என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்மிக வழிபாடு"
- சிவபெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
- பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.
வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்க வேண்டும்.
ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.
சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும்.
சிவபெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.
சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
கோவில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்கு சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.
சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.
- சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதலைக் குறிக்கும்.
- லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும்.
இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.
இதைத்தவிர சிவ புராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்க புராணம், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும். "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும்.
மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
மகாசிவராத்திரி வழி பாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதலைக் குறிக்கும்.
2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோவிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.
- ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.
- நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
மாதுளை - அரச பதவி கொடுக்கும்
நெய் - மோட்சத்தைக் கொடுக்கும்
அன்னம் - வயிற்று நோயை நீக்கும்
நெல்லிக்கனி - பித்தம் நீக்கும்
பழ ரசங்கள் - வறட்சியைப் போக்கும்
நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும்.
ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல உண்டு.
சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற்படும்.
நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.
சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது.
வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும்.
தேன், வியாதிகளை நீக்கும், கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.
- சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.
- எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.
சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.
சுத்தமானப பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.
சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.
எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.
சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.
இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.
பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங் களில் வெற்றியும் கிடைக்கும்.
தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.
கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.
மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.
திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.
பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.
அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.
அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.
தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.
சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.
ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.
ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐ-ஸ்வர்யங்களும் கிடைக்கும்.
தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொவர்க்க போகம் கிடைக்கும்.
- அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும்.
- பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
1. சிவபெருமானைத் தீர்த்த வாரி செய்ய வேண்டும்.
2. மணம் மிகுந்த மலரை சிவபெருமானின் உச்சி முதல் கால் வரைத் தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.
4. சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.
5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.
6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
7. எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.
8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.
9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.
இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.
- விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.
- அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.
கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும்.
கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும்.
வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.
அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.
சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவரக்கும் இடையே போகக்கூடாது.
கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.
வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.
அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும்.
கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும்.
- தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.
- சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர்.
சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.
அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும்.
பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.
மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும்.
சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.
சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும்.
நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது.
மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பாலகும்.
தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர்.
அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.
சுத்தநீர் அபிஷேகம் பத்து வகை பாவங்களையும், பால் அபிஷேகம் நூறு பாவங்களையும், தயிர் ஆயிரம் பாவங்களையும், நெல் பத்தாயிரம் பாவங்களையும், இளநீர் ஒரு லட்சம் கோடி பாவங்களையும், சந்தனம் சகல பாவங்களையும் அகற்றும் என்றார் ஆதிசங்கரர்.
தைலம் பக்தியையும், பழங்கள் மக்கள் வசீகரத்தையும், பஞ்சாமிர்தம் ஆயுளையும், பால் நல்ல குணத்தையும், தயிர் உடல் நலத்தையும், தேன் இசைத் திறனையும், இளநீர் குழந்தைப் பேறையும், விபூதி நல்லறிவையும், சந்தனம் சுகவாழ்வையும், பஞ்சகவ்யம் கல்வித் திறனையும், பன்னீர் புகழையும் தரும் என தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன.
இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம், மலர், வில்வமாலை, சந்தனம் சாற்றி சிவார்ச்சனை செய்யும் போது ருத்ராட்சம் அணிந்து விபூதி தரித்து ஓம் நமச்சிவாய மந்திரத்துடன் சிவ பதிகங்களை ஓதி நலன்களை பல பெற வேண்டும்.
மகா சிவராத்திரி அன்று இரவு கண் விழிப்பதாகக் கூறியபடி இளைய தலைமுறையினர் திரைப் படங்களைக் காணச் செல்கின்றனர்.
அந்த நாளில் முடிந்த அளவு ஐம்புலன்களையும் அடக்கி சிவ சிந்தனையில் ஈடுபட்டால் உங்கள் ஆயுளும், ஆரோக்கியமும் கூடும்.
வாழ்நாள் இனிதாகும். ஓம் நம சிவாய.
- எப்பொருளில் லிங்கம் செய்தாலும் பூஜைக்கு உகந்ததாகும் என விஷ்ணு தர்மோத்தரம் சொல்கிறது.
- சின்ன பூஜையால் மன திருப்தி அடைந்து பேரருள் தருபவர் ஈசன்
எப்பொருளில் லிங்கம் செய்தாலும் பூஜைக்கு உகந்ததாகும் என விஷ்ணு தர்மோத்தரம் சொல்கிறது.
பிருத்வி எனப்படும் மண்ணால் செய்த சிவலிங்கம் செய்து ஓராண்டு காலம் சிவமூலத்தால் வில்வம் கொண்டு வந்து வழிபடுபவன், நீண்ட ஆயுள், பலம், செல்வம், செல்வாக்கு பெறுவான், நன் மக்கட் பேறுடன் சுகமாக வாழ்வான், கோருகின்ற வரங்களும் பெறுவான் என்கிறது தைத்தரிய கோசம் என்ற நூல்.
சின்ன பூஜையால் மன திருப்தி அடைந்து பேரருள் தருபவர் ஈசன் என்பதால் வேத நூல்கள் இவரை "ஆக தோஷி" என்று போற்று கின்றன.
மகா சிவராத்திரி நாளில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பகலில் கனி, கிழங்கு, பால் உண்டு இரவில் கண் விழித்து சுத்த உபவாசம் கடைப்பிடித்து நான்கு காலம் சிவாலய தரிசனம் செய்து சிவபுராணம், பஞ்சபுராணம் படித்து சிவதாம் ஜெபம் செய்து, சிவலிங்க திருமேனியை வில்வதளங்களால் அர்ச்சனை செய்து முறையாக பக்தியுடன் வழிபடல் வேண்டும்.
சிவபெருமானை பூஜையால் தான் மகிழச் செய்ய முடியும். பெருமானை விரதம் செய்து தான் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று பல தீபிகா நூல் உரைத்துள்ளது.
பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று.
- சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான்.
- எளிய முறையில் பலன் தரும் கணபதிபோல அவர் தகப்பனாரும் அப்படியே தருவார்.
சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான்.
எளிய முறையில் பலன் தரும் கணபதிபோல அவர் தகப்பனாரும் அப்படியே தருவார்.
ஒரு சமயம், பிரளயம் முடிந்து சிருஷ்டி தொடங்கும் காலத்தில் தேவர்கள் கயிலையை அடைந்து தாங்கள் எப்போதும் சக்தியோடு விளங்கும் இடத்தைத் தெரிவிக்கும்படி வேண்டினர்.
அதற்கு ஈசன், தேவர் பெருமக்களே! நான் எப்போதும் உங்களுக்காக லிங்க வடிவில் இருக்கிறேன்.
அதில் பிரதிஷ்டை, மந்திர உருவேற்றம் பூஜைகள் எதுவும் இல்லாமல் இருப்பினும் பக்தர்களைக் காப்பேன் என்று பதில் அளித்தார்.
சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வர ரீதியாக அமைகிறது.
வராக புராணம், பதுமராஜம், வைரம், மரகதம் முதலிய ரத்தினங்களான லிங்க பூஜை நல்ல பலனைத் தரும் என்றும், பவிஷ்ய புராணம், மணி, விபூதி, பசுஞ்சாணம், மாவு, தாமிரம், வெண்கலம் இவற்றில் செய்த லிங்க ஆராதனை சிறந்தது என்றும், படிக லிங்கம், செல்வம் கெடுத்து விருப்பங்களை அருளும் என்றும் பவிஷ்ய புராணம் கூறுவதை அறிதல் வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்