என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொலைத்தொடர்பு துறை"

    • 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தெலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

    எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை நடத்தினர்.

    இதில் 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த துறையினர் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த செல்போன்கள் மூலம் 20 லட்சம் செல்போன் எண்களை பயன்படுத்தி மேற்படி குற்றங்கள் மற்றும் மோசடி அரங்கேறியது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்கள் மற்றும் செல்போன்கள் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்தவை ஆகும்.

    இதைத்தொடர்ந்து இந்த 28,200 செல்போன்களை உடனடியாக முடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

    மேலும் மேற்படி 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    பொது பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்யும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை மற்றும் மாநில போலீசார் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    குறிப்பாக மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிலுவையில் உள்ள MTNL நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.31,944.51 கோடி ஆகும்.
    • MTNL இன் செயல்பாடுகள் முறையாக BSNL உடன் 2025 ஜனவரி 1 முதல் இணைக்கப்பட்டது.

    மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்றும் மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் (MTNL) இன் சொத்துக்களை விற்று நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    MTNL இன் செயல்பாடுகள் முறையாக BSNL உடன் 2025 ஜனவரி 1 முதல் இணைக்கப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

    MTNL இன் கடன் நிலைமை மிக மோசமாக உள்ளது. 2024 ஆகஸ்ட் 30, நிலவரப்படி, நிலுவையில் உள்ள நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.31,944.51 கோடி ஆகும். இந்தியன் வங்கியில் ரூ. 1,000 கோடி கடனை MTNL திருப்பி செலுத்தவேண்டும் மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூகோ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ. 5,726.29 கடன் தவணைகளையும் கட்ட வேண்டும்.

    ஆகவே BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து ரூ.16,000 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் திட்டம் போட்டுள்ளது.

    இத்திட்டத்திற்கு தேசிய நில நாணய மயமாக்கல் கழகம் மற்றும் மத்திய பொது நிறுவனங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • LSA (உரிமம் பெற்ற சேவை பகுதி) அடிப்படையிலான திட்டத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
    • முதலில் '0' என்ற எண், அடுத்து SDCA குறியீடு எண், மூன்றாவதாக சந்தாதாரர் எண் ஆகியவற்றை முறையே உள்ளீடு செய்ய வேண்டும்.

    தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், லேண்ட் லைன் டெலிபோன்களில் STD CODE பயன்பாட்டை நிறுத்த அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதற்கு பதிலாக செல்போன்களை போலவே 10 டிஜிட் எண் அமைப்பை லேண்ட் லைனிலும் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய SDCA- அடிப்படையிலான (STD எண் அடிப்படையிலான) எண் திட்டத்திலிருந்து LSA (உரிமம் பெற்ற சேவை பகுதி) அடிப்படையிலான 10-டிஜிட் CLOSED எண் திட்டத்திற்கு மாறும் டிராய்-இன் இந்த பரிந்துரை பரிசீலனையில் உள்ளது.

    இந்த முறை மூலம் லோக்கல் கால் உட்பட முதலில் '0' என்ற எண், அடுத்து SDCA குறியீடு எண், மூன்றாவதாக சந்தாதாரர் எண் ஆகியவற்றை முறையே உள்ளீடு செய்து போன் செய்ய வேண்டும்

    ஒரு தொலைத்தொடர்பு வட்டம் அல்லது உரிமம் பெற்ற சேவைப் பகுதி (LSA) பொதுவாக மாநில அளவிலான பகுதி அல்லது பெரிய பெருநகரப் பகுதியைக் குறிக்கிறது. LSA- அடிப்படையிலான 10 டிஜிட் எண் முறை இடையூறு மற்றும் தாமதத்தை குறைத்து நீண்டகால சேவையை வழங்க உதவும் என்று டிராய் தெரிவித்துள்ளது.

    சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய தொலைபேசி எண்களில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு ஆறு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்.

    ×