என் மலர்
நீங்கள் தேடியது "சிங்கப்பெருமாள் கோவில்"
- 18-ந்தேதி காலை சூர்ணா பிஷேகம், மாலையில் யானை வாகனத்திலும் நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார்.
- 20-ந்தேதி பல்லக்கு, குதிரை வாகனத்தில் எழுந்தருளல்,21-ந்தேதி தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற உள்ளது.
சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால குடைவரை கோவிலான இங்கு நரசிம்ம பெருமாள் முக்கண்ணோடு அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் இந்த கோவிலில் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வைகாசி விழா வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. விழா தொடர்ந்து 27-ந்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு 14-ந்தேதி காலை சூரியபிரபை வாகனம், மாலை ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.
15-ந்தேதி கருடசேவை விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாலை ஹனுமந்த வாகனத்திலும், 16-ந் தேதி காலை சேஷவா கனத்திலும் எழுந்தருள்கிறார்.
பின்னர் ஏகாந்த சேவை, திருமஞ்சனமும், மாலையில் சந்திரபிரபை வாகன வீதி உலா நடக்கிறது. 17-ந்தேதி நாச்சியார் திருக்கோலமும், மாலை யாளி வாகனமும், 18-ந்தேதி காலை சூர்ணா பிஷேகம், மாலையில் யானை வாகனத்திலும் நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19-ந்தேதி காலை நடக்கிறது. சிறப்பு அலங்காரம் மற்றும் வாண வேடிக்கையுடன் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. பின்னர் அன்று மாலை விசேஷ திருமஞ்சனம், தேர்முட்டி மண்டகப்படி, இரவு அனுமார் சன்னதி வரை பெருமாள் எழுந்தருளல் நடைபெறுகிறது.
20-ந்தேதி பல்லக்கு, குதிரை வாகனத்தில் எழுந்தருளல்,21-ந்தேதி தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற உள்ளது. 22-ந்தேதி காலை துவாத சாராதனம் திருமஞ்சனம், மாலையில் தங்க தோளுக்கினியான் உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தொடர்ந்து மாலையில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
- ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வழக்கம்.
ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். இது குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு பெரிய சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.
இந்நிலையில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார ரெயில் சேவை இயங்காது. சென்னை கடற்கரையில் இருந்து நண்பகல் 12.40- க்கு புறப்படும் மின்சார ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்களது பயணத்தை திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
- பயணிகள் பாதுகாப்பிற்காக தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒருநாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
பயணிகள் பாதுகாப்பிற்காகவும், ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வண்டலூர்:
உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சரவணன் (வயது 20). நேற்று இரவு சரவணன் நண்பர்களுடன் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் மதுகுடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சரணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே உடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்ததும் மறைமலை நகர் போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்த போது பரபரப்பு தகவல் கிடைத்தது. சரவணன் மற்றொரு நண்பருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மதுகுடித்த போது சரவணனை உடன் இருந்த நண்பர்கள் கேட்டு உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.