமூர்த்தி, தனது வீட்டில் இருந்து நிலப் பத்திரத்தை தேடிய போது அதனை காணவில்லை. மேலும், வாக்காளர் அடையாள அட்டையையும் காணவில்லை.
இதனைத் தொடர்ந்து கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருசங்கு, கலியமூர்த்தியை அசிங்கமாக திட்டி விரட்டியடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர், கலியமூர்த்தியை மீட்டு அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலியமூர்த்தி, இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகாரளித்தார்.
விசாரணையில், கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தின் பத்திரத்தையும், வாக்காளர் அடையாள அட்டையையும், திருசங்கு திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கலியமூர்த்தியின் வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த அவரது போட்டோவுக்கு பதிலாக, பொண்ணாங்குப்பத்தை சேர்ந்த மூர்த்தியின் போட்டோவை வைத்து போலியாக வாக்காளர் அடையாள அட்டையை திருசங்கு தயார் செய்துள்ளார்.
போலியாக தயாரிக்கப்பட்ட ஆதாரத்தை வைத்து கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தை மூர்த்தியை வைத்து புதுப்பேட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் திருசங்கு கிரயம் பெற்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருசங்கு, அவருக்கு உடந்தையாக இருந்த மூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், புதுப்பேட்டை பத்திர பதிவு அலுவலர் பாலாஜி, பத்திர எழுத்தர் சீனிவாசன் ஆகியோர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.